பாகிஸ்தான் மீது குட்டிப் போருக்கு தயாராகும் இந்தியா

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

இந்தியாவின் (வடக்கு) காஷ்மீர் பகுதியில் தற்கொலை தாக்குதலின் காரணமாக 46 சிப்பாய்கள் பலியாகியுள்ளாதால் இந்தியா முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

அதனால் பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

இதேவேளை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதுவர் அஜெய் பிசாரியா நேற்று மாலையே இந்தியாவால் டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

அதனால் நேற்று மாலை முதல் டெல்லியில் உள்ள 25 நாடுகளின் தூதுவர்களை இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டம் மற்றும் உள்துறை அமைச்சின் உயர்மட்டம் ஆகியன நேரடியாக சந்தித்து காஷ்மீர் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றியும் இந்திய மக்களின் கொந்தளிப்பு மற்றும் ராணுவத்தின் கொந்தளிப்பு பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், ரஷ்யா, நெதர்லாந்து மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடுகள் அடங்கலாக 25 நாடுகளின் தூதுவர்களை இந்தியா நேற்று சந்தித்துள்ளன.

இந்திய மக்களையும் இராணுவத்தையும் சமாதானப்படுத்த வேண்டுமானால் பாக்கிஸ்தான் மீது ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் அதற்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கின்றது என்ற தகவலை 25 நாடுகளின் தூதுவர்களுக்கும் இந்தியா சொல்லியுள்ளன.

இதேவேளை இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் என்பது திட்டமிட்ட சதி என்றும் மோடிக்கு சரிந்துள்ள ஆதரவை சரிக்கட்டவும் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள லோக்சபா (பொது தேர்தலில்) பிஜேபி வெற்றி பெறுவதற்காக ஒரு மதக்கலவரத்தை செய்யவும் செய்யப்பட்ட ஒரு சம்பவமாகவே உள்ளது.

காரணம் ராணுவம் பயணித்த காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா நெடுஞ்சாலை என்பது மிக அதிகமான செக் போஸ்ட் நிறைந்த வீதி இந்த வீதியில் ராணுவத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் 350kg நிறை கொண்ட வெடி குண்டு கொண்டு வரமுடியாது என்று பரவலாகவே சொல்லப்படும் நிலையில் இந்த வெடி குண்டு இராணுவம் பயன் படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் கொண்ட குண்டாகவே உள்ளதாம், அப்படியானால் ஆய்வாளர்களின் சந்தேகம் சரியாகவே அமைய அதிக வாய்ப்புள்ளது.

ஒரு குட்டிப் போர் நடைபெறும் அதிக வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் எல்லை தாண்டி இந்தியா நுழைந்து ஒரு தாக்குதல் நடத்தும் மிக அதிக வாய்ப்புள்ளது. பார்ப்போம் .

இந்தக் குண்டிவெடிப்பு மீது சந்தேகம்

44 சி.ஆர்.பி.எப் வீரர்களின் படுகொலையை எவ்வித விவாதங்கள் இன்றி எத்தகைய சந்தேகத்தையும் கேட்காமல் தேசபக்தி என்கிற பெயரில் மழங்கடிக்க நினைப்பது பெரிய அயோக்கியத்தனம் என்ற கருத்து மேலோங்கி வருகின்றன.

ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களை விட முற்றிலும் மாறுப்பட்ட சூழல் கொண்டது. எல்லையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலைகளில் தடுக்கி விழுந்தால் செக்போஸ்ட்கள் அமைந்திருக்கும்.

350 கிலோ வெடிமருந்துகள் என்பது ஏதோ ஒரு சிறிய துப்பாக்கி தோட்டா இல்லை. ஒரு சதிதிட்டத்திற்கு நாசவேலைக்கு அவ்வளவு பெரிய வெடிமருந்து கொள்முதலில் தொடங்கி காரில் பொறுத்தி திட்டமிட்டு ராணுவ வண்டிகளை நோட்டமிட்டு தாக்குவது மெரினாவில் பலூன்களை சுடுவது போன்ற எளிதான வேலை அல்ல.

24 மணிநேரமும் தீவிர ரோந்து கண்காணிப்பு, தீவிரவாதிகளின் ரேடார் வயர்லெஸ் போன்ற தகவல் தொடர்புகளை வழிமறித்து கேட்கும் நுண்ணறிவு பிரிவு, இவையெல்லாம் தாண்டி இந்தப் பாரிய வெடி குண்டு அவந்திப்பூரா நெடுஞ்சாலைக்கு வந்திருக்க முடியாது என்பது இராணுவ ஆய்வாளர்களின் விவாதம்.

காஷ்மீரில் நடந்தது என்ன ?

காஷ்மீரில் ஈழ விடுதலைப் புலிகளின் பாணியில் தற்கொலைப்படை தாக்குதல் 46க்கும் அதிகமான இராணுவத்தினர் ஸ்தலத்தில் உயிரிழப்பு, 70க்கும் அதிகமானவர்கள் படுகாயம் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களின் வாகன அணிவகுப்பில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காஷ்மீர் விடுதலைக்காக போராடும் காஷ்மீர் விடுதலை போராளிகள் காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் இருந்து ஸ்ரீநகருக்கு பாதுகாப்பு படை வீரர்கள் 70 வாகனங்களில் சென்றனர்.

அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தின் அருகே சென்றது. அப்போது எதிரே மெதுவாக வந்த காரில் இருந்த பயங்கரவாதி, வாகன அணிவகுப்பில் வந்த இரு பேருந்துகளுக்கு இடையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி வெடிக்க வைத்தனர். இதில் பாதுகாப்பு படை வாகனங்கள் வெடித்து சிதறின.

வாகனத்தில் பயணம் செய்த வீரர்களில் 46 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் சாலையில் விழுந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த வீரர்களை குறி பார்த்து துப்பாக்கியால் சுட்டனர். இதனை கண்டதும், அணி வகுப்பில் சென்ற ஏனைய வாகனங்களும் நிறுத்தப்பட்டன. அதில் இருந்து வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

காஷ்மீர் இராணுவம் தாக்குதல் குறித்து தகவல் அறிவித்ததும், கூடுதல் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.

தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படை நடத்திய விசாரணையில், காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கார்போரா என்ற ஊரைச் சேர்ந்த அதில் அகமது தார் என்பவனே தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

ஒரு இஸ்லாமிய இயக்கமே தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பின் சார்பில் காஷ்மீர் செய்தி நிறுவனமான ஜி.என்.எஸ்.சுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது. காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அராஜகம் அதிகரித்துள்ள நிலைமையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது

இந்தியா மதக் கலவரத்தை நோக்கி,

( National Investigation Agency -Defence Intelligence Agency உல இந்திய தேசிய புலனாய்வு அறிக்கையின்படி) லஷ்கர் - இ - தொய்பாவின் மிகவும் பயிற்சி செய்யப்பட்ட கொலைகாரப்படை ஒன்று பிரதமர் நரேந்திர மோதிஜியை வெகு விரைவில் கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாம்.

(சுத்தப் பொய்-1)

அந்த பயங்கரவாதிகள் பிரதமரின் இல்லமாகிய டெல்லி சௌத் ப்ளாக்கிலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல தேர்ந்தெடுக்கும் பாதையை மிகச் சிறப்பாகப் பின்தொடர்ந்து உளவு பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.

(சுத்தப் பொய்-2)

ஏற்கனவே, பூனே பொலிஸ் அர்பன் நக்ஸல்களின் உதவியுடன் நக்ஸலைட்டுகள், பிரதமரை கொலை செய்ய செய்த ஏற்பாட்டை நிரூபித்துள்ளனர். அவர்கள் மிகவும் உயர் திறனுடைய ரைஃபிர்களையும், அதற்கான தோட்டாக்களையும் வெடி பொருட்களையும் வாங்கி பிரதமரை அழிக்க அவர் மேற்கொள்ளும் பேரணிகளைத் தேர்ந்தெடுத்தது அனைவரும் அறிந்ததே..!

