காத்தான்குடியை வெற்றி பெறமுடியாத NFGG, எதற்காக இந்த யானைக்கால் விரிப்பு? அதன் பின்னணி என்ன?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

இந்த தேர்தலில் NFGG ஆனது கிழக்கில் ஒரு சபையைக் கூட கைப்பற்ற முடியாத ஒரு வங்குரோத்து இயக்கம். ஐ.தே.கவிற்கு கிடைக்காத முஸ்லிம் வாக்குகளை அதாவது மஹிந்த மைத்திரி அணிக்கு கிடைக்ககூடிய வாக்குகளை பிரிக்கும் தந்திரத்தில் வந்துள்ள காளான் கட்சிதான் இந்த NFGG.

கடந்த பொது தேர்தலில் ஹக்கீம் கட்சியில் இணைந்து ஏறாவூரில் அலிசாகிர் மௌலானாவை வெற்றி பெற செய்தார். அப்போது தோல்வி கண்ட ரஹுமான் ஹக்கீமிடம் போனஸ் எம்.பி கேட்டு ஹக்கீம் வீட்டில் மண்டியிட்டார். ஹக்கீம் மறுத்து விட்டார்.

இப்போதைய உள்ளூராட்சி தேர்தலில் மீண்டும் ஹக்கீம் கட்சியில் இணைந்து போட்டியிட முயன்றார். ஆனால் ஹக்கீம் அதை விரும்பவில்லை, அதனால் ரணிலுடன் இணைந்து கொண்டார்.

அதாவது ஏற்கனவே ரணில் கட்சியில் ஹக்கீம், ரிசாத் இணைந்து கொண்டுள்ளார்கள். அதனால் மஹிந்த மற்றும் மைத்திரி கட்சிக்கு செல்லக் கூடிய முஸ்லிம் வாக்குகளை இந்த ரகுமான் பிரித்து எடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் களம் இறங்கியுள்ளார்.

தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம் எம்.பி யை தட்டியவர்

கடந்த பொது தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு ஊடாக திருமலை மாவட்டத்தில் மூதூரை இலக்கு வைத்து ஒரு முஸ்லிம் எம்.பி வெல்லக்கூடிய மிக அறிய வாய்ப்பை சிதற விட்ட பெரும் சாணக்கியர்.

இவர் உண்மையில் அரசியல் கணக்கு தெரிந்தவர் என்றால் கடந்த பொது தேர்தலில் திருமலையில் முஸ்லிம் தமிழர் இணைந்து ஒரு எம்.பியும் தமிழ் கூட்டமைப்பின் போனஸ் எம்.பி ஒன்றும் பெற்றிருக்கலாம். அதை தட்டிவிட்டு ஹக்கீம் கட்சியை பலப்படுதினார். ரகுமான் தோல்வி அடைவார் என்பதை நாம் அப்போது எமது ஆய்வுக் கட்டுரையில் எழுதி இருந்தோம்.

ஹிஸ்புல்லாஹ்வின் வாக்கு வங்கியை உடைக்கும் தந்திரம்

கடந்த பொது தேர்தலில் ஹிஸ்புல்லாவை தோற்கடிக்க நியமிக்கப்பட்ட ஒரு முகவர். இப்போது காத்தான்குடியை வெற்றி பெற முடியாத இந்த வங்குரோத்து இயக்கம் கிழக்கில் அகலக்கால் பதித்துள்ளது.

எங்குமே ஒரு உறுப்பினர் கூட வெற்றி பெற முடியாத இந்த மழைக்காளான் கட்சி முஸ்லிம்களின் ஒற்றுமையை குழப்பியடிக்க வந்துள்ளது.

ரகுமானின் NFFG, ஹக்கீம், ரிசாத் ஆதரவை ஒரு போதும் ஆதிக்கம் செலுத்த போவதில்லை. ஆனால் மஹிந்த, மைத்திரி அணிக்கு அளிக்கக்கூடிய மிதக்கும் வாக்குகளை வேட்டையாடி அரசு வெற்றி பெறக்கூடிய இடங்களில் குழப்புவது.

ஹக்கீம் கட்சி அல்லது UNP கூட்டு கட்சிகளின் பலமாக இருக்கும் சபைகளிலெல்லாம் NFGG போட்டியிடாத காரணம் என்ன? மஹிந்த ஆட்சியில் மஹிந்த அணி தன்வசமிருந்த சபைகளை மட்டும் இவர்கள் குறிவைத்தது ஏன்?

NFGG தனித்துக் கேட்கும் சபைகளில் வாக்குகளை கலைப்பதினூடாக ஹக்கீம் ரணில் கூட்டை வெற்றிபெற நியமிக்கப்பட ஒரு முகவர் இயக்கம் மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் NFGG யினர் ஹக்கீம் அதிகாரம் செலுத்தும் சபைகளில் அந்த மாற்றத்தை ஏன் விரும்பவில்லை.

அட்டாளைச்சேனையில் சென்றமுறை கூட்டமெல்லாம் நடத்தினார்கள். அக்கரைப்பற்று பிரதேச சபையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

ஆனால் இம்முறை அட்டாளைச்சேனையில் ரகுமான் கட்சி போட்டியிடாமல் அக்கரைப்பற்றில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன ? ஆக மேடைகளில் ஒரு காலத்தில் ஹக்கீம் கட்சியை போட்டுத் தாக்கிய ரகுமான் இப்போது மறைமுகமாக ஹக்கீமுக்கு முட்டுக் கொடுத்து ஹக்கீம் ரணில் தரப்பை வெற்றி பெற இறங்கியுள்ள ஒரு சாபக் கேட்டின் மறுபக்கம்.

காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ், அக்கரைப்பற்றில் அதாவுல்லா, ஓட்டமாவடியில் அமீர் அலி, கிண்ணியாவில் மகுறூப் ஆகியவர்களை இலக்கு வைத்து அவர்களின் வாக்கு வங்கிகளை உடைக்கும் மெகா தந்திரம். இந்த நரி வேலைக்கு ஒரு தரகர்.

எதிர்கால எம்.பி ஆசைக்கு கிழக்கு முஸ்லிம்கள் பகடைக்காய்கள். சாய்ந்தமருதில் தோன்றியிருக்கும் ஹக்கீமுக்கு முற்றிலும் எதிரான சூழ்நிலையில் ஹக்கீமுக்கு எதிராகத் திரும்பும் வாக்குகள் NFGG க்கு கிடைத்து அவர்கள் கைப்பற்றும் ஒரு ஆசனம் கூட ரகுமானுக்கு வெற்றியாக இருக்கலாம் என்ற பகல் கனவு திட்டம் வேறு.

ஹக்கீம் /UNP க்கு முட்டுக் கொடுத்து அவர்கள் ஆட்சியிலிருக்கும் சபைகளில் ஆட்சியைத் தக்கவைக்க மறைமுகமாக உழைக்கும் NFGG ஏனைய சபைகளிலும் முற்றிலும் மாற்றமான சிந்தனையை ஊட்டுவதன் மூலம் கைப்பற்றி அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி ஹக்கீம் /UNP கூட்டோடு இணைந்து சபையை அமைக்கலாம் என்ற நற்பாசையும் வந்திருக்கலாம்.

ரஹ்மான் இத்தேர்தலிலும் UNP ஹக்கீம் கூட்டில் ஒன்றாகப் போட்டியிட ரவிகருணாநாயக்கவை தொடர்பு கொண்டதாக ஹக்கீம் கூட குறிப்பிட்டார்.

ஒரே கூட்டணிக்குள் வாய்ப்புக் கிடைக்காத போது திட்டம் வேறுவடிவத்தில் வந்திருக்கிறது. யானை, மரக் கூட்டை பிடிக்காத வாக்குகளை அப்படியே சுருட்டும் லாவகமான நப்பாசை

ஒவ்வொரு ஊரினதும் திடமான மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்படும் பாரிய சதியாக இதை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஊரினது தன்மைக்கேற்ப வாதங்களையும், பிரிவினைக்கான வெளியையும் கிழப்புவதன் மூலம் தாராளமாக இதில் வெற்றியடையவும் முடியும். இச் சதியானது கிழக்கை காயாக பயன்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு மிக இலகுவான சூழ்நிலையை உருவாக்கியும் விடும்.

குறிப்பிட்ட சபைகளில் போட்டி இடாமல் ஹக்கீம் /UNP கூட்டுச் சதிக்கு மிக இலகுவான அரசியல் நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த நிலையானது முஸ்லிம்களுக்கு மற்றுமொரு சாபக்கேடுதான்.

காலத்திற்கு காலம் முஸ்லிம் தரப்பில் இருந்து எட்டப்பர்கள் சதிகாரர்கள் உருவாவது முஸ்லிம் சமுகத்தின் நிலையான சாபம்தான்.

Latest Offers