முதலமைச்சர் மீதான எதிர்ப்பை நிர்மூலமாக்காவிட்டால்...

Report Print Tamilini in கட்டுரை

தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் மக் களிடம் ஆரோக்கியமான கருத்துநிலை இல்லை என்பது தெளிவு.

ஆக, வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் மட்டுமே தமிழ் மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.

எனினும் தனிமனிதராக நின்று முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் யதார்த்த பூர்வமான கருத்துக்களைக் கூறுவதால் அவருக்கான எதிர்ப்பு தமிழ் அரசியல் தரப்பிடம் கடுமையாக ஏற்படவே செய்கிறது.

அதாவது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான கருத்துக்களும் தென்பகுதி அரசியல்வாதி களுக்கு உடனுக்குடன் வழங்கும் பதில்களும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கின்ற விடயங்களும் யதார்த்தமானவை என்பதுடன் அவர் இருப்பதால்தான் தமிழ் மக்களின் உள் ளக்கிடக்கை வெளிப்படுத்தப்படுகின்றது என்ற நம்பிக்கையையும் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

எனினும் தமிழ் அரசியல் தரப்புக்கு இது உடன்பாடில்லை என்றபோதுதான் முதலமைச் சருக்கு எதிரான கருத்துக்கள் சுவாலைவிட்டு எரிகிறது.

எவ்வளவுதான் நெருப்பு எரிந்தாலும் அந்த எரிதலை தணித்து முதலமைச்சரின் கருத்தை நிலைநிறுத்த தமிழ் மக்கள் தயாராக இருக் கின்றனர் என்பது நிறுதிட்டமான உண்மை.

இருந்தும் தமிழ் மக்கள் விடயத்தில் சகல ரும் ஒரே கருத்தை; ஒரே கொள்கையைக் கொண்டிருக்கும் போதுதான் தமிழ் மக்களுக்குப் பலமாக அமையும்.

ஆனால் அத்தகைதொரு பொது உடன்பாடும் ஒற்றுமையும் ஏற்படக்கூடிய வாய்ப்பு அறவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அதாவது தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு தரப்பினர் சிங்கள ஆட்சியாளர்களிடம் சரணா கதியடைந்து விட்டனர்.

இந்தச் சரணாகதி எதற்கானது என்பது தெரியாவிட்டாலும் அவர்களால் ஆட்சியாளர்களிடம் இருந்து இனிமேல் மீண்டுவர முடியாது என்பது மறுதலிப்பற்ற உண்மை.

இதுதவிர, தமிழின அழிப்பு நடவடிக்கை யில் ஈடுபட்ட தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் அரசிடம் சரணாகதியடைந்த தமிழ் அரசியல்வாதிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டதன் காரணமாக நிலைமை மிகமோசமாகிவிட்டது.

இதன்பின்னணியாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கான எதிர்ப்பு என்பது தமிழ் அரசியல் தரப்பிடம் வலுவடை ந்து வருகிறது.

இந்த எதிர்ப்பை தமிழ் மக்கள் முறியடிக்கத் தவறினால் அதன் விளைவு தமிழினத்தின் கதை முடிந்தது என்பதாகவே இருக்கும்.

எனவே யுத்த காலத்தில் இருந்த நிலைமையை விட இப்போதுதான் மிக மோசமான நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமைகளை வெற்றி கொள்வ தில்தான் தமிழர்களின் எதிர்கால வாழ்வு தங்கியுள்ளது.

- Valampuri