புதிய வாழ்க்கை தேடிய இலங்கை தமிழர் செக்குடியரசு சிறையில்!

Report Print Ajith Ajith in உலகம்

புதிய வாழ்க்கை ஒன்றுக்காக செக்குடியரசில் புகலிடம் கோரும் நோக்கில் கடந்த ஆண்டு இறுதியில் ப்ராக் (Prague) விமானத் தளத்தை சென்றடைந்த இலங்கை தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு செக்குடியரசில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் தாம் இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக தெரிவித்து கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து செக் குடியரசை நோக்கி சென்றுள்ளார்.

எனினும் அவர் இந்தியர் ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தமது நாட்டுக்குள் நுழைந்ததாக குற்றம் சுமத்தி செக்குடியரசின் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவருக்கு சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும், அவர் தெரிவிக்கும் கூற்றுக்கள் உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அரசியல் அடைக்கலத்துக்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Comments