ஜெனிவா 40வது கூட்டத் தொடரின் ஆரூடம்!

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

ஐ.நா.விதி முறைகளுக்கு அமைய, முன்னைய ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் தொடர்ச்சியாக, ஐ.நா.மனித உரிமை சபை, யூன் மாதம் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

முன்னைய ஐ.நா.வின் செயலாளர் நாயகம் கோபி அணானின் முன்னெடுப்பில், மிக நீண்ட காலமாக நடைமுறையிலிருந்து வந்த 53 அங்கத்துவ நாடுகளை கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு மறுசீரமைக்கப்பட்டு, மனித உரிமை சபை 47 நாடுகளை கொண்டுள்ளது.

அதாவது, புவியியல் அடிப்படையில் - ஆசிய 13 நாடுகளின் அங்கத்துவத்தையும், ஆபிரிக்கா 13 நாடுகளின் அங்கத்துவத்தையும், லற்றின் அமெரிக்கா (தென் அமெரிக்கா) 8 நாடுகளின் அங்கத்துவத்தையும், மேற்கு ஐரோப்பா 7 நாடுகளின் அங்கத்துவத்தையும், கிழக்கு ஐரோப்பா 6 நாடுகளின் அங்கத்துவத்தையும் கொண்டுள்ளன.

இவ் அடிப்படையில், இவ் மனித உரிமை சபையில் - எந்த இனத்தவர், எந்த நாட்டவராக இருந்தாலும், ஒரு முக்கிய விடயத்தை வெற்றியாக நகர்த்த விரும்பினால், 47 நாடுகளில், குறைந்தது 24 நாடுகளை அல்லது அதற்கு மேலான நாடுகளை தமது சார்பாக பெற்றிருக்க வேண்டும். இவை தவறும் பட்சத்தில் யாவும் பூச்சியமாகவே முடியும்.

இவ் விடயத்தை - சில பந்தி எழுத்தாளர்களும், மனித உரிமை செயற்பாட்டாளரென ஊடகங்களில் செவ்விகள் கொடுப்பவர்களும், பாதிக்கப்பட்டவர்களிற்காக வேலை செய்பவர்களும் முதலில் அறிந்திருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையினது வேலை திட்டங்களை அறவே அறியாத சிலர், மனித உரிமை சபை, தமிழீழ மக்களிற்கு தீர்வை கொடுக்குமென எதிர்பார்ப்பது மிகவும் மிலேச்ச தனமானது.

தமிழீழ மக்களது மனித உரிமை விடயங்கள் யாவும், இலங்கையின் கைகளிருந்து நளுவி, சர்வதேசத்தின் கைகளுக்கு சென்று பல வருடங்களாகியுள்ள நிலையிலும், ஐ.நா.மனித உரிமை சபையின் தீர்மானங்களை, சர்வதேசத்தின் அளுத்தங்களின் மத்தியிலும், இலங்கை நிறைவேற்றாது அலட்சியம் பண்ணுவதற்கான காரணத்தை - ஐ.நா. விதிமுறை நன்றாக தெரிந்த அறிந்த ஒருவர் ஆராயும் வேளையில், ஐ.நா.மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளையே குறை கூறுவார்.

சுருக்கமாக கூறுவதனால், மனித உரிமை சபையில், இலங்கை மீது பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பொழுதும், ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் அளுத்தங்கள் தொடர்ந்து இலங்கை மீது கடுமையாக இல்லாததே முக்கிய காரணி.

நிட்சயமாக, ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்களான லூயிஸ் ஆபார், நவநீதம்பிள்ளை, அல் குசேயின் தற்பொழுது மிசேயில் பக்லற் போன்றோர் மட்டுமல்லாது, ஐ.நா. விசேட நிபுணர்கள், ஐரோப்பிய யூனியன் போன்ற அரச அமைப்புக்களின் அளுத்தம் இலங்கை மீது தாரளமாக மீக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ஆனால் இவர்களது அளுத்தங்களை கவனத்தில் கொண்டு, தற்பொழுது அரசியல்மயமாக்கப்பட்டு வரும் மனித உரிமை சபையில், இலங்கை விடயத்தில் யாரால் எதை சாதிக்க முடியும்?

என்ன செய்ய முடியும் ?

உலகமயமாக்கலை தொடர்ந்து, ஜெனிவா சென்று தான் யாவரும் மனித உரிமை அமர்வுகளில் வேலை செய்யலாம் என்பது யாதார்த்தம் அல்லா. காரணம் தொடர்பு சாதனங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ள இவ்வேளையில், குறித்த நாட்டையோ, குறித்த வெளிநாட்டு அமைச்சரையோ தொடர்பு கொள்ள விரும்பியவர்கள், மிகவும் இலகுவாக தாம் இருக்கும் நாட்டிலிருந்தே தகவல்களை கொடுக்க முடியும்.

மாதக்கணக்கில் சென்றடையும் கடிதங்கள், தொலைநகல் பரிமாற்றம் என்ற காலம் மாறியுள்ள இவ் வேளையில், தமிழீழ மக்கள் விசேடமாக புலம் பெயர்வாழ் மக்கள் தாம் வசிக்குமிடத்திலிருந்தே பல விடயங்களை பாதிக்கப்பட்டுள்ள உடன் பிறவா சகோதரர்களிற்கு செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாவதாக, நாம் ஒவ்வொருவரும் என்ன செய்தோம்? என்ன செய்கிறோம்? என்ன செய்யப்போகிறோம்? என்பவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எமது ஏறக்குறைய 30 வருட கால ஐ.நா. வேலை திட்டங்களில், எந்த இடைவெளியும் இல்லாது, நிதி பலத்திற்கு முன்னுரிமை கொடுக்காது, எம்மால் முடிந்த ‘லூன’ வேலