அமெரிக்காவின் வாக்களிப்பு சிஸ்டத்தையே மாற்றியமைத்து உலகையே அதிரவைத்துள்ள 11 வயது சிறுவன்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்துள்ள ஹேக்கர்கள் (ஒருவரின் கணினி தரவுகளுக்குள் அத்துமீறிப் புகுந்து விரும்பியபடி மாற்றுவது) போட்டியில் தேர்தல் சிஸ்டத்தின் மாதிரியை 10 நிமிடத்தில் 11 வயது சிறுவன் ஹேக் செய்து தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளான். இது அந்நாட்டு தேர்தல் சிஸ்டத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த காலங்களாக இந்தியாவில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்னர் இப்படி பல இடங்களில் இந்த மாதிரியான முறையில் தேர்தல் வாக்களிப்பு சிஸ்டத்தை மாற்றியுள்ளதாக இன்னும் எதிர்கட்சிகளால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இப்படியான ஹேக்கர்'கள் கடந்த 5 வருடமாக இலங்கையின் பல அமைச்சுக்களை ஊடுருவி தாக்கி அழித்துள்ளதை நாம் அறிந்தோம் .இலங்கை அமைச்சின் பல திணைக்களங்களின் தரவுகளை அழித்திருந்தார்கள்.

அமெரிக்காவில் கடந்த வாரம் 'டெப்கான்' என்ற கணினி பாதுகாப்பு மாநாடு நடந்தது. அமெரிக்கத் தேர்தல் கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சங்களை சோதிக்கும் நோக்கத்தோடு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஹேக்கிங் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது.

6 முதல் 17 வயதுடைய 35 சிறுவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் நடத்தப்படும் தேர்தலின் மாதிரி சிஸ்டத்தை ஹேக் செய்வதே இந்த போட்டியின் இலக்கு.

போட்டி தொடங்கிய 10 நிமிடத்தில் 11 வயது சிறுவன் சிஸ்டத்தை ஹேக் செய்து பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கைஇ வேட்பாளரின் பெயர் ஆகியவற்றை மாற்றிக்காட்டி முதலிடம் பிடித்தான்.

தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடிக்கும் போது இதுபோல ஹேக் செய்து முடிவுகளை மாற்ற வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இது அந்நாட்டு தேர்தல் அமைப்பினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இது உலகையே அதிர வைத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க தேர்தல் அதிகாரிகள், இது போன்ற மாநாடுகள் வரவேற்கத்தக்கது. இந்த முறையில் உள்ள குறைகள் அந்தந்த மாநிலங்களிடம் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.

இந்தியாவில் IT தொழில்நுட்பம் உலகில் முதல் இடம் வகிக்கின்றது . இந்த நிலையில் அமெரிக்காவின் 11 வயது சிறுவன் ஒருவனால் முடியுமானால் IT தொழில்நுட்பம் படித்துள்ள இந்தியர்கள் சும்மா பிச்சிப் புடுங்குவார்கள்.

இந்திய ஆட்சி பிராமணர்களின் கையில் இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைகின்ற நிலையில் இந்த தகவல் எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கட்டுரையை தந்துள்ளேன்.

அண்மையில் மேற்கு வங்கத்தில் நடந்துள்ள வாக்குப் பதிவு மெசினில் எந்த பட்டனை அமுக்கினாலும் அது பிஜேபி சின்னமான தாமரை மொட்டுக்கே போனது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார்.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் இந்த ஜில்மார்ட் வேலை நடந்து கொண்டுதான் வருகின்றது.

இந்த அமெரிக்க சிறுவனை தேடிப் பிடித்து எவனாவது 1௦௦ கோடியாவது கொடுத்து அந்த சிறுவனிடம் கற்றுக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பு சிஸ்டத்தையே மாற்றியமைத்து நாட்டின் ஆட்சியையே மாற்றி அமைக்கலாம்.

சிறுவன் அமெரிக்காவில் இருந்து கொண்டு எதிர் வரும் காலங்களில் இந்தியா இலங்கை ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரலாம் .

யார் பெற்ற பிள்ளையோ உலகையே அதிர வைத்துள்ளான் .இந்த சிறுவனை இந்த நேரம் எவன் தொடர்பு கொண்டு விட்டானோ தெரியாது .

எப்படியும் தேர்தல் வாக்களிப்பு சிஸ்டத்தையே மாற்றியக்கலாம் என்பதை இந்த சிறுவன் மூலமாக உலகுக்கு உத்தியோகப்பூர்வமாக காட்டி நிரூபித்துள்ளான்.

10 நிமிட நேரத்தில் ஒரு நாட்டின் ஆட்சியை இந்த சிறுவன் மாற்றி அமைப்பான். தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தேநீர் இடைவெளி கிடைக்கும் போது இந்த சிறுவன் தேர்தல் முடிவுகளை தலை கீழாக மாற்றி அமைப்பான்.

இந்த சிறுவன் மட்டுமல்ல போட்டியில் பங்களிப்பு செய்த 34 சிறுவர்களும் ஹேக்கர்' கள்தான் ஆனால் அதை மிகவும் துரிதமாக இந்த சிறுவன் செய்து முடித்தான்.

ஆக இனி வரும் காலங்களில் தேர்தலின் வெற்றியை ஒரு லப்டப் தீர்மானிக்கும் ..அப்போ நிச்சயம் இலங்கையில் ஆட்சி மாற்றம் செய்து விடுவார்களோ??? என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு..