யாழ். மாணவர் படுகொலைக்கு வேண்டும் காலம் தாழ்த்தாத நீதி......!

Report Print Thamilin Tholan in கட்டுரை
231Shares

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவி கடந்த 2015ம் ஆண்டுமேமாதம்-13 ஆம் திகதி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியிலும், மாணவர்சமூகம் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மாணவியின்படுகொலைக்கு எதிராக வட கிழக்குப் பகுதிகளில் மாணவ சமூகமும், பல்வேறுதரப்புக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களைநடாத்தியிருந்தனர். குறித்த போராட்டங்கள் ஒரு மாதங்களுக்கும் மேலாகத் தமிழர்பகுதிகளில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தன.

வித்தியா கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஒருவருடங்கள் ஐந்து மாதங்கள் கடந்த போதும் வித்தியா கொலை தொடர்பான வழக்குவிசாரணைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறித்த வழக்கு விசாரணைமுடிவின்றித் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டுச் செல்வது வித்தியாவின்குடும்பத்தினரையும், நீதியை எதிர்பார்த்திருக்கும் தமிழ் மக்களையும்விரக்தியடையச் செய்துள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் கடந்த 20ம் திகதி வியாழக்கிழமை இரவு கொக்குவில்குளப்பிட்டிப் பகுதியில் யாழ். பல்கலைக் கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகிய இரு மாணவர்களும்பொலிஸாரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் வடக்குக்கிழக்கின் மாணவர் சமூகம் மத்தியிலும், தமிழ் பேசும் மக்களின் மத்தியிலும்மிகப் பெரும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் நள்ளிரவு வேளையில்காங்கேசன்துறை வீதியூடாகச் சுன்னாகம் பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே குறித்த மாணவர்களை இலக்குவைத்துத் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இந்த இருமாணவர்களும் நெருங்கிய நண்பர்கள் என மாணவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.சுன்னாகம் கந்தரோடைப் பகுதியினைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன்(வயது-24),கிளிநொச்சி இரணைமடுப் பகுதியைச் சேர்ந்த நடராஜா கஜன்(வயது-23) ஆகிய இருமாணவர்களுமே சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சுலக்ஷனின் மீதேதுப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு காரணமாக மோட்டார்ச்சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவரும் நிலை குலைந்து குறித்த பகுதியிலுள்ளவிற்பனை நிலையமொன்றின் மதில் தூணுடன் மோதிக் கீழே விழுந்த இருவரில் சுலக்ஷன்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார்ச் சைக்கிளின் பின்புறமாகவிருந்துசென்ற மாணவனான கஜன் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சில மீற்றர் தூரம் வரைஎழுந்து சென்று துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில் பொலிஸாருக்கு எவரும்சம்பவம் தொடர்பாக அறிவிக்காத போதும் சிறிது நேரம் கழித்து அவ்விடத்திற்குப்பொலிஸார் வருகை தந்துள்ளனர்.

பொலிஸார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவனான கஜனை உடனடியாக மீட்டுயாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவத்தில் கொல்லப்பட்டமாணவனான சுலக்ஷனின் உடலையும் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சில மீற்றர்தூரம் வரை குற்றம் இடம்பெற்ற பகுதியாக அடையாளப்படுத்தியதுடன் பொலிஸாரைக்குவித்து அப் பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தினர்.

21ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான்சி. சதீஸ்தரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களைப் பார்வையிட்ட பின்நீதவானின் பணிப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ். போதனாவைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தடயங்களை ஆராய்ந்ததுடன் தொடர்ந்துபொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் தடயவியல் பரிசோதனைகளைமேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு யாழ். மாவட்டப் பிரதிப்பொலிஸ்மா அதிபரும் வருகை தந்து பார்வையிட்டார்.

சம்பவத்தை மூடி மறைக்க முற்பட்ட பொலிஸாரும் முரண்பட்ட மாணவர்களும்குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்றமாணவனான சுலக்ஷன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானமை சம்பவம்இடம்பெற்றுப் பல மணி நேரங்களின் பின்னர் தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இரு மாணவர்கள் மீதும் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைமறைக்கப்பட்டு விபத்து என்னும் அடிப்படையிலேயே சடலங்கள்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டமருத்துவ விசாரணையிலேயே சூட்டுக்காயங்கள் இனங்காணப்பட்டன.

