இந்தியாவும் இலங்கை அரசும் முறுகல்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இந்தியாவிடம் வழங்கப்படாது என்று சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை இலங்கை விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பலாலி விமான நிலையத்தை இந்தியா அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவித்த நிலையில்,

கடந்த மாதம் இந்திய தூதுக் குழுவினர் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டுச் சென்று இந்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ள நிலையில்தான் திடீரென்று இலங்கை அந்தர் பல்டி அடித்துள்ளது.

சீனாவின் கட்டளைக்கு அடிபணிந்து இந்தியாவை ஒதுக்கி அவமானப்படுத்துவது போன்று இலங்கை அரசு இப்படி நடந்துள்ளது. இலங்கையின் இந்த திடீர் மாற்றத்தினால் இலங்கை அரசு இந்தியாவின் முறுகல் நிலை ஒன்று உருவாகியுள்ளது.

இந்த வாரம் இந்திய வெளியுறவு அதிகாரிகள் கொழும்பு வருவார்கள் இந்தியாவின் கண்டனத்தை தெரிவிப்பார்கள், இந்த விடயத்தில் இந்தியாவை எப்படி சமாளிப்பார்கள்.

இலங்கை ஏன் இந்தியா மீது அஞ்சுகின்றது

இந்தியா பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் போது இலங்கைக்கு தெரியாமல் பலாலி விமான நிலையத்தில் பூமிக்கு அடியில் விமான கண்காணிப்பு கருவிகளை பொருத்தி பலாலி விமான நிலையத்திற்கு வந்து போகும் விமானங்கள் மற்றும் பலாலி விமான நிலைய அசைவுகளை டெல்லியில் இருந்து கொண்டு இந்திய விமான உளவுப்பிரிவினர் அறியக்கூடியதாக இருக்கும் என்று இலங்கை அஞ்சுகின்றது.

அதனால்தான் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் நிமல் டி சிறிபால தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கையின் இந்த திடீர் மாற்றத்தின் பின்னணியில் சீனா உள்ளதாக நாம் ஊகிக்கலாம்.

ஆனால் இந்தியா இலங்கை அரசு இந்த முறுகல் நிலை தொடருமானால் முன்னாள் அதிபர் மகிந்தவுக்கு மேலும் சாதகமான நிலை அமைந்து விடும்.