போர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா! தோற்றுப்போன சீனா?

Report Print Suresh Tharma in கட்டுரை

இலங்கையில் தற்போதைய நிலை குறித்த இந்தப் பதிவிற்குள் உறைந்திருக்கின்ற பல உண்மைகள் காலம் கடந்துமே வெளிவர முடியாதவை. அந்தளவிற்கு இப்போது நடைபெற்ற அரசியல் களேபரங்கள் சர்வதேச அரசியலுடன் பிற நாடுகளின் நலன்களிற்கான ஒரு முயற்சியாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

சீனாவும் அமெரிக்காவும் தேர்வு செய்துள்ள பல இடங்களில் இலங்கை தற்போது மையமாக மாறியுள்ளதே இதற்கான காரணமாகும்.

சர்வதேசம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஒரு விடயத்தை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை சீனாவிடம் முற்றுமுழுதாகச் சிக்குண்டுள்ளது.

அது மகிந்த ராஜபக்சாவாக இருந்தாலென்ன, ரணில் விக்கிரமசிங்காவாக இருந்தால் என்ன, சீனாவின் நிலைப்பாட்டிற்கு மாறாகச் செயற்பட முடியாது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றது தற்போதைய நிகழ்வுகள்.

இதற்கான காரணம் என்னவென்றால் இலங்கை சீனாவிடம் பெற்றுள்ள பெருந்தொகைக் கடன்களாகும். சீனாவின் கடன்மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல் என்கிற திட்டத்தின் முதற்பலிக்கடா இலங்கை. அது பெற்ற கடன் 8,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

அதனால் தான் மகிந்தாவால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கான பணத்தைச் செலுத்த முடியாமல் துறைமுகத்தின் 99 வருடத்திற்கான உரிமைத்தை சீனாவிடம் ரணில் கொடுந்திருந்தார்.

இதைவிடவும் அடுத்த ஆண்டு தை மாதமும் ,ஏப்ரல் மாதமும் இலங்கை ஒரு பெரும் பணத்தொகையை தான் பட்ட கடன்களிற்காகச் செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச இறையான்மைப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவையே அவை.

அடுத்த நான்கு மாதங்களிற்குள் செலுத்த வேண்டிய தொகை என்பது சுமார் 1,700 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இலங்கை மதிப்பில் இது 27,710 கோடி ரூபாக்கள்.

இந்தத் தொகையைச் செலுத்துவதற்கு இலங்கை நம்பியிருந்த பணம் சீனா ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகைக்காக இந்த மாதம் கொடுக்கவிருந்த 650 மில்லியன் டொலர்களாகும்.

இந்த நேரத்தில் தான் அமெரிக்கா இலங்கைக்கு சுமார் 166 மீற்றர் நீளமுள்ள கடலோரப் பாதுகாப்பிற்கான ஹமில்டன் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய ஆயுதக்கப்பலை வழங்கியிருந்தது.

இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை வந்தடையும். இந்த விவகாரம் சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் இலங்கையின் சொந்தக் கடல் எல்லைகளான 14 கடல்மைல்களை விட இலங்கையின் பொருளாதார [Exclusive Economic Zone] எல்லையான சுமார் 800 கடல்மைல் வரையான ரோந்திற்கே இது வழங்கப்பட்டிருந்தது.

அதாவது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா சட்டவிரோத தேவைகளிற்கு பயன்படுத்தி வருவதை கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாக அமெரிக்கா இதனைச் செய்கின்றது என்பதை சீனா நன்கே அறிந்திருந்தது.

ஏனென்றால் அம்பாந்தோட்ட மாத்தள விமான நிலையத்திற்கு தற்போது உலகிலேயே மிகவும் பெரிய சரக்கு விமானமாக அன்ரரோவ் 124 இரவு வேளைகளில் வந்து செல்கின்றது.

அது எரிபொருள் நிரப்ப வருவதாகவே இலங்கைசார் செய்தியூடங்கள் நம்ப வைக்கப்பட்டாலும், அவற்றின் மூலம் எடுத்து வரப்படும் சீன ஆயுதங்கள் ஆபிரிக்காவிற்கு கடல்மூலம் சட்டவிரோதக் கும்பல்களிற்கு கடத்தப்பட்டு ஆபிரிக்கா கொதிநிலையில் வைக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா சந்தேகமாகக் கொண்டுள்ளது.

இத்தோடு ஈரானிடமிருந்து கொண்டுவரப்படும் சட்டவிரோத எண்ணெய்கள் கூட நாடுகளின் கொடிகளற்ற கப்பல்களின் மூலம் அம்பந்தோட்டைத் துறைமுகக் கொல்கலன்களிற்கு விநியோக்கிக்படுவதும், அங்கிருந்து உத்தியோகபூர்வமாக எடுத்துச் செல்லப்படுவதும் இடம்பெற்றுவருகின்றது. ஏனென்றால் அம்பாந்தோட்டையில் தான் அதிபெரிய எண்ணெய் கொள்;கலன் வசதி இலங்கையிலிருக்கின்றது.

இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் ஒருமுறை இலங்கையின் வரைபடத்தை கண்முன்னே நிறுத்தினால் ஆபிரிக்கா இலங்கைக்குக் கீழேயிருப்பதும் அம்பாந்தோட்டையே இலகுவான பயணப்பாதை என்பதையும் விட தென்னாசியாவிலுள்ள அதிபெரிய அமெரிக்கத்தளமான டியகோ காசியாவிற்கு அச்சுறுத்தலாக அம்பந்தோட்டையில் சீனாவின் அதீத செயற்பாடு அமைந்து விட்டது.

ஏனென்றால் டியாகோ காசியா இருப்பது இலங்கையில் இருந்து நேர் தெற்காக 800 மைல் தொலைவில்.

இங்கிருந்து தான் அமெரிக்கா ஆப்கான் மற்றும் மத்திய தரைக்கடற்பகுதியிலுள்ள தனது படைகளிற்கான பொருள் விநியோகத்தை கடல்வழிப்பாதையால் மேற்கொண்டு வருகின்றது எனவே அந்தக் கடல்வழிப் பாதையில் வேறு கப்பல்களின் பிரசன்னத்தை அமெரிக்கா அறுதியாகவே விரும்பவில்லை.

எனவே அமெரிக்காவின் வியூகம் என்பது கடன்பட்டு தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை மாற்றத்தைக் கொண்டு வராது என்பதை சீனா நம்பியிருந்தாலும் அமெரிக்க முயற்சி வியாபிக்கும் என்பதனால் மகிந்தாவை பிரதமாராக்கும் முடிவை மகிந்த சார்ந்த தரப்பிற்கு சீனா மறைமுக ஆசையாக வழங்கியது.

இதற்கான சந்திப்பிற்காக பிரத்தியேகமாக வாடகைக்கு அமர்ந்தப்பட்ட ஏயர் ஏசியன் என்ற விமானத்தில் மகிந்தவின் படை சிங்கப்பூர் பறந்து சென்றார்கள்.

சீனா உளவாளிகளைச் சந்தித்தார்கள். திட்டத்துடன் மீண்டு வந்தார்கள். மைத்திரிக்கும் கூட இது திட்டங்கள் விளக்கப்படுத்தப்பட்டிருக்கலாம். அதாவது சீனா டிசம்பரில் தர வேண்டிய 650 மில்லியன் டொலர்களை தராமல் இழுத்தடிப்புச் செய்தால் இலங்கைப் பணம் பாதாளத்தில் வீழ்ந்து நாடு ஸ்திரமற்ற தன்மையை அடையும் என்பது கூட விளங்கப்படுத்தப்பட்டிருக்கலாம்.

மகிந்தாவைப் பிரதமாராக்குதை சீனா விரும்புகின்றது என்பதை விட இலங்கை ஸ்திரமற்றுப் போவதைத் தடுப்பதற்காக ரணிலை அகற்றி மகிந்தாவை நியமிக்கும் முடிவை எடுக்க மைத்திரி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம்.

அவ்வளவு ஆபத்திற்கு இலங்கையைச் சீனா இட்டுச் சென்று மிரட்டிவருகின்றது. அதனை நீங்கள் மேற்கத்தைய செய்தியூடங்களால் அறிய வேண்டுமாக இருந்தால் அடுத்த மாதம் வரைப் பொறுத்திருக்க வேண்டும்.

ஆம் கனடாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்று “சீனாவிடம் சிக்குண்டுள்ள சிறீலங்கா” என்கிற விவரனத்தை தயாரித்து வருகின்றது.

அது நெற்பிளிக்ஸ் எனப்படும் இணைய ஊடகத்தினூடாக அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும்.

இவ்வாறு சிங்கப்பூரில் தீட்டப்பட்ட திட்டம் வெற்றிபெறாமல் இலங்கையில் இன்றைய தேதியில் சீனாவின் பிடி தளர்வதற்கான காரணமாக இருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது ஆதரவை ரணிலிற்கு வழங்கியதே.

ரணிலிற்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பது ராஜதந்திரரீதியில் சிலவேளைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கூடச் சொல்லப்பட்டிருக்கலாம்.

இரண்டு மாதப் போராட்டத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் நிரூபிக்கப்பட்டதான தோற்றம் தற்போது ஏற்படுத்தப்பட்டாலும், இனிச் சீனாவை ரணில் அரசாலோ அல்லது தமிழர்களால் கூட வேறு ஒரு தரப்பாக பார்க்க முடியாதபடி அதன் கடன் வரப்புக்கள் அமைந்து விட்டன.

எனவே கனடாவிலுள்ள பெரிய ஊடகம் விவரணம் தயாரிப்பதற்கு முன்பதாக சிலவேளைகளில் சீனா கூட ஒரு மாற்றத்தை அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களிற்கு தீர்வைக் கொடுங்கள் என்ற நிர்ப்பந்தத்தை கொடுத்து தனது பிடியை இலங்கை மீது அதிகரிக்கலாம்.

இதற்கான காரணம் யாதெனில் இலங்கையின் ஆட்சிமாற்றங்களில் நாங்கள் திழைத்துக் கொண்டிருக்க அமெரிக்கா தனது அனுஆயுதந் தாங்கிய Nimitz-class aircraft carrier USS John C Stennis (CVN 74) என்கிற அனுஆயுத நாசகாரிக் கப்பல் தனது கப்பலிலுள்ள 90க்கு மேற்பட்ட யுத்த விமானங்களை தற்காலிகப் பராமரிப்பிற்கு உள்ளாக்குவதற்கான விமானத் தங்குமிடமொன்றை திருக்கோணமலையில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இன்றைய தேதி தன்னை இணைத்துள்ளது.

எனவே சீனா என்கிற மீளமுடியாக கடணாளி மற்றும் அமெரிக்கா என்கிற இலங்கைக்கு தெற்கே டியாகோ காசியா என்கிற தீவை பாரிய முகாமைக் கொண்டுள்ள அமெரிக்கா தங்களின் நலனிற்காக செயற்படுத்தப் போகும் திட்டங்களில் ஒன்றுமட்டுமே தமிழர்களிற்கான வெற்றியாக அமையும்.

அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயான தீர்வு என்பதையே சீனாவும் அமெரிக்காவும் ஆதரிக்கப் போகின்றன என்கிற ஒரு நெருடலான உண்மையாகும். எனவே தமிழர்களின் பேசுபலம் சிதறாமல், தமிழர்கள் ஒன்றாகச் செயற்படுவதே எம்முன் இப்போதுள்ள பணி.

Latest Offers