இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று! இன்றைய காலநிலை

Report Print Murali Murali in காலநிலை

நாட்டில், மழை மற்றும் மேக மூட்டத்துடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்கள் வரை தொடர்ந்து நீடிக்குமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரும்பாலான பாகங்களில் குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடமாகாணங்களிலும், அனுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில பிரதேசங்களில் மணிக்கு சுமார் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகலாமென்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பலபகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்றுவீசக்கூடும். இடிமின்னலிலிருந்து மக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.