திருகோணமலையில் பௌத்த தேரரின் தகனக்கிரியையும் ஊமையாகிப் போன கூட்டமைப்பும்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

தமிழர், தமிழர் என்று மாற்று இனத்திற்கு எதிராக பொங்கும் போராளிகளும், சேனைகளும் திருகோணேச்சரத்திற்கு அருகில் ஒரு பிணத்தை எரிக்கும் வரை, வாயை மூடிக்கொண்டு இருந்தது ஏன் என்று தெரியவில்லை.

அச்சுறுத்தல் வராத போராட்டங்களையும். பிரச்சனை வராத வேலைகளையும் தான் செய்வார்களோ அதுவும் புரியவில்லை. என்று மக்கள் அங்கலாய்கின்றனர்.

நகராட்சி மன்ற தலைவர் ராசநாயகம் ஒரு சட்டத்தின் உதவியை நாடி தடை உத்தரவு பெற்று இருக்க முடியாதா? என்ற கேள்வி பலமாகவுள்ளது அவசரமாக சபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு எதிர்ப்பை காட்டியிருக்க முடியாதா?

சமூக போராளிகள் ஆளுனரை சந்தித்து எதிர்ப்பை சொல்லியிருக்க முடியாதா? குறைந்தது கண்டனத்தையாவது தெரிவித்து இருக்க முடியாதா? திருமலையில் தைரியமான நகரசபை தலைவரின் வெற்றிடம் இன்னும் நிரப்பப் படாமல்தான் இருக்கிறது.

நகர சபையில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. பல எதிர்ப்புகள் இருந்தும் சகோதர இன உறுப்பினர்கள் தாமாகவே ஆளுநரிடம் சென்று அனும‌தி பெற்றதாக அறிய முடிகிறது.

சிங்கள மக்களுக்கு பௌத்த மயானம் திருகோணமலையில் தனியாக இருக்கிறது. இதற்கு முன்னரும் சபையில் உறுப்பினர்கள் இல்லாத காலப்பகுதியில் அரச அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு பௌத்த மதகுருக்களை மைதானத்தில் எரித்து இருக்கிறார்கள். இது மூன்றாம் முறை அதே அத்துமீறல் இந்த நல்லாட்சியில் ஒரு கலவரத்திற்கு வித்திடப்பட்டதா ?

சிங்கள மக்களுக்கு தனியான பௌத்த மயானம் திருகோணமலையில் தனியாக இருக்கின்றது. தமிழ் கூட்டமைப்பு, ரணில் தலைமை கொண்ட அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் திருமலை நகரின் பிரபல விளையாட்டு மைதானத்தில் திருகோணேச்சரத்திற்கு அருகில் ஒரு பௌத்த தேரரின் தகனகிரியை வேண்டுமென்றே திடீர் திட்டம் ஒன்றின் மூலம் நிறைவேற்றப்பட்டதா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

பௌத்த தேரரின் தகனகிரியை நடத்தி அதன் மூலம் தமிழ் மக்களை ஆளும் அரசுக்கு எதிராக ஒரு எதிர்ப்பை நடத்தும் உள்நோக்கம் ஏதும் இருந்திருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலையாகவே உள்ளது.

அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனிமேல் இப்படியான மக்கள் வெறுப்பு செயல்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் தனது செல்வாக்கின் மூலமாக பௌத்த தேரரின் தகனகிரியை நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.

Latest Offers