கால் தவறி கீழே விழுந்தார் பாப்பரசர்!

Report Print Murali Murali in உலகம்

போலந்து நாட்டில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்குபற்றிய போது, பாப்பரசர் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் திரும்புகையில் அவரது கால் தடுக்கியதாக கூறப்படுகிறது.

இதன்போது, அருகில் இருந்த மதகுருமார்களின் துணையுடன் உடனே எழும்பி நின்றுள்ளார். பாப்பரசர் கால் தடுமாறி வீழ்ந்ததைக் கண்ட அவரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் பலி பீடத்துக்கு செல்ல முடியாததால் பாப்பரசர் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பாவில் அண்மைக் காலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமையால், பாப்பரசரின் போலந்து விஜயத்தில் அதிகளவு பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments