மறந்து விட்ட ஈழத்தின் போர்க்குற்றமும் ரணிலைக் காப்பாற்ற தமிழ் கூட்டமைப்பு நடத்தும் மரணப் போராட்டமும்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

ஈழத்தில் சுமார் 2 இலட்சம் மக்களை கொன்று குவித்த ஈழத்தின் போர்க்குற்ற விசாரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டுள்ளது.

கடந்த பொது தேர்தல் காலத்தில் தமிழ் தரப்பு சர்வதேச விசாரணை என்று சொன்னது. அதன் பின்னர் கலப்பு விசாரணை உள்நாட்டு விசாரணை என்று சொன்னது. பின்னர் பின்னால் சர்வதேச விசாரணை உலக தரத்தில் நடத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொன்னது.

அத்துடன் அதே காலப்பகுதியில் மகிந்தவை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றி விட்டதாக நல்லாட்சி அரசாங்கதின் ஜனாதிபதி மைத்திரி பல இடங்களில் சொல்லி வந்தார். அப்படியே தெற்கில் பிரச்சாரம் செய்தது.

ஜெனீவா மனித உரிமை அரங்கில் மனித உரிமை ஆணைக்குழுவில் கால அட்டவணை பொறிமுறை என்று 2 வருஷ கால அவகாசம் வேண்டும் என்று இலங்கை அரசு கோரிய போது அந்தக் கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. அந்த 2 வருடமும் கடந்து விட்டது.

இப்போது உள்நாட்டில் தமிழ் தேசியக் கூடமைப்பு முற்றாக போர்குற்ற விசாரணையை மறந்து விட்ட நிலையில் சர்வதேசம் இந்த விடயத்தில் ஆர்வம் காட்ட வேண்டிய தேவைதான் என்ன? எல்லோரும் மறந்த கதையாகி விட்டது ஈழத்தின் போர்க்குற்ற விசாரணை.

ரணிலை ஆதரிக்கும் தமிழ் கூட்டமைப்பு

நாட்டில் மஹிந்த பிரதமாராக திடீரன்று நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற நிலைதான் இன்னும் உள்ளது. இந்த நிலையில் தான் நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஹக்கீம் காங்கிரஸ் ஒரு மரணப் போராட்டம் நடத்தி நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

அதன் பின்னர் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்றோம் என்று சொல்லி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றியது. தமிழ் தேசியக் கொள்கை கொண்ட சிறீதரன் எம்.பி போன்றோரின் பெருத்த அதிருப்திக்கு மத்தியில் கட்சிக்குள் பல முரண்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்ட கட்சி தலைவர் சம்பந்தருடன் நேரடியாக கருத்து முரண்பட்ட நிலையில் இப்போது ரணிலைக் காப்பற்ற ரணிலை பிரதம மந்திரியாக நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது 14 எம்பிக்களின் ஆதரவுக் கையொப்பத்துடன் களம் இறங்கியுள்ளது.

உண்மையில் சொல்லப்போனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலையும் ரணில் சார்ந்த கட்சியையும் காப்பாற்றுவதற்காக உள்நாட்டிலும் சர்வதேசத்திடமும் ஒரு மரணப் போராட்டம் இன்னும் நடத்திவருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்படியான ஒரு மரணப் போராட்டத்தை ஈழத்தில் சுமார் 2 லட்சம் மக்களை கொன்று குவித்த ஈழத்தின் போர்க்குற்ற விசாரணையை நோக்கிய நகர்வில் ஏன் செய்யவில்லை? நல்லாட்சி என்ற இந்த ரணிலின் ஆட்சியில்தானே கடந்த 3 வருடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சி என்று ரணிலின் ஆதரவு கொண்ட கட்சியாக இருந்துள்ளது.

அப்படியானால் எதிர்கட்சி என்ற போர்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலின் ஆதரவு கொண்ட அணியாக கடந்த 3 வருடமாக ஒளிந்து கொண்டு நல்லாட்சி என்று தமிழ் மக்களை ஏமாற்றி ஒளிந்து கொண்டுள்ளது என்று தானே அர்த்தப்படும்.

ரணிலின் நல்லாட்சியில் தமிழ் மக்களின் பலதரப்பட்ட பிரச்சினையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதித்து என்னவன்று பார்த்தோமானால் வடக்கில் மக்களின் காணிகள் கொஞ்சம் விடுவிக்கப்பட்டுளது. அதை தவிர வேறு ஏதாவது நடந்துள்ளதா?

கடந்த 3 வருடமாக ஆட்சி என்பது ஒரு பொம்மை ஜனாதிபதியின் ஆட்சியில் ரணிலின் முழு அதிகாரம் கொண்ட ஆட்சி. இந்த ஆட்சியில் ரணிலையும் ரணில் சார்ந்த கட்சியையும் காப்பாற்றிய பொறுப்பில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலம் கடத்தியுள்ளது.

இப்போது நேரடியாக ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அடுத்த கட்ட மரணப் போராட்டம் நடத்தி வருகின்றதன. பக்க துணையாக வண்டுமுருகன் வக்கீல் அணிகொண்ட முஸ்லிம் தரப்பு இன்னுமொரு மரணப்போராட்டம் நடாத்தி வருகின்றன.

இலங்கை முஸ்லிம் அரசியலை விமர்சிக்க முடியாது. காரணம் முஸ்லிம் அரசியல் என்பது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரை இரண்டு சிங்கள கட்சிகளின் நலன் கொண்டு தங்களுக்கு கிடைக்கும் அமைச்சு பணம் மற்றும் மேலதிக பதவிகள் கொண்டு ஆளும் வர்க்கத்தின் ஒரு அணி.

முஸ்லிம் அரசியல் என்றாலே அது பலபக்க வியாபாரம் கொண்ட அரசியல். முஸ்லிம் அணி என்பது சமுகம் சார்ந்த அரசியல் அல்லாத வியாபார நோக்கம் கொண்ட கட்சிகள். முஸ்லிம் அணிகளுக்கு கொள்கை நோக்கம் எதுவும் இல்லை. மக்கள் நலன் இல்லை. அப்படிபட்ட ஒரு கட்சியை ஒரு போதும் மக்கள் நலனை எதிர்பார்க்க முடியாது.

இந்தக் கட்சிகளை ஒரு போதும் தமிழ் சமூகமோ அல்லது தமிழ் அரசிலோ நம்ப முடியாது. 2000 ஆண்டுக்குப் பின்னர் முஸ்லிம் ரணில் ஆதரவு கொண்ட அணியாகவே உள்ளது.

இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் ரணிலை ஆதரிக்கும் நகர்வில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை செய்துள்ளன. ஆனால் ரணிலிடம் தமிழ் மக்கள் நலன் கருதி என்ன கோரிக்கை முன்வைத்துள்ளன என்பது குறித்த எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் ஈழத்தின் போர்க்குற்ற விசாரணை பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் வாயே திறக்கவில்லை என்ற கதை வெளியாகியுள்ளன. ஆக மொத்தத்தில் ஈழத்தின் போர்க்குற்ற விசாரணை பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் எவ்விதமான பேச்சும் பேசவில்லை என்பது மட்டும் உண்மை. ஊர்ஜிதம்.

இப்பொழுது ரணில் சொல்லுகின்றார் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தமிழர் தரப்பு முன்வைத்துள்ள புதிய அரசமைப்புக்கான வேலை திட்டங்களை நடைப்முறைப்படுத்துவேன் என்று ரணில் சொல்லுகின்றார். இது சாத்தியமாகுமா என்பது பலத்த கேள்விகளை கொண்டுள்ளது. தமிழர் தரப்பு சிங்களத்தின் இன்னுமொரு ஏமாற்றத்தில் உள்ளாகுமா என்ற கேள்வியும் பலமாகவே உள்ளது.

மலையாளிகள் தமிழர்கள் மீது ஏன் இந்தக் கொலைவெறி

ஈழப் படுகொலையில் மலையாளிகளின் பங்கும் இந்தியாவின் வகிபாகமும் என்ற தலைப்பில் 2009 போரில் புலிகள் அழிக்கப்படவும் ஈழப் படுகொலையில் 175,000 தமிழர்கள் கொல்லப்படவும் மிக முக்கிய காரணம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி. அந்த உதவிகளுக்கு முக்கிய காரணம் மலையாளிகள் என்ற நீண்ட கட்டுரையில் ஈழப் படுகொலையில் மலையாளிகளின் பங்கும் இந்தியாவின் வகிபாகமும் என்று பார்த்தோம்.

ஆமா. ஏன் தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு போதும் ஒரு நாளும் ஒத்துப் போகவில்லை. இனிமேலும் ஒத்துப்போகவும்மாட்டாது. இந்தியாவிலும் தமிழக தமிழர்கள் என்றால் மலையாளிகள் வேற்று கிரகவாசிகள் போன்று தான் பார்க்கின்றார்கள்.

ஒற்றுமைப்படாத ஈழத் தமிழர்கள் இலக்கை அடைய முடியாது

இப்போது கூட நாம் உறுதியாக சொல்லுவோம் ஈழத் தமிழர்கள் இந்திய மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தாத வரை ஈழத் தமிழர்கள் எந்தவொரு இலக்கையும் அடைய முடியாது என்பதை அடித்து சொல்லுவோம்.

அதிலும் குறிப்பாக பிரித்தானியா மற்றும் இந்தியாவில் முதலீட்டு ஆதிக்கத்தில் உள்ளவர்கள் நினைத்தால் இந்திய அரசியலில் மிக அதிக வகிபாகம் கொள்ளலாம். இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் பெரும் முதலீடுகளைச் செய்யம் அமைப்புக்கள் பணம் உழைப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இப்போது உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஈழத்தில் ஒரு பொது வாக்கெடுப்பை நோக்கிய ஒரு குரல் கொடுத்து வந்தாலும் அது நிறைவேறும் நிலை வந்தாலும் இந்திய நாட்டாமை மூலம் அது தடைப்படும்.

அப்பாடியானால் ஈழத் தமிழர்கள் முதலில் ஒரு பரந்த ஒற்றுமை மூலமாக ஒன்றுபட வேண்டும். உலகம் முழுவதும் ஈழத் தமிழர்கள் வாழும் அந்தந்த நாட்டில் தங்கள் செல்வாக்குகள் மூலமாக ஒன்றுபட்டு ஒற்றுமைப்பட்டு இஸ்ரவேல் போன்று இலக்கை நோக்கி ஆரம்பிக்க வேண்டும். பயணிக்க வேண்டும் .

நான் பெருசு. நீ சிறுசு. நீ அந்த ஜாதி. நான் உயர் ஜாதி. என்று பேதம் பார்த்து உங்களை நீங்கள் சிறுமைப்படுத்தி பாகுபாடு காட்டி வருவதால் நீங்கள் இப்படியே மாவீரர் நினைவும் மழைக் காளான் போன்ற நினைவுகளும் வந்து போகும். இப்போது கொடி தூக்கும் தமிழ் சமூகம் அழிந்து ஒரு புதிய தமிழ் சமூகம் உருவாகும் .

அந்த தமிழ் சமூகம் போராட்டம் ஈழம் தனி நாடு என்று எதுவுமே தெரியாத புரியாத ஒரு சமூகமாக சிங்களத்தில் சங்கமித்து வாழும் நிலை உருவாகும். பொதுவாக போராட்டம் என்ற குணமே மறைந்து நாம் உண்டு நமது வேலை உண்டு என்ற நிலை நிரந்தரமாக அமையும்.

அப்போது தமிழன் இரும்பு கரம் கொண்ட பிடியில் அடக்கி நசுக்கி ஆளப்படுவான். அப்போது யாரும் எதுவும் கேட்க முடியாத ஒரு கேவளமான பெட்டிப்பாம்பாக அடங்கிய நிலை உருவாகும்.

வட கிழக்கில் சிங்கள குடியேற்றம் அதிகரிக்கும். வட கிழக்கில் சிறி லங்கா அரசின் 10 ஆண்டுத் திட்டத்தில் வடகிழக்கில் தமிழ் இனபரம்பல் குறைந்து சிங்கள இனபரம்பல் சம நிலைக்கு வரும். இவைகளை தடுக்க வேண்டாமா ? காலம் செல்லச் செல்ல எல்லாமே மறைந்து போகும். கொடி தூக்கவும் குரல் கொடுக்கவும் யாரும் இல்லாத நிலைதான் வந்து சேரும்.

அப்போது அர்த்தமில்லாத ஒரு போராட்டம் என்ற பிம்பம் உருவாகும். தமிழ் நாட்டில் சீமான். வைகோ மறைவுக்குப் பின்னர் அங்கும் இதே நிலை உருவாகும். இதுதான் யதார்த்தம். இவைகளை நன்கு புரிந்து கொண்டு புலம்பெயர் ஈழத்து சமுகம் ஒன்று பட்டு அவசரமாக அவசியமாக பொது வாக்கெடுப்பை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பி இதில் பயணிக்க முடியாது.

அதனால் புலர்பெயர் ஈழத் தமிழர்கள் ஈழத்தின் போர்க்குற்ற விசாரணை நோக்கிய பயணத்தை ஒற்றுமையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் மறந்து விட்ட கதையாக போய் விடும், இப்போதே மறந்து விட்டோம்.