ஒருநாள் பெய்த மழையில் மூழ்கிய கொழும்பு!

Report Print Shalini in காலநிலை

கொழும்பில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதை காணக்கூடியதாக உள்ளது.

காலையிலிருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு பிற்பகல் வேளையில் கடுமையான மழை பெய்துள்ளது.

இந்த மழையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் வீதிகளில் மழைநீர் தேங்கிநிற்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

கடும் காற்றுடன் மழை பெய்வதால் தமது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

இன்று ஒரு நாள் பெய்த மழைக்கே கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யுமானால் கொழும்பின் நிலை என்னவாகும் என மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments