கனகராயன்குளத்தில் தாவூத் ஹோட்டலை மூடுமாறு போராட்டம்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை
1151Shares

முல்லைத்தீவு கனகராயன்குளத்தில் தாவூத் ஹோட்டலை மூடுமாறும் அதன் நடத்துனர் மற்றும் பொலிஸாரும் சேர்ந்து தமிழ் குடும்பம் மீது கண்மூடித்தனமாக தாக்கியதற்கும் எதிராக வெடித்தது போராட்டம்.

தாவூத் ஹோட்டல் இயங்கும் காணி முன்னாள் போராளிக்கு வழங்கபட்ட காணியாம். இந்த காணி உரிமையாளர் முஸ்லிம் ஒருவருக்கும் முன்னாள் போராளிக்கும் இடையில் வாய்த் தகராறு நடந்துள்ளது .

ஹோட்டல் உரிமையாளர் பொலிஸ் OIC யை கைக்குள் போட்டு விட்டார். அந்த OIC முன்னாள் போராளியின் வீட்டுக்குள் நேற்று சிவில் உடையில் சென்று கண்மூடித்தனமாக முன்னாள் போராளி, அவர் மனைவி, 13 வயது மகள், 15 வயது மகன் உட்பட 4 பேரையும் தாக்கி அடித்து உதைத்து விட்டு மறைந்து விட்டார். 4 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 2 பிள்ளைகளும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இது குறித்து தமிழ் எம்பி ஒருவர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எடுத்து கூறியுள்ளனர்.

இந்த கொடிய செயலை எதிர்த்து தற்போது மக்கள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக அல்லவா இருக்கு.

முன்னாள் போராளிகள் இன்று சமுகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக உள்ள நிலையில் அந்தக் காணியை அபகரித்தது மகா தவறு. மட்டக்களப்பில் தமிழ் பகுதி காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பு செய்வது அதிகரித்து வருகின்றது.

நிலத்தடி நீரை உறுஞ்சும் புல்லுமலையில் தண்ணீர் பாக்டரி, சவக்காலை காணி அபகரிப்பு ஓட்டமாவடியில் காணி அபகரிப்பு. அக்கரைப்பற்றில் தமிழ் பகுதியில் உள்ள களப்பு காணியை முஸ்லிம் நபர் விலையாகப் பெற்றது இப்போது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முல்லைத்தீவு வரையும் முஸ்லிம் காணி பகரிப்பு போய் விட்டது.

முஸ்லிம்கள் இப்படியாக தமிழ் பகுதி காணிகளை அத்து மீறி பிடித்து வருவதால் வடகிழக்கு முஸ்லிம்களுக்கு எதிராக பரவலாக விஷம் விதைக்கப்பட்டு வருகின்றது.

இந்த அத்து மீறலுக்கு சில அதிகாரிகளும் துணை போவது கண்டிக்கப்பட வேண்டும். இந்த விஷம் விதைப்பு அனேகமாக மட்டக்களப்பில் ஒரு இனக்கலவரமாக மாறி விடுமோ என்ற அச்சம் எமக்குள்ளது எங்காவது தமிழன் முஸ்லிம் பகுதி காணிக்குள் அது மீறிய ஒரு சம்பவம் இதுவரை வரவில்லை.

வடகிழக்கில் தமிழ் பகுதிக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக காணிகளை பிடிக்க வேண்டாம் என்றும் தமிழ் பகுதிக்குள் வியாபார நிலையம் அமைக்க வேண்டுமானால் குறுக்கு வழியில் செல்லாமல் அந்த ஏரியா மக்களின் ஒத்துழைப்பு பெற்று இயங்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் சகல முஸ்லிம்களுக்கும் சொல்ல வேண்டாமா ?

அதி விசேடமாக வாழைச்சேனை ஓட்டாமாவடி ஏறாவூர் காத்தான்குடி பகுதிகளில் பள்ளிவாசல்கள் மூலமாக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் . இனமுறுகலை உண்டுபண்ணகூடிய செயல்களை தடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மத அமைப்புகளுக்கு உள்ளது .

நீண்ட காலங்களாக அடிக்கடி மோதிக் கொண்ட இரண்டு தரப்பும் அண்மைக்காலமாக ஒற்றுமையாக வாழும் நிலையில் இந்த காணி அத்துமீறல் பாரிய கசப்புணர்வை கொண்டு வந்துள்ளது. இவைகளை முற்றாககளைய வேண்டுமானால் முஸ்லிம்கள் தமிழ் பகுதிக்குள் அத்துமீறுவது தடுக்கப்பட வேண்டும். அதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் மக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இல்லையேல் ஒரு இனகலவரம் தவிர்க்கமுடியாத ஒன்றே தமிழ் ஒற்றுமை மேலோங்க வேண்டும்.