காற்றின் வேகம் அதிகரிக்கும்! வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை

Report Print Murali Murali in காலநிலை

நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இந்நிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும், ஏனைய பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இடைக்கிடை, மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று காலை கொழும்பின் புறநகர் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக 153 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தெஹிவளையில் 15 வீடுகளும், ஹோமாகமையில் 75 வீடுகளும், பிலியந்தலையில் 5 வீடுகளும், இரத்மலானையில் 20 வீடுகளும், மஹரகமையில் 15 வீடுகளும், கடுவலை ஒரு வீடும், கெஸ்பேவையில் 15 வீடுகளும், மொரட்டுவையில் 7 வீடுகளும் இவ்வாறு சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.