இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

Report Print Sujitha Sri in காலநிலை

இலங்கையின் பல இடங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூற காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் ஏழு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களுக்கான அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், குடியிருப்புக்களில் அல்லது கட்டடங்களின் சிதைவுகள் அல்லது புதிய நீர் ஊற்றுக்கள் ஏற்படுமாயின் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


You may like this video