மூக்குடைபட்ட தமிழக காவல்துறை! புலனாய்வு பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் விடுதலை

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

தமிழகத்தின் பிரபல மூத்த பத்திரிக்கையாளரும் வாராந்த புலனாய்வு இதழ் "நக்கீரன் ஆசிரியருமான மீசை நக்கீரன் கோபால் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐபிசி 124-வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தொடர்பாக வெளியான செய்திக் கட்டுரை தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பொலிஸ் கமிஷனரை ஆளுநரின் செயலாளர் நெருக்குதல் கொடுத்து இவ்வாறு கைது செய்துள்ளார்கள்.

இதவேளை சென்னை பொலிஸ் தரப்பு அண்ணன் கோபாலை கைது செய்ய விரும்பவில்லை என்ற தகவலும் உள்ளது. ஆனாலும் ஆளுநரின் அழுத்தம் அதிகரித்துள்ளது. என்ன வழக்கு போடுவது என்று பொலிஸ் தடுமாறியுள்ளது.

அண்மையில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரை புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்லூரி மாணவிகளை பாலியல் பேரத்தில் தள்ளியதாக கைதாகி சிறையிலுள்ள நிர்மலா தேவி 4 முறை ஆளுனரை சந்தித்ததாக வெளியான அட்டைப்பட கட்டுரைதான் இந்தக் கைதுக்கு காரணம் என தெரிகிறது.

புனேவுக்கு செல்வதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த நக்கீரன் கோபாலை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக ஆளுநர் பற்றி தொடர்ந்து நக்கீரனில் கட்டுரைகள் வெளிவந்துள்ளது.

கோபால் மீது தேச துரோக வழக்கு பிணைந்து பிணையில் வெளிவரமுடியாமல் வழக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயாலலிதாவின் ஆட்சிக் காலத்தில் ஒரு வருடம் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தார்.

நிர்மலா விடயத்தில் தகுந்த ஆதாரமாக நிர்மலா கொடுத்துள்ள வீடியோ உள்ளது. ஆளுநர் தாத்தாவுக்கு இனிமேல் சாவு மணி தான்.

நடந்தது என்ன?

நேற்று கைது செய்யபட்ட கோபால் நேற்று மாலையே விடுதலையானார். ஐபிசி 124-வது பிரிவின் கீழ் கைது செய்தது செல்லாது என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நக்கீரன் கோபால் விடுதலை! – நீதிமன்றம் உத்தரவு

நக்கீரன் கோபாலை ஐபிசி 124-வது பிரிவின் கீழ் கைது செய்தது செல்லாது என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக வெளியான கட்டுரையின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 124-ன் கீழ் (தேச விரோதம்) வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

இதனிடையே, சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவர் காவல்நிலைய வாயிலில் தர்ணா மேற்கொண்டார். வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க கோரியும் மறுப்பு தெரிவித்த காவல்துறையை அவர் கடுமையாக கண்டித்தார். இதைத்தொடர்ந்து வைகோவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு நக்கீரன் கோபால் அழைத்துச்செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவசோதனையின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து, நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, நக்கீரன் கோபாலை சந்திக்க வந்த இந்து முன்னாள் ஆசிரியர் என்.ராம், நீதிமன்றத்திற்குள் அனுதிக்கப்பட்டார். பின்னர் நீதிபதியின் அழைப்பின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக இந்து என்.ராம் கருத்து தெரிவித்தார்.

அதில், ஐபிசி பிரிவு 124 இந்த வழக்கில் செல்லுபடியாகாது என்று அவர் தெரிவித்தார். இதை ஏற்றால் தவறான முன்னுதாரனமாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி கோபிநாத், 124வது பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தது செல்லாது என்றார். மேலும், நக்கீரன் கோபாலை விடுதலை செய்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார்.

விடுதலையை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நக்கீரன் கோபால் செய்தியாளர்களை சந்தித்த போது, கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதி நின்றது. துணைநின்ற அனைவருக்கும் நன்றி என அவர் கூறினார்.

தமிழக அரசின் அநியாயம் தொட்டு தமிழகத்தில் நடக்கும் கொலை,கொள்ளை, மாபியாக்கள் நடத்தும் மண் குவாரிக் கடத்தல், லஞ்சம் இப்படியாக மக்கள் விரோத செய்திகளை வாரம் இருமுறை வெளிவரும் நக்கீரன் இதழில் படிக்கலாம் .

அரசுக்கு மட்டுமன்றி மக்கள் விரோத சக்திகளுக்கு தமிழ் நாட்டில் சிம்ம சொப்பணமாக இருப்பவர் நமது மீசை கோபால் அண்ணன்.

வடக்கில் ஈழத் தமிழன் படுகொலை தொட்டு அங்கு நடந்த மனித பேரவலத்தை மனித படுகொலையை தமிழ் உலகத்திற்கு நக்கீரன் மூலம் கொண்டு சென்றவர் அண்ணன் மீசை கோபால் மற்றப் பத்திரிகை ஜூனியர் விகடன் மற்றும் ஆங்கிலத்தில் உலகிற்கு கொண்டு சென்றவர் சிரியாவில் கொல்லப்பட்ட அன்னை மேரி கொல்வின்.

இந்த இருவரையும் ஈழத் தமிழன் மறக்கவும் மறைக்கவும் முடியாது அண்ணன் கோபால் என்பவர் உலக தமிழனனின் ஊடக சொத்து. நக்கீரனின் புலனாய்வு செய்தி திறமையை யாரும் நசுக்க முடியாது. அதை விடவும் கூடாது காற்று உட்புக முடியாத இடத்திலும் விடுதலைப் புலிகள் புகுந்து விடுவான் அதே போன்று நக்கீரன் காற்று புக முடியாத இடத்திலும் புகுந்து புலனாய்வு செய்திகளை திரட்டி விடுவான்.

ஒரு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாத்தா நக்கீரனின் குரல் வளையை நசுக்க நினைப்பது ஜனநாயக துரோகம் இல்லையா? ஆளுனரின் காம லீலைகள் விரைவில் வெளிவரப்போகின்றது. விரைவில் பிஜேபி ஆளுநர் தமிழ் நாட்டை விட்டு தூக்கப்படுவார். ஆளுநரின் பதவி பறிபோகும். அதுவரையும் நக்கீரன் தூங்காது. அதன் புலனாய்வு பணியும் முடியாது அண்ணன் கோபாலின் பணியும் ஓயாது.

தமிழகத்தின் இரும்பு சீமாட்டி ஜெயலலிதா தனது உச்ச பட்ச அதிகாரத்தின் மூலமாக நக்கீரன் இதழை மூடி காலம் முழுவதும் அண்ணன் கோபாலை சிறையில் தள்ள படாதபாடுபட்டு தோல்வி கண்டு மறைந்து போனார். இப்போது வெளிமாநில ஆளுநர் தாத்தா மோதுகின்றார் பாவம் தாத்தா தமிழ் நாட்டை விட்டு ஓடிப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Latest Offers