ஜனதிபதிக்கு எதிராக போராட்டம்: மக்கள் மீது தாக்குதல்! கலவர பூமியான வெனிசுலா

Report Print Vino in உலகம்
advertisement

ஜனாதிபதியின் கொடுமையான ஆட்சியை கண்டித்து வெனிசுலாவில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் அந்த நாட்டில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த போராட்டம் காரணமாக வெனிசுலா இரண்டு நாட்கள் கலவர பூமியாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கடந்த 2013ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மாதுரோவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் மக்களுடன் இணைந்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதியை பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெனிசுலா தலைநகர் கராகஸ், மற்றும் முக்கியநகரான சான் கிறிஸ்டோபல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதன் போது பொலிஸார் நடத்திய தாக்குதலில் 17 வயது இளைஞர், 23 வயது பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, குறித்த போராட்டத்தில் நாளைய தினம் இன்னும் ஒரு மில்லியன் மக்கள் வரை இணைந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

advertisement

Comments