அமெரிக்க ஜனாதிபதிக்கு வெடி குண்டு மிரட்டல்! பரபரப்படைந்த வெள்ளை மாளிகை

Report Print S.P. Thas S.P. Thas in உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் டிரம்ப்பின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றிலேயே, வெடிகுண்டு ஒன்று வெடிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை கார் டிரைவருக்கு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினம் வெள்ளை மாளிகையில் சோதனையிட்டதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த வெடி குண்டு மிரட்டலையடுத்து, வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது, மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Comments