யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் அடைமழை!

Report Print Vethu Vethu in காலநிலை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றை தினம் மழையுடன், பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஊடாக விசேடமாக மேல், வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களிலும் ஓரளவு கடும் காற்றினை எதிர்பார்க்க முடியும் என திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சப்ரகமுவ, மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும். மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்திலும், யாழ் மாவட்டத்திலும் மழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களிலும் ஓரளவு அடைமழையினை எதிர்பார்க்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிரதேசங்களில் மழை பெய்யும் அவதானம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிக்கும் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை பல பிரதேசங்களில் கடும் காற்றுடனான நிலைமை காணப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.