ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து விஷேட கூட்டம்!

Report Print Murali Murali in உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க, இத்தாலி, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற தயாராகிக் கொண்டிருப்பதால், தங்களின் நிலையை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மாட்டியோ ரென்சி மற்றும் பிரான்ஸ்வா ஒல்லாந்த் ஆகிய தலைவர்களுக்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பொருளாதாரம், பாதுகாப்பு கொள்கை, குடியேறிகள் தொடர்பான நெருக்கடி, சிரியாவில் நடைபெறும் மோதல்கள் மற்றும் ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவு ஆகியவை குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- BBC - Tamil

advertisement

Comments