யாழ். போதனாவைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் ஆய்வுப் பொலிஸார் ஆகியோர்இணைந்து நடாத்திய ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலமே இது உறுதிப்படுத்தப்பட்டது.அதுவரை குறித்த சம்பவம் விபத்தினாலேயே இடம்பெற்றதாக மாணவர்கள் மற்றும்பொதுமக்கள் ஆகியோர் நம்ப வைக்கப்பட்டனர்.

பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பலியான செய்தியறிந்து யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் வளாகத்தில் குவிந்த பல்கலைக்கழக மாணவர்கள் சக மாணவர்களின்மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவலியுறுத்தியதன் அடிப்படையிலேயே மரணத்திற்கான காரணம் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வைத்தியசாலை வளாகத்திற்குள் வைத்துப் பொலிஸ் அதிகாரியொருவருடன்கடுமையாக மாணவர்கள் முரண்பட்ட சம்பவமும் பதிவாகியது.

அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தபிரேத அறையை முற்றுகையிட்ட பல்கலைக் கழக மாணவர்கள் சக மாணவர்கள் எதற்காகச்சுடப்பட்டார்கள்? எனவும் சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியப்படுத்தப்படவேண்டும் எனவும் கோரிப் பிற்பகல் வரை போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்காரணமாக வைத்தியசாலை வளாகத்தில் தொடர்ச்சியான பதற்றநிலை நீடித்தது.இதனையடுத்துப் பிற்பகல்-05 மணியளவில் யாழ். பல்கலைக்கழகமாணவர்கள் சிலரை நீதிமன்றத்திற்கு அழைத்துக் கலந்துரையாடியதுடன் பின்னர்வைத்தியசாலைக்குச் சென்று கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள்,சக மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அப்போது சம்பவம்தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெறும். எனவே, மாணவர்கள் எவரும்வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள்

21ம் திகதி காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட மேற்படி பகுதியில்சில எண்ணிக்கையான பொலிஸ் குழுவினர் வருகை தந்து அவ்விடத்திலுள்ள நிலப்பகுதியில் எதையோ தேடியதை அவதானித்ததாகவும், அவ்வாறு அவர்கள் தேடியமைதுப்பாக்கித் தோட்டாக்களின் வெற்றுப் பாகங்களாகவிருக்கலாம் எனவும் சம்பவம்இடம்பெற்ற பகுதிக்கு அயலிலுள்ள மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

மேலும்குறித்த பகுதியில்நள்ளிரவு வேளையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தெரிவித்தஅவர்கள் தாம் அச்சம் காரணமாக வெளியில் வரவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

அது மாத்திரமன்றி குறித்த மாணவர்கள் இருவரும் பயணித்த மோட்டார்ச் சைக்கிளின்முன்பக்கத்தில் துப்பாக்கிச் சூடுபட்டு கீழ்ப்புறமாகவுள்ள எஞ்சின் ஊடாகத்துப்பாக்கிச் சன்னங்கள் வெளியில் சென்றமைக்கான தடயங்களும் காணப்படுகின்றன.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையா?

ஒருவேளை பொலிஸாரின் சமிக்ஞையை மீறிக் குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்தால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவதுஎன்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

மேலும் சட்டம், ஒழுங்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கா கூறியமை போன்றுதுப்பாக்கிச் சூட்டில் இறந்த இரு மாணவர்களும் பொலிஸ் சோதனைச் சாவடியொன்றில்அவர்களின் வண்டியை நிறுத்துமாறு உத்தரவிட்ட போதும் அவர்கள் அதனை மீறிப்பயணித்தமையால் முன்னாலிருந்த சோதனைச் சாவடியொன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்டதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர் எனவும், குறித்த இருமாணவர்களும் ஆவாக் குழுவினர் எனப் பொலிஸார் தவறாகக் கருதியதன் காரணமாகவேதுப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாகக் கூறுகிறார்.

அவ்வாறு அவர் கூறுவதுசின்னப் பிள்ளைத்தனமான கருத்தாகவே நோக்க வேண்டியதாகவுள்ளது.

அவ்வாறானால் இரவு வேளையில் வீதிகளில் பயணிக்கும் அனைவரும் என்ன ஆவாக் குழுவைச்சேர்ந்தவர்களா?,

தவறாகப் பொலிஸார் கருதினார்கள் என்பதற்காகத் துப்பாக்கிச்சூடு நடாத்துவதனை நியாயப்படுத்த அவர் முயல்கிறாரா?,

உண்மையைக் கண்டறியமுற்படாமல் துப்பாக்கிச் சூடு நடாத்துவது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா?

மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மாணவன் மீதே துப்பாக்கிச் சூடுநடாத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின் குறித்த துப்பாக்கிச் சூடு பின்னாலிருந்துநடத்தப்படவில்லை என்பதுவும் முன்னாலிருந்தே நடாத்தப்பட்டது என்பதும்நிருபணமாயுள்ளது.

அத்துடன் மோட்டார் சைக்கிள் வாகனத்தை நிறுத்துவதற்காகவேகுறித்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருந்தால் அதன் ரயர்கள் மீதேதுப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக எடுத்த எடுத்தஎடுப்பிலேயே மாணவன் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது கொலை முயற்சிஅல்லது திட்டமிட்ட பழிவாங்கல் எனவே எண்ண வைத்துள்ளது.

கிளிநொச்சி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா?

மோட்டார்ச சைக்கிளைச் செலுத்திச் சென்ற சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச்சேர்ந்த பல்கலைக் கழக மாணவன் சுலக்ஷன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடுநடாத்தப்பட்ட நிலையில் அவருடன் பயணித்த கிளிநொச்சியைச் சேர்ந்த சக மாணவன் கஜன்உண்மையில் மதில் சுவருடன் மோதித் தான் உயிரிழந்தானா?

அல்லது பொலிஸாரின்துப்பாக்கிச் சூட்டிலேயே சுலக்ஷன் படுகொலை செய்யப்பட்டார் என்ற உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகப் பொலிஸாரே சக மாணவனை அடித்துக் கொன்றனரா?

கடந்த-21ம் திகதி பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் கொலைசெய்யப்பட்ட மாணவர்களின் உறவுகளையும், மாணவர்களையும் சந்தித்துப் பேசிய யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சி. சதீஸ்தரன் ஒரு மாணவன் துப்பாக்கிச் சூட்டில்படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றைய மாணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்என்ற வகையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தமை இதுதொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாகவுள்ளது.

எது எவ்வாறாகவிருந்த போதும் யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் படுகொலைச் சம்பவம் வடக்கு, கிழக்கு மட்டுமின்றித் தென்னிலங்கையிலும்,புலம்பெயர்தேசங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தை தற்செயலானதொன்றாக நாங்கள் எடுத்து விட முடியாது.

குறித்த மாணவர்கள்எத்தனை எத்தனை எதிர்காலக் கனவுகளைச் சுமந்திருப்பார்கள்?

அவர்களுடையபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படித்து முடித்து பல்கலைக் கழகத்தை விட்டுவெளியேறிய பின்னர் தாம் எவ்வாறான வாழ்க்கை வாழலாம்? என எத்தனை கனவுகளையும்,எதிர்பார்ப்புக்களையும் சுமந்து வாழ்ந்திருப்பார்கள்.

அவர்களின் கனவுகளும்,எதிர்பார்ப்புக்களும், கற்பனைகளும் ஒரே நொடியில் சிதைவடைந்தால் அவர்களின் மனநிலை எவ்வாறிருக்கும்?

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸ்உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புங்குடுதீவு மாணவி வித்தியாகொலை வழக்குப் போன்று நீதி காலம் தாழ்த்திச் செல்லாத வகையில் விசாரணைகள்மிகவும் துரிதப்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்படவேண்டும்.

வன்முறைக் கலாசாரம் மீண்டும் எமது மண்ணில் உருவாகாதிருக்க நீதிஉடனடியாக நிலை நாட்டப்பட வேண்டும்.

Comments