ரணில் நடத்திய ரகசிய கூட்டம்? ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த பொன்சேகா! அம்பாறை தாக்குதலின் பின்னணி?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளார். ரணிலுக்கு எதிராக ஐ.தே.கட்சி, ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியன நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரும்போது அதன் சாதக, பாதக நிலைமை பற்றி ஆராய்ந்துள்ளார்கள்.

ரணில் அணி கொண்ட விசுவாசமான அமைச்சர்களான மங்கள சமரவீர, கபிர் காசிம், சமரநாயக, அகிலவிராஜ் ஆகியோர்கள் கூடி விவாதித்துள்ளார்கள்.

நம்பிக்கை இல்லாப் பிரேரணை நாடாளுமன்றம் வருமானால் அதை எப்படி முறியடிக்கலாம்? சுதந்திரக்கட்சி எம்.பிக்களை எப்படி சமாளிப்பது? ஐ.தே.க. எம்பிக்கள் யார் யார் உள்ளார்கள்? போன்ற விடயங்களும் ஆராயப்பட்டுள்ளது.

முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச, முன்னாள் நிதி அமைச்சர் ரவி ஆகியோர்களை எப்படி சமாளிப்பது? என்றும் ஆராயப்பட்டுள்ளது. ஹக்கீம் தரப்பு மற்றும் ரிசாத் தரப்பு பற்றி பேச்சு எழுந்த போது அவர்கள் நம்மோடு உள்ளார்கள் எனவே அவர்களைப் பற்றி பயமில்லை என்று ரணில் சொல்லியுள்ளார்.

ஆனாலும் அவர்கள் ஆளும் தரப்பு என்று வருகின்ற போது அவர்கள் கட்சி மாறலாம் என்றும் பேசப்பட்டுள்ளது.

இதே நேரம் சு.கட்சி எம்.பிக்களை நம்மால் சமாளிப்பதை விட ஜனாதிபதி மைத்திரியால் மட்டுமே சமாளிக்கலாம் என்று அமைச்சர் சமரநாயக முன்மொழிந்துள்ளார்.

அதே போன்று இந்த அரசை கொண்டு செல்ல வேண்டுமானால் ஜனாதிபதி மைத்திரி ஐ.தே.கட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இறுதியாக இந்த கலந்துரையாடல் முடிந்துள்ளது.

அடுத்த கட்டமாக ஐ.தே.கட்சி எம்.பிக்களை சமாளிக்கும் பொறுப்பு அமைச்சர் கபிர் காசிமிடம் முதல் கட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 3 அணிகள் ரணிலை வீழ்த்த வேண்டும் என்று களத்தில் உள்ளதால் கொஞ்சம் கடினமான முயற்சியில் ரணில் இறங்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த சரத் பொன்சேகா! பின்னணி என்ன?

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணிலை தனித் தனியாக சந்தித்து பேசியுள்ளார். முதலில் பிரதமர் ரணிலை சந்தித்து தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்குவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சியை பொறுத்த மட்டில் பொலிஸ் அமைச்சு உங்களுக்கு என்றுதான் இன்னும் உள்ளது, ஆனால் நீங்கள் பலரை பழி வாங்க கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குடும்பம் மற்றும் மஹிந்த அணி எம்.பிக்கள் மற்றும் மஹிந்த அணி கொண்ட பிக்குகள் பலமான எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஜனாதிபதி மைத்திரி இந்த விடயத்தில் பின்வாங்கி வருவதாக சொல்லியுள்ளார். அத்துடன் இந்த அமைச்சை ஜனாதிபதி தன் வசம் வைத்துக் கொள்ள முயன்ற போது நான் ஜனாதிபதியிடம் பேசி எடுத்துக் கொண்டேன் என்று சொல்லியுள்ளார்.

குற்றவாளிகள் என்னைக் காண்டால் எப்போதும் பயம் தான் என்று சரத் பொன்சேகா சொல்லியுள்ளார்.

அதன் பின்பு ஜனாதிபதி மைத்திரியை பொன்சேகா சந்தித்துள்ளார். அதிபரும் இதே கருத்தை சொல்லியுள்ளார். உங்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ஆட்சியை கொண்டு செல்வது கொஞ்சம் சிரமம் மிக்கதாக அமையலாம் என்று சொல்லியுள்ளார்.

“எனக்கு யாரையும் பழி வாங்கும் நோக்கம் கிடையாது ஆனால் சட்டத்தை தராதரம் பாராது சரியாக செய்வேன்” என்று சொல்லியுள்ளார். இந்த ஆட்சி மக்கள் விரும்பும் ஆட்சியாக அமைய வேண்டுமானால் சட்டம் சரியான பாதையில் செல்ல வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று பொன்சேகா சொல்லியுள்ளார்.

ஆனால் பொன்சேகா இந்த அமைச்சை தனக்கு தரும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லையாம். கொஞ்சம் பொறுங்கள் பார்ப்போம் என்று ஜனாதிபதி பொன்சேகாவுக்கு சொல்லியுள்ளார்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு இந்நாள் ஜனாதிபதி கொடுத்துள்ள வாக்குறுதியில் பொன்சேகாவுக்கு பொலிஸ் அமைச்சு கொடுக்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார்.

அம்பாறை தாக்குதல் பின்னணி என்ன? அதன் சூத்திரதாரி யார்?

இந்த ஆட்சியை சர்வதேச ரீதியில் அவப்பெயரை உண்டு பண்ண வேண்டும் என்று ஒரு திட்டம். அரசின் எதிர் தரப்பு அணியால் தீட்டப்படுகின்றது. காரணம் கடந்த ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களை தாக்கியதும், மத ஸ்தலங்களை தாக்கியது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

ஆனால் இந்த ஆட்சியிலும் அது நடந்துதான் வருகின்றது. அதனால் எந்த ஆட்சிக்கும் சம்பவத்திக்கும் சம்பந்தம் இல்லை என்று கடந்த ஆட்சியாளர்கள் சர்வேதேச ரீதியில் தப்பிக்கவும் இந்த திட்டம் செயலுக்கு வந்துள்ளது .

காரணம் மஹிந்த அணி கொண்ட ஆட்சியை சர்தேசம் வெறுக்கின்றது. எனவே சர்வேதேச பார்வையில் மஹிந்த ஆட்சி மட்டுமல்ல மைத்திரி ஆட்சியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இந்த நல்லாட்சியை பிழையாக சித்தரிக்கவே இந்த தாக்குதல் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு இரகசிய அறிக்கை சொல்லுகின்றது.

சர்வதேசத்தை கையாள்வதற்காக கோத்தபாயவின் குடும்ப உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவா பறந்து விட்டார். அவருக்கான உத்தரவுகள் கொடுக்கப்பட்டு விட்டன.

ஆக மிகக் குறைந்த அளவு கொண்ட சிங்கள வாலிபர்களால் மட்டுமே இந்த திட்டம் அமுலுக்கு வந்தது.

அதன் பின்னர் அம்பாறை நகர் முழுவதும் காட்டுத் தீ போன்று சம்பவம் பரவியது. முற்று முழுதாக ஐ.தே.கட்சி அமைச்சரின் ஆட்கள் முன்னணியில் நின்று தாக்குதலை நிறைவேற்றினார்கள்.

இதில் தானாக அம்பாறை ஐ.தே.கட்சி காரர்கள் இனம் என்ற ரீதியில் ஒன்று படுவார்கள் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட ஒன்றுதான் இதை தடுக்காமல் பொலிஸ் பார்த்துக் கொண்டு நின்றது என்ற ஒரு கதையும் உள்ளது.

ஏன் அம்பாறை குறி வைக்கப்பட்டது? கோத்தாவின் திட்டம் என்ன?

இப்படியான விடயத்தில் கொழும்பு முஸ்லிம்கள் கொஞ்சம் பொறுமையாக இந்த விடயத்தை கையாள்வார்கள். அவர்கள் இதற்கு கடையடைப்பு ஹர்த்தால் செய்யமாட்டார்கள்.

ஆனால் கிழக்கு முஸ்லிகள் அப்படியல்ல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தக் கூடியர்வர்கள் அதனால் இந்த சம்பவம் அம்பாறையில் இருந்து கிழக்கு முழுவதும் பரவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திட்டமும் அதுதான்.

மாறாக கிழக்கில் விரிவு பெறாமல் மொனராகலை சியம்பலாண்டுவ பகுதிக்கு சிங்களவர்களால் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டது.

இதன் மூலம் ஜனாதிபதி மைத்திருக்கு ஒரு தர்ம சங்கடத்தை உருவாக்குவது. அதனால் பொலிஸ் அமைச்சு பொன்சேகாவுக்கு கொடுக்க விரும்பலாம் என்பது ஐ.தே.க திட்டம்.

அதனால் அம்பாறை விடயத்தில் பொலிஸ் அந்த இடத்தை விட்டு முற்றாக ஒதுங்க வேண்டும் என்பது மற்றொரு திட்டம். இந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்து விட்டது.

இந்த சம்பவம் அம்பாறையில் நடந்துள்ளதால் அம்பாறை முஸ்லிம்கள் ஐ.தே.க மீது வெறுப்படைந்து முஸ்லிம் எம்.பிக்களுக்கு எதிராக களம் இறங்கினால் ஐ.தே.கவுக்கு ஹக்கீம் கட்சி கொடுத்து அவரும் ஆதரவை நீக்கும் நிலை வரலாம்.

அப்போது சு.கட்சிக்கு ஆட்சிக்கு வரமுடியும் என்பது கோதாவின் திட்டம். அதனால் தன்னை கைது செய்ய துடிக்கும் ஐ.தே.க அரசை மாற்றலாம் என்பது மற்றுமொரு மெகா திட்டம்.

அத்துடன் இதன் மூலமாக ஐ.தே.காவுடன் உள்ள ஹக்கீம் கட்சியை உடைக்கலாம் மற்றும் ரிசாத் ஐ.தே.கட்சியுடன் இருந்தால் அம்பாறையில் அவருக்கு கிடைக்கும் முஸ்லிம் ஆதரவை உடைப்பது இதன் மூலமாக அதாவுல்லாவை பலப்படுத்தலாம்.

அந்த அந்த வகையில்தான் அதாவுல்லா அம்பாறை சம்பவத்தை ஐ.தே.கட்சி மீது குற்றம் சாட்டினர். மற்றது நேற்று ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து ஐ.தே.கட்சி தயா கமகேவை முறையிட்டார்

ஐ.தே.க இதில் மூக்கை நுழைந்த விடயத்தால் ரணில் தரப்பு ஒரு நன்மை அடைந்துள்ளது. அதாவது பொன்சேகாவுக்கு பொலிஸ் அமைச்சு கிடைக்கலாம்.

இதே நேரம் நாட்டில் ஆட்சிக்கு எதிராக மஹிந்த அணி கொண்ட பிக்குகள் மற்றும் மஹிந்த அணியினர் அனுராதபுரத்தில் இருந்து கண்டனப் பேரணியை நடாத்தவுள்ளதாகவும் சில இடங்களில் குண்டு வெடிக்கலாம் என்றும் இந்தியா நேரடியாக ஜனாதிபதி மைத்திரிக்கு சொல்லியுள்ளது..

இவைகள் குறித்து நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட குறிப்பிலும் இவைகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஸ்திர தன்மை அற்ற அரசு என்பதால் ஜனாதிபதி மைத்திரி ஏதும் செய்ய முடியாமல் உள்ளார்.

இந்த சம்பவத்தில் இவ்வளவு வில்லங்கம் உள்ளதா? அரசியல் என்றால் அப்படிதான் நமக்கு தெரியாமல் எத்தனையோ விடயங்கள் நடந்துள்ளது.