( இது சுத்தமான சோடிக்கப்பட்ட பொய் -3 )

எதிர்வரும் மே மாதம் இந்திய லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ளது. மோடி மீது அதிருப்தி மெலிந்து விட்டது அதை திசை திருப்ப அப்பாவி முஸ்லிம் வாலிபர்களை கைது செய்து அவர்கள் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று முத்திரை குத்தி கைது செய்து அவர்களை சுட்டுக்கொலை செய்து ஒரு கலவரத்தை வடக்கில் ஆரம்பித்து சில மாநிலங்களுக்கும் பரவ விட்டு ஒரு முழு ஆதரவு தேடுவதுதான் மோடி மஸ்தானின் சிறப்பு திட்டம்.

விரைவில் அரங்கேற்றும் வழி வகை ஒன்றை செய்வதற்காக இந்த பொய்யான புலனாய்வு அறிக்கையை வெளியே கசிய விட்டுள்ளார்கள். இந்தியாவை பொருளாதார ரீதியாக அளிக்க மோடி மஸ்தான் சிறப்பானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால் மோடி மஸ்தானை யாரும் கொல்ல வேண்டிய தேவையே கிடையாது.

இந்தியாவில் விரைவில் மதக்கலவரம்

பிஜேபி அரசு மீதும் மோடி மீதும் வட இந்தியா மற்றும் நாடு முழுவதும் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர், குறிப்பாக நாளாந்தம் எரிபொருட்களின் விலையேற்றம் மற்றும் விலைவாசி காரணமாக ஆங்காங்கு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்கள் நடைபெற்று வருகின்றன.

மக்களின் இந்த அதிருப்தி நிலையை சமாளிக்க வேண்டுமானால் அவசரமாக ஒரு மதக்கலவரம், இனக்கலவரத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த செய்தியை நாம் கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் தந்திருந்தாலும் இந்த செய்தியை தற்போது அமரிக்காவின் தேசிய புலனாய்வு துறை பணிப்பாளர் டான் கோட்ஸ் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.

அதற்கு மிகவும் சிம்பலாக மாட்டிறைச்சி விடயத்தை காவிப்படை, காவாலிப்படை கையில் எடுக்கும்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஆரம்பிக்கும் இந்தக் கலவரம் நாடு முழுவதும் பரவும் வாய்ப்புள்ளது. மற்றும் தமிழ் நாட்டிலும் இது பரவும். அதிகமான உயிர் சேதம் மற்றும் பொருள் சேதத்தை இந்தக் கலவரம் கொண்டு வரலாம்.

மாட்டிறைச்சியையும் பசு வதை என்ற விடயத்தையும் குறியாக வைத்து இந்தக் கலவரம் நடைபெறலாம். அதற்கு ஏற்றாப்போல் முஸ்லிம்கள் மீது காவிகள் விஷம் விதைத்துளார்கள், காவல் துறையின் கண்முன்னே இந்தக் கலவரம் நடக்கும். சட்டம் ஒழுங்கு காவிகளின் கைகளில் இருக்கும்.

இந்தியாவில் பெற்றோல் விலை 1௦௦ ரூபாவை எட்டும் போது இது நடைபெறலாம். இப்போது பெட்ரோல் 91 ரூபாய். இந்திய முஸ்லிம்கள் மீது திணிக்கப்படும் இந்தக் காட்டுத் தர்பார் 2 நாட்களில் அடங்கி விடும். இங்கு கண்டி திகன பேருவளை போன்று,

இந்தியாவில்......?

இங்கும் மட்டக்களப்பில் ஐயர் MPயும் வியாழன் MPயும் விஷம் கக்கி வருவதால் மட்டக்களப்பில் ஒரு மதக்கலவரம் நடந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது.

ம்.. பார்ப்போம்.. எப்போது தீரும் இந்த ரத்த வெறி.

Latest Offers