சூரியகிரகணத்தினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை அடுத்து வரும் இரு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தின் வானியலாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை பெய்யும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு அடைமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக குக்குலே கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், தாழ் நில பகுதியில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள மண் சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

advertisement