நீண்ட கால தொடர் போராட்டம்: இஸ்லாமிய தேசத்தில் இந்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

Report Print Murali Murali in உலகம்

பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இருக்கும் இந்துக்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்துகொள்வதற்கும் மற்றும் திருமண சலுகையினை பெற்றுக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், அந்த நாட்டு ஜனாதிபதி மம்கைன் உசேன் இது குறித்த சட்டமூலத்திற்கு அனுமதியளித்துள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தானில் இந்துக்கள் திருமணத்தின் போது தமது மதச்சடங்குகளை முறைப்படி செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் நவாஸ் செரீப் தலைமையிலான அரசாங்கம் இந்து திருமண சட்டவரைபை கொண்டு வந்திருந்த நிலையில், அந்நாட்டு பாராளுமன்றிலும் அனுமதியை பெற்றிருந்தது.

இந்நிலையில், இது குறித்த சட்டமூலத்தில் பாக்கிஸ்தான் நாட்டு ஜனாதிபதி அனுமதியளித்து கையெப்பமிட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பாகிஸ்தான் நாட்டில் தமது திருமண சட்டவாக்கத்தை கோரி இந்து மக்களும், இந்து அமைப்புகளும் பல்வேறு விண்ணப்பங்களை அனுப்பியிருந்த அதேவேளை, போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், சிந்து மாகாணத்தில், இந்துக்களுக்கான தனி திருமண சட்டவாக்கம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments