தாய்லாந்து குகை, நடந்தது என்ன? சிக்கியது முதல் மீட்டது வரை (தமிழில் வீடியோ )

Report Print Thayalan Thayalan in உலகம்

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும், திடீர் மழை வெள்ளத்தால் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. பிறகு, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

இந்த மீட்புப் பணியை சிறுவர்களின் நலம் குறித்த பதற்றத்தோடும், மீட்புப் பணியின் சாகசத் தன்மை குறித்த ஆச்சரியத்தோடு உலகம் உற்று நோக்கி வந்தது. இந்த சிறுவர் கால்பந்து அணி குகையில் தொலைந்து போனது முதல், மீட்கப்பட்டது வரையிலான 17 நாள் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இங்கே..