நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Report Print Jeslin Jeslin in காலநிலை

நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலனறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் இடம்பெறக்கூடும் என்பதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.