மைத்திரியின் அதிருப்தியை தணித்த ரணில்! அதன் பின்னணி என்ன? கொழும்பு அரசியல் பற்றிய ஆய்வு

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐ.தே.க தரப்புக்குமிடையில் ஒரு உச்ச கட்ட பனிப்போர் நடந்து வந்தது.

ஒரு பனிப்போர் மெதுவாக நடந்து வந்தாலும் போரை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றவர் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.

மறைந்த மாமனிதன் நல்லாட்சியின் மூல காரணி மாதுழுவே தேரர் நினைவு தினத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைக்காமல் ஓரங்கட்டி வந்தார்கள்.

இதன் ஏற்பாட்டாளர் ரவி கருணாநாயக்க. ஆனால் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

அதனால் ஆத்திரம் அடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் ஐ.தே.கட்சியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் கொண்டு வந்தார்.

இதனால் ஐ.தே.க உச்ச கட்ட உஸ்ணத்தில் உள்ளார்கள். இதை புரிந்து கொண்ட ஐ.தே.க பிரதானி ரணில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது யாரும் போர் தொடுக்க வேண்டாம் என்று ஐ.தே.க எம்பிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

அதனால் ஜனாதிபதியின் உரைக்கு யாரும் பதிலுரை கொடுக்க மாட்டார்கள். கசமுசா ஓய்ந்து விட்டது. இது வரையும் யாரும் பதிலுரை கொடுக்கவில்லை அது அடங்கி விட்டது.

ஆனால் பனிப்போர் ஓயாது. இந்த நாடாளுமன்றம் கலையும் வரை பனிப்போர் ஓயாது. நாம் ஏற்கனவே சொன்னது போன்று சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலர் பதவி அனுராதபுரம் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிடமிருந்து பிடுங்கி ரோகன லக்ஸ்மன் பிரியதாச என்பவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

துமிந்த திசநாயக்கவுக்கு தேசிய அமைப்பாளர் என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.தே.கட்சிக்கு தாவும் முடிவில் இருந்த துமிந்த அந்தர் பல்டி அடித்தார். இப்போது கட்சி மாறவில்லை.

இப்போது ஒரு புதிய கூட்டு கடந்த மாதம் முதல் ஆரம்பித்துள்ளது. இந்தக் கூட்டு ஐ.தே.க அணிக்கு ஆப்படிக்கும் மிகப்பெரிய பலம் கொண்ட கூட்டணி என்றே கூறலம்.

இந்தக் கூட்டணியை தொடர வேண்டும் என்று கடந்த வாரம் முன்னாள் அதிபர் மகிந்தர் வீட்டில் பிள்ளையார் சுழி ஒன்று போடப்பட்டுள்ளதாம்.

அதாவது மஹிந்த அணியும் அதிபர் மைத்திரி தலைமை கொண்ட சுதந்திரக் கட்சியும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது. அதன் மூலம் ஐ.தே.கட்சியை தோற்கடிப்பது என்ற ஒரு குறிக்கோள் கொண்டு இந்தக் கூட்டணி அமையுமாம்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

புதிய அரசியல் திருத்த மசோதாவின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தை 4 ஆண்டுகள் கடந்த நிலையில் அதிபர் கலைக்கும் அதிகாரம் உள்ளது. அதனால் அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலையும் வாய்ப்புள்ளது.

அதற்கான ஒரு நகர்வை அதிபர் கொண்டுள்ளார் என்று நம்பகமான ஒரு செய்தி கசிந்துள்ளது.அப்படியானால் இன்னும் 11 மாதம் கடந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் 4 வயது கடந்த நிலையில் கலையும் வாய்ப்புண்டு .

ஐ.தே.காவினர் ஜனாதிபதியை ஓரங்கட்டி தனிமைபடுத்தும் ஒரு சதியில் இறங்கி விட்டார்கள். காரணம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க தனியாக பிரதமர் ரணிலை களமிறக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிமைபடுத்தும் நோக்கம்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்யுண்டு என்ற ரீதியில் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல விடயங்களை பகிரங்கமாக பேசிய நோக்கம் வெளிப்பாடும் அதுதான்.

இன்னொரு புறம் மைத்திரியும், மகிந்தவும் இணையும் நிலையொன்று ஆரம்பித்து விட்டது.

கோத்தபாய , பசில் ஜனாதிபதி கனவுடன்..

இன்னொரு புறம் மகிந்தவுக்கு எதிராக கோத்தபாயவை எதிர்வரும் அதிபர் தேர்தலில் களம் இறக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார்.

கோத்தபாயவும் ஜனாதிபதி கனவுடன் இப்போதே பிரச்சாரத்தில் ஈடுபட்டு விட்டார். ஜனாதிபதி கனவுக்காக தனது அமெரிக்க குடியுருமையை தியாகம் செய்கின்றார்.

ஆனால் மகிந்தவின் ஒப்புதல் இன்றி தனியாக ஒரு களம் அமைத்து கடந்த மாதமாக வலம் வருகின்றார் .மறுபுறம் பசில் ஜனாதிபதி கனவுடன் மகிந்தவுடன் ஒட்டிக்கொண்டு திரிகின்றார்.

ஆனால் மகிந்தவுடன் உள்ள கூட்டு எதிர்கட்சி அணி கொண்ட எம்.பிக்கள் மகிந்தவின் அண்ணன் சமல் ராஜபக்சவை களம் இறக்குமாறு இப்போதே அறிக்கை விட்டு வருகின்றார்கள். ஆனால் மகிந்தவைப் பொறுத்த மட்டில் தனது சகோதரர்கள் யாரையும் இறக்கும் நோக்கமில்லாதுள்ளார்.

மகிந்தவைப் பொறுத்த மட்டில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்று ஒரு பொம்மை ஜனாதிபதி இருக்க வேண்டும் தான் பிரமராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

கோத்தா அதிபரானால் மஹிந்த கூட அவரிடம் நெருங்க முடியாது என்பது மகிந்தவுக்கு நன்கு தெரியும் அதனால் ஜீ. எல்.பீரிஸ் அல்லது நாமலை இறக்கினாலும் மஹிந்த அண்ட் கோவை மஹிந்த இறக்க மாட்டா.

ஐ.தே.க சார்பாக சஜித்தை களமிறக்க இந்தியா அமெரிக்கா ஆலோசனை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க சார்பாக சஜித் பிரேமதாசவை களமிறக்கினால் மட்டுமே ஐ.தே.க வெற்றி பெரும் என்றும் நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களின் வாக்குகளையும் பெற வேண்டும் அதற்காக சிறுபான்மை கட்சிகளின் ஆதரவும் வேண்டும் என்றும் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது இந்தியா மற்றும் அமெரிக்கா வெளிப்படையாக அதிபர் மைத்திரியிடம் சொல்லி விட்டது.

ரணிலுக்கு பதவி மோகம் விடுவதாக இல்லை பெரும் பணம் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றி பெற்றார். இப்போது 2020 ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் வேட்பாளராக கல்மிறங்கவுள்ளார்.அதற்காக கட்சியை வளைத்து வைத்துள்ளார்.

ஐ.தே.க வுக்குள் அதிருப்தி நிறைந்து விட்டது. ஐ.தே.க வெற்றியை நோக்கி பயணிப்பது என்பதை விட அதிருப்திகளை சமாளிப்பதில்தான் காலம் கழிகின்றது.

மகிந்தர் இப்போது முஸ்லிம் தரப்பை தன்பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். மறுபுறம் கோத்தபாய பேறுவல முஸ்லிம்கள் ஊடாகவும் இலங்கை ஜம்மியத்துல் உலமா கட்சியின் ரிஸ்வி முப்தி ஊடாகவும் முஸ்லிம் தரப்பை தன்பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

மஹிந்த அணியும் மைத்திரி அணியும் கூட்டுச் சேருமானால் ரணில் தரப்பு வெற்றி பெறும் வாய்ப்பு அரிது என்றுதான் சொல்ல வேண்டும்.

கோத்தபாய அல்ல எந்த மகராசா வந்தாலும் தமிழ் முஸ்லிம் வாக்குகள் எந்தப் பக்கம் அதிகரிக்குமோ அந்த வாக்குகள் அதிபரை தீர்மானிக்கும் .

சில பேருவல முஸ்லிம்கள் கோத்தாவை அழைத்து இப்தார் செய்தால் முஸ்லிம் கூட்டமும் ஆதரித்து விட்டது என்று அர்த்தப்படுமா ?

ஆனால், ஜனாதிபதி ஆபத்தான ஒரு அரசியல் நகர்வை செய்து வருவது நல்லதல்ல !....