மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

Report Print Gokulan Gokulan in காலநிலை

மேல் மாகாணம் உட்பட பல மாகாணங்களில் நாளை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில்,

நாட்டின் தென்மேற்கு பகுதி மற்றும் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும்.

மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும்.

இதேவேளை கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.