தொடர் பரபரப்பில் கொழும்பு அரசியல்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார்.

கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது..

மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச, தற்போதைய போக்குவரத்து அமைச்சராக உள்ள நிமல்சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஒரு முழு நகர்வு செய்து வருகின்றார்.

அதற்காக UNPயில் உள்ள MP க்களிடம் பேசியள்ளார். அதனால் பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி மைத்திரியின் SLFP துமிந்த அணி UNP க்கு தாவுவதில் இழுபறி தொடர்கின்றது.

ஐ.தே.க அணியில் இருந்து கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் ஒருவர் பிரதமர் பதவியை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள கோரிக்கையை இருவரும் மறுத்து விட்டார்கள்.

காரணம் ரணில் விரும்பாத பதவியை தாங்கள் UNP யில் இருந்து கொண்டு பெற முடியாது அது கட்சியின் கட்டுக் கோப்பை மீறும் செயல் என்று ஜனாதிபதி மைத்திரிக்கு சொல்லி விட்டார்கள்.

இதன் பின்புதான் பசில் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்த பசில் மஹிந்த ஆட்சிக்காலத்தில் டெல்லியுடன் மிக நெருக்கத்தில் இருந்தார். பசில் நல்ல ராஜதந்திரி என்ற ஒரு மதிப்பும் மரியாதையும் பசில் மீது இந்தியாவுக்கு உள்ளது.

நேற்று மாலை பசில் இந்திய தூதுவரோடு பேசிவிட்டு டெல்லியில் ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். பசிலுக்கு மேலும் இந்திய ஆதரவு வேண்டும் என்று கருதினால் இந்திய கோமாளி சுப்ரமணியம் சுவாமியும் இந்திய தூதரக அதிகாரி ஒருவரும் தேவையான ஒத்துழைப்பை வழங்கலாம் என்று ஒரு பச்சைக் கொடி டெல்லியில் இருந்து காட்டப்பட்டுள்ளது.

அதனால் பசில் தொடர்ந்து தனது நகர்வில் உள்ளார். இந்த நகர்வுக்கு SLFP அணியும் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் ஒன்று எவர் எங்கு போனாலும் ரணில் இல்லாமல் அவர் விரும்பாமல் பிரதமர் நகர்வு சாத்தியமாகுமா?

ஜனாதிபதி மைத்திரி எங்கு சுத்தினாலும் UNP யில் தஞ்சம் அடைந்தால் மட்டுமே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற நிலைக்கு வரும்.

நடந்தது என்ன?

107 MP க்கள் கொண்ட ஐ.தே.க தனியாக ஆட்சி அமைக்க ரணில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சிறிகொத்தாவில் அவசர ஆலோசனை செய்து வந்தார். இந்த செய்தி மகிந்தவுக்கு இலங்கை படை மூலமாக செல்கின்றது.

மறுபுறம் இந்த செய்தி ஜனாதிபதி மைத்திருக்கு இந்திய தூதரகம் ஊடாக நேரடியாக செல்கின்றது. இதேநேரம் ஜனாதிபதி மைத்திரி இந்த தேர்தல் தோல்வியில் இருந்து மீளவில்லை. அந்த நேரம்தான் இந்திய ரோ வின் செய்தி மைத்திரியை எட்டுகின்றது.

அப்போது ஜனாதிபதி உச்சகட்ட சினத்தில் இருந்தார். எனக்கு தெரியாமல் தனி ஆட்சியா? என்ற கடுப்பில் UNP தனியாக ஆட்சி அமைக்க கூடாது என்று SLFP அமைச்சர்கள் மஹிந்த மற்றும் மைத்திரியை இணைக்கும் அவசர களத்தில் இறங்கி விட்டார்கள்.

ஒரு அணி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நகர்வு ஒன்றை செய்தது.

அப்போது ஜனாதிபதி மைத்திரி திரிசங்கு நிலையில் இருந்தார் ஆனாலும் ஜனாதிபதி UNP யில் தஞ்சம் கோருவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு வந்தார்.

UNP ஆட்சி அமைக்க இன்னும் 6 MP க்கள் வேண்டும். அதற்கு ஜேவிபி அல்லது TNA ஆதரவு வேண்டும். சம்பந்தர் ஆதரவு வழங்கலாம் என்ற கோணத்தில் UNP யோசித்தது. ஜேவிபி கொடுக்க மாட்டாது என்ற பேச்சும் அங்கு வந்தது.

ஆனால் TNA சிந்தனையை ரணில் தட்டி விட்டார். காரணம் தமிழ் கூட்டமைப்பை இணைத்தால் மஹிந்த சுலபமாக எதிர்கட்சி அணியை கைப்பற்றி விடலாம் மறுபுறம் சிங்கள மக்கள் மத்தியில் UNP மீது மோசமான பிரச்சாரம் மஹிந்த அணியால் எடுத்து செல்லப்படும்.

ஆக சிங்கள மக்களால் ஒதுக்கப்பட்ட கட்சியாக UNP வந்து விடும் என்று ரணில் சொல்லியுள்ளார்.

இதேநேரம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அழுத்தம் மஹிந்த தரப்பால் அதிகரித்து வருகின்றது. ஜனாதிபதி மைத்திரி மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை Impeachment ஒன்றை மஹிந்த அணி கொண்டு வரும் நிலை எழுந்துள்ளது.

இதை UNP முறியடிக்கும். அப்படியானால் UNP இடம் ஜனாதிபதி தஞ்சம் அடைந்தால் தான் அது நடக்கும். இப்போது ஜனாதிபதி SLFP பக்கமா? அல்லது UNP பக்கமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார்.

சு,க.மைத்திரி அணியின் நிலை.

ஆனால் SLFP அமைச்சர்கள் MP க்கள் வற்றும் குளத்தில் இருப்பார்களா? SLFP கூடாரம் வெறிச்சோடும் நிலை. அவர்கள் பலர் மகிந்தவுடன் இணையும் நிலைக்கு வந்தார்கள். இந்த நிலையில்தான் கொழும்பு அரசியல் களம் தொடர்ந்து கொதி நிலையில் இருந்து வந்தது

ஜனாதிபதி மைத்திரியை ஏமாற்றிய தேர்தல் கணிப்பீடு

80 வீதமான படைகள் மகிந்தவின் பக்கம் உள்ளார்கள். அப்பாவி ஜனாதிபதியை நம்பி ஏமாற்றி விட்டார்கள். தேர்தல் கணிப்பீடுகளை மாற்றி கொடுத்துள்ளார்கள். SLFP வெற்றி பெரும் என்று படையினர் கொடுத்த கணிப்பீடை நம்பித்தான் தேர்தல் முடிந்த பின்னர் ஊழலுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்று ஜனாதிபதி பகிரங்கமாக பேசி வந்தார்.

கொழும்பு அரசியல் பரபரப்பை தனித்து யார்? நடந்தது என்ன?

இப்போது கொழும்பு அரசியலை மிகவும் உன்னிப்பாக இந்திய ரோவின் விசேட அணியொன்று இந்திய தூதரக 2ஆம் செயலர் (ஆந்திராகாரர்) தலைமையில் கவனித்து வருகின்றது.

இந்திய ரோவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் இப்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேரடியாக டெல்லியில் இருந்து கொண்டு கொழும்பு அரசியல் களத்தை மிகவும் உன்னிப்பாக இந்த 2 ஆவது செயலர் ஊடாக அவதானித்து வருதாக ஒரு செய்தி உள்ளது.

இந்த அஜித் டோவலுக்கு பிரதமர் மோடி முழு அதிகாரம் கொடுத்துள்ளார். அந்த வகையில் இந்திய தூதுவர் தரஞ்சித்சிங் சாண்டுவோடு அதிக நேரம் சில உத்தரவுகளை செய்துள்ளார்.

அதற்கு முதல் அமெரிக்காவின் தெற்காசிய செயலரை இந்த அஜித் டோவல் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின்பு அமெரிக்கா தூதுவர் அதுல் கெசாப் போடு பேசியுள்ளார்.

இதன் பின்பு இரண்டு தூதுவர்களும் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்கள். அதன் பின்னர் தான் SLFP அணியொன்று UNPக்கு ஆதரவு கொடுத்தால் இந்த ஆட்சி தொடரும் என்று ஜனாதிபதி மைத்திரி விரும்பினார்.

இந்த நிலையில் தான் UNP க்குள் ரணில் மெது அதிருப்தி கிளம்பியது. இதன் பின்பு மீண்டும் இரண்டு தூதுவர்களும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி மைத்திரி மற்றும் ரணிலை சந்தித்து பேசியுள்ளார்கள்.

அதன் பின்புதான் கரு ஜெயசூரிய மற்று சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் ஒருவரை பிரதமராக நியமிக்க அதிபர் விரும்பினார். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது இந்தியா.

அதனால் அமைச்சர் துமிந்த தலைமையில் UNP க்கு தாவல் தள்ளிப்போனது. SLFP செயலரும் விவசாய அமைச்சருமான துமிந்த திசாநாயக்கா தலைமையில் SLFP MP க்கள் 10 பேர் UNP க்கு மாறவிருந்தார்கள்.

இந்த துமிந்த என்பவர் (வடமத்தி )அனுராதபுரம் முன்னாள் முதல்வர். பேர்டி திஸ்ஸநாயகாவின் புதல்வர். கடந்த 2004 ஆம் ஆண்டு பேர்டி திஸாநாயகாவின் முதல்வர் பதவியை மகிந்த பறித்த போது மாரடைப்பால் மரணித்தவர்.

அந்த வகையில் மகிந்தவுடன் துமிந்த சேரும் வாய்ப்பு குறைவு என்பதால் அவரின் அணி ஒன்று UNP யுடன் இணைவதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் பசில் கரடி புகுந்த கதையாக புகுந்துள்ளார்.