எச்சரிக்கையாக இருங்கள்! வளி மண்டலவியல் திணைக்களம்

Report Print S.P. Thas S.P. Thas in காலநிலை

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று மதியத்திலிருந்து கடும் காற்றுடன் மழை பெய்க் கூடும் என்றும், எனவே மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை அல்லது புயல் காற்று வீசும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் இடம்பெறக் கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக இன்று காலை இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஏற்படுவற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன்.

எனினும், சுனாமி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு என்ற வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்ததுடன், மக்களை விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், தற்பொழுது, சீரற்ற காலநிலை ஏற்படுவது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.