எல்லைப் பாதுகாப்பை தீவிரப்படுத்திய ரஷ்யா! போர் மூழும் அபாயம்?

Report Print Murali Murali in உலகம்

அமெரிக்கா மற்றும் வட கொரியாவிற்கு இடையிலான பனிப்போர் வலுப்பெற்றுள்ள நிலையில், ரஷ்யா தனது எல்லைப்பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, மூன்று ரயில்களில் இராணுவத்தளபாடங்களை வடகொரியாவுடனான எல்லைப்பகுதிக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எல்லைப்பகுதியில் ஹெலிகொப்டர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் போர் மூழும் பட்சத்தில் அதிகளவான அகதிகள் ரஷ்யாவிற்குள் நுழையக்கூடும் என ரஷ்யா ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வட கொரியாவில் உள்ள அணு உலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அதன் கதிர்வீச்சு தாக்குதல் ரஷ்யாவையும் பாதிக்ககூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments