600 நாட்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய அமெரிக்காவின் மர்ம விமானம்!

Report Print Vethu Vethu in உலகம்

அமெரிக்க விமான படைக்கு சொந்தமான மர்மமான விமானம் ஒன்று 600 நாட்கள் விண்வெளி செயற்பாட்டின் பின்னர் மீண்டும் பூமிக்கு வந்துள்ளது.

X37B என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 600 நாட்களை கழித்துள்ள போதும் அதன் செயற்பாடு அல்லது எதிர்பார்ப்பு இதுவரை வெளியாகாதது சிக்கலான விடயம் என ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வரும் மே 20ஆம் திகதி அமெரிக்காவின் எட்லஸ் 5 என்ற ரொக்கட் உதவியுடன் இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கு குறைவான பிரபல்யமே படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானம் தொடர்பில் எவ்வித முக்கியமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.

விண்வெளியில் குண்டு வெடித்தல் அல்லது செயற்கைக்கோள்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் அமெரிக்கா இங்கு பரீட்சித்து பார்த்திருக்கலாம் என ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த விமானம் பூமியில் இருந்து குறைந்த தூரம் வரையிலேயே அதன் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய பூமியில் இருந்து 177 கிலோ மீற்றரில் இருந்து 800 கிலோ மீற்றர் வரை பயணித்துள்ளது.

பொதுவாக சர்வதேச விண்வெளி மையம் பூமியில் இருந்து 350 கிலோ மீற்றர் தூதரத்திலேயே உள்ளது. இந்த விமானம் விசேட பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஒன்று என நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இது எதற்காக என தகவல் வெளியிடவில்லை.

எனினும் விமானத்தின் வேகத்தை அதிகரிப்பதற்காக குறித்த ஆய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க விமான படை தெரிவித்துள்ளது.

Comments