தூத்துக்குடியில் பொலிஸின் கொலைவெறி தாக்குதல்! மனித உரிமை மீறல்! ஜெனீவாவில் அரங்கேற்ற பகிரங்க அழைப்பு

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

முதலில் தூத்துக்குடியில் தமிழ் நாடு பொலிஸ் நடத்தியுள்ள படுகொலை மற்றும் கொலை வெறித்தாக்குதலை கண்டிப்போம்.

மிருகத்தனம் கொண்ட காட்டுமிராண்டி தாக்குலை சிறிலங்கா இராணுவத்தை மிஞ்சிய காட்டேறித்தனத்தை ஈவிரக்கமற்ற கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற மனித உரிமை மீறலை இலங்கை தமிழ் பேசும் மக்கள் சார்பாக மிகவும் மனவருத்தம் கொண்டு கனமான இதயத்துடன் பாதிக்கப்பட்டுள்ள அத்தனை மக்களுக்கும் மனதின் அடித்தளத்தில் இருந்து எழும் ஆழ்ந்த அனுதாபங்களை இத்தால் சமர்ப்பணம் செய்கின்றோம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழன்!

இந்த கொலையை மற்றும் கொலை வெறி தாக்குதலை மனித உரிமை மீறலை எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஈழத் தமிழன் முதல் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்புக்கள் குறிப்பாக பிரான்ஸ் தமிழ் மனித உரிமை அமைப்பின் தலைவர் கிருபாகரன் வரை ஜெனீவா மனித உரிமை அமைப்பு மற்றும் உலக மன்னிப்புச் சபை மற்றும் சாவதேச மனித உரிமை அமைப்புக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சகல ஆதாரங்களும் சேகரிக்கப்பட வேண்டும்

துல்லியமாக நன்கு திட்டமிட்டு இந்த காட்டேறித் தனத்தை மத்திய அரசின் கைக்கூலிகள் நடத்தியுள்ளது. தமிழனின் அறவழிப் போராட்டத்தை நசுக்க, தமிழனின் காந்திய வழிமுறையை ஒடுக்க, தமிழனின் போராட்ட குணத்தை அழிக்க, தழிழனின் வாழ்வாதாரத்தை சிதைக்க வேண்டுமென்றே பொலிஸ் அரங்கேற்றிய கபட நாடகம் இது.

பொலிஸ் தங்களது வாகனங்களுக்கு தீயிட்டதும் மற்றும் ஏனைய தீ வைப்புச் சம்பவங்களை பொலிஸ் தாமே நடத்திவிட்டு பொதுமக்கள் மீது பழியைப் போட்டு இந்த கொலையைச் செய்து சொந்த மக்கள் மீதும் தத்தமது சொந்தங்கள் உறவினர்கள் மீதும் இந்த தாக்குதலை செய்துள்ளார்கள்.

மனித நேயமற்ற இந்த கொலைக் குற்றவாளிகளை நெதர்லாந்தின் கேக்டவுனில் அமைந்துள்ள ICC உலக கிரிமினல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்.

இதற்காக உலக தமிழன் ஒன்று சேர வேண்டும்! ஈழத் தமிழ் மக்களின் வலிகளும், காயங்களும், கொடுமைகளும், வன்கொடுமைகளும், ஏக்கங்களும், தாக்கங்களும் இன்னுமொரு மனித இனத்திற்கு நிகழக்கூடாது என்ற உன்னத நோக்கம் கொண்டு செயலாற்ற வேண்டும்.

தமிழனை ஓரங்கட்டும் மத்திய அரசு

இந்திய அரசுக்கு தமிழன் என்றால் ஒரு கேவலமான இழக்காரத்திற்து ஆளாகி வருகின்றோம். இந்தியாவின் 30 மாநிலங்களில் தமிழ்நாடு என்றால் தமிழன் என்றால் மிகவும் இழக்காரமாகி வருகின்றது.

தமிழனை மத்திய அரசு நசுக்கி வருகின்றது. நாங்கள் ஒற்றுமையில்லை. சாதி என்ற கொடிய நோயில் நாம் சிக்குண்டு சிக்கிக் கிடப்பதால் பல சாதிக் கட்சிகளும் சாதி வெறி கொண்ட பலராலும் நாம் பிரிந்து கிடப்பதால் நம்மை நசுக்கி பிழிந்து அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் நம்மை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றார்கள்.

சிறிலங்கா கடற்படை இதுவரையும் 640இற்கும் அதிகமான தமிழ்நாட்டு ஏழை மீனவர்களை நடுக்கடலில் இந்திய கடல் எல்லைகளில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளான். இதற்கு ஏதாவது உருப்படியான நடவடிக்கை ஏதும் இந்திய மத்திய அரசு செய்துள்ளதா? எடுத்துள்ளதா?

கன்னியாகுமரி, தூத்துக்குடி. திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் சகல இணைய சேவைகளை துண்டித்து தூத்துக்குடியை அண்டியுள்ள பகுதிகளில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு வீடு வீடாக சென்று அத்துமீறி புகுந்து பெண்களின் மண்டையை உடைத்து அடித்து 16 வயது சிறுவர்கள் முதல் நடுத்தர வயது கொண்டவர்கள் சுமார் 180 வாலிபர்களை சட்ட விரோதமாக கைது செய்து அடித்து உதைத்து தூத்துக்குடியின் ஒதுக்குப்புறமான வல்லநாடு மலைப்பக்கமாகவுள்ள காட்டுக்குள் 2 நாட்களாக நிர்வாணமாக்கி நீர் உணவு எதுவுமின்றி பொலிஸ் வல்லூறுகளால் உச்சகட்ட சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.

நாம் ஏற்கனவே சொன்னது போன்று மத்திய அரசின் 3000 துணை இராணுவ துருப்புக்களை தூத்துக்குடிக்கு இறக்கி விட்டானுகள். வெளிமாநிலத்தில் இருந்து தமிழ் பேசத் தெரியாத துருப்புக்கள் வீதியில் வருவோர்கள் போவோர்கள் என்று அத்தனை பேரையும் அடித்து உதைத்து அந்தந்த பொலிஸ் பகுதிகளில் அடைக்கப்பட்டார்கள். இப்படி அடைக்கப்படவர்கள்தான் வல்லநாடு காட்டுக்கள் 2 நாட்களாக சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

தூத்துக்குடி மாவட்ட நீதவான் திடீர் சோதனை

இந்த ஆட்கடத்தல் சித்திரவதை செயலை கேள்வியுற்ற தூத்துக்குடி மாக்கிஸ்ட் கட்சியும், தூத்துக்குடி மாவட்ட வக்கீல்கள் சங்கமும் இணைந்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்கள்.

நீதிபதி களத்தில் இறங்கி சில பொலிஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தி விசாரணை செய்துள்ளார். ஆனால் நீதவான் திடீர் சோதனைக்கு தயாராகின்றார் என்பதை அறிந்து கொண்ட சில காட்டேறி பொலிஸ் வாலிபர்களை அடைத்து வைத்திருந்த பொலிஸ் நிலையங்களுக்கு நீதிபதி செல்வதற்கு முன்னர் தகவல்களை கொடுத்து விட்டார்கள். அதனால் நீதிபதி செல்வதற்கு முன்னர் சகல வாலிபர்களும் பொலிஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு வல்லநாடு காட்டுக்குள் கடத்தப்பட்டார்கள்.

பின்னர் இதைக் கேள்வியுற்ற வக்கீல்கள் சங்கம் மீண்டும் நீதிபதியை அணுகி உடன் நீதிபதியை வல்லநாடு காட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கு மாடுகள் போன்று அடைத்து வைத்திருந்த சகலரையும் நீதிபதி விடுவித்தார். பொலிஸ் எதிர்ப்புக் காட்டிய வாலிபர்களுக்கு சொந்த பிணையில் செல்வதற்கு நீதிபதி உத்தரவு வழங்கினார்.

ஆனால், தூத்துக்குடி பொலிஸ் விடுவதாக இல்லை. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடி பொலிஸ் சகல பிணைகளையும் இரத்துச் செய்யுமாறு வழக்குத் தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கும் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடி பொலிஸ் அப்பீல் செய்துள்ளது.

உண்மையிலேயே தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி ஆகியோர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள். இந்த 3 கூட்டும் இல்லையென்றால் 180 தமிழர்கள் சீரழிக்கப்பட்டிருப்பார்கள்.

இலங்கையில் தமிழர்கள் போன்று மிக நீண்டகால ஜெயில் வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டிருப்பார்கள். இந்த நிலைமையில் இருந்து காப்பாற்றிய மாவட்ட தலைமை நீதிபதிக்கு ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் சார்பாக மிகப்பெரிய நன்றிகளுக்கும் உயரிய மரியாதைக்கும் உட்பட்டேயாக வேண்டும்.

அப்படியானால் தூத்துக்குடி பொலிஸ் யாரின் தூண்டுதலின் பேரில் இந்த காட்டேறித் தனத்தை அரங்கேற்றி வருகின்றது. எங்கேயோ இருக்கும் ஒரு தனிநபரை திருப்திப்படுத்துவதற்காக தனது இனத்தை அழிக்க முற்படும் தூத்துக்குடிப் பொலிஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

எவ்விதமான முன்னெச்சரிக்கையுமின்றி எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிப் பிரயோகம் செய்வெதென்றால் இதன் உள்நோக்கம்தான் என்ன?

தங்களது காட்டுமிரான்டித்தனமான செயல்கள் எங்கும் செல்லக் கூடாது என்ற நோக்கில் 3 மாவட்டங்களிலும் இணையதளத் சேவைகளை முடக்கிவிட்டு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவைச் செய்து விட்டு தமிழர்களை அழிக்க வந்த காட்டேறிகளை தமிழ் நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் ஊடாக இந்த காட்டேறித் தனத்தை சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பை ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புக்களை இணைத்து அதன் ஊடாக சகல இணைப்புக்களையும் முன்னெடுத்துச் செல்லும் இணைப்பாளராக செயல்பட நான் தயாராகவுள்ளேன்.

தமிழ்நாட்டுக்குள் இருந்து இந்த காட்டேறித் தனத்தை அரங்கேற்ற முடியாது. காரணம் அவர்களுக்குப் பாதுகாப்பில்லை.

பொய்யாக கேஸ் புக் பண்ணி ஜெயிலில் அடைத்து விடுவானுகள். அதனால் இதன் இணைப்பாளராக நான் நேரடியாக செயல்படத் தீர்மானித்துள்ளேன். இது சம்மந்தமாக சகலரும் தொடர்பு கொள்ளலாம்.