தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ!

Report Print Tamilini in கட்டுரை

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சுப் பதவி யில் இருந்து நீக்கியமை தவறானது.

மாகாண சபை அமைச்சர் ஒருவரின் பத வியை பறிப்பதாக இருந்தால் அந்த அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உண்டு.

மாறாக அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு கிடையாது என நீதிமன்றத் தீர்ப்புத் தெரிவித் துள்ளது.

பொதுவில் மாகாண சபை முறைமை என் பது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்டது.

எனினும் தமிழ் மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமை இலங்கை முழுமைக்கும் உரியதாக ஆக்கப்பட்டது.

இங்கு மாகாண சபை அதிகாரத்தில் ஏற்படு கின்ற ஏற்றத்தாழ்வு என்பது, தமிழ் மக்களுக் குரிய மாகாண சபைக்குப் பாதகமேயன்றி ஏனைய மாகாண சபைகளில் அவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

எனவே, மாகாண சபைக்கான அதிகாரம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருப்பதுதான் ஏற்புடையது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக தமிழ் அரசிடம் இருக்க வேண்டிய அதிகாரத்தை நாங்களே அவர்களிடம் கொடுத்ததாக நிலைமை முடிந்து விட்டது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் டெனீஸ் வரனின் அமைச்சுப் பதவியை வடக்கின் முதல மைச்சர் நீக்கியமை செல்லுபடியற்றது.

மாகாண அமைச்சர் ஒருவரைப் பதவி நீக்கம் செய்வதாக இருந்தால், அதனை ஆளுநரே செய்ய முடியும் என்பதை நீதிமன்றத்தினூடாக நிரூபித்ததன் மூலம்; தனி மனித வெற்றியைச் சாதித்ததாகக் கருதலாமேயன்றி,அது எங்கள் தமிழினத்துக்குப் பாதகமான தென்பதே உண்மை.

அதாவது வடக்கு மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் தான் இழந்த அமைச்சுப் பதவிக் காக வழக்கு வைத்து அதில் வெற்றி பெற்றி ருப்பதென்பது அவருக்குத் தனிப்பட்ட சாதகத் தன்மையைக் கொடுத்திருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தைப் பொறுத்தவரை, மாகாண சபைக்கென இருந்த ஒரு முக்கியமான அதி காரம் ஆளுநருக்குக் கடத்தப்பட்டுள்ளது என் பதே உண்மை.

இந்த நிலைமை தமிழ் மக்களுக்குப் பாதக மாக அமையும் என்பதோடு, எதிர்காலத்தில் தமி ழர் அரசில் அமைச்சர்கள் யாராக இருக்க வேண்டும் என்பதையும் ஆளுநர் ஊடாக மத் திய அரசே தீர்மானிக்கப் போகிறது.

ஆக, தமிழ் மக்களுக்கு - தமிழர் அரசுக்கு இன்னும் அதிகாரம் தேவை என்று வழக்கு வைத்து வாதிட வேண்டியவர்கள், தங்களிடம் இருக்கின்ற அல்லது இருப்ப தாக நிலைநிறுத்தக்கூடிய அதிகாரத்தையும் ஆளுநரிடம் ஒப்படைப்பதற்காக நீதிமன்றம் ஏறி தீர்ப்பை பெற்றனர் எனும்போது, தமிழன் தமிழனைத் தோற்கடித்து பெரு மிதம் கொள்வதாக நிலைமை மாறிவிட்டது.

எது எவ்வாறாயினும் இன்று மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரனுக்கு மீளக் கிடைத்த பதவி அவரைத் தனிப்பட்ட முறையில் ஆற்றுப்படுத்தினாலும் இந்த முடிவுக்காக என்றோ ஒரு காலத்தில் தமிழினம் நொந்து கொள்ளும் என்பது நிறுதிட்டமான உண்மை.

- Valampuri