மகிழ்ச்சியில் குடாநாட்டு மக்கள்

Report Print Nivetha in காலநிலை

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவி வந்த நிலையில் தற்போது யாழின் பல பாகங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் பல பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவியதால் மக்களும், விவசாயிகளும் கடும் இடர்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களின் பின்னர் பொழிந்த மழை காரணமாக குடாநாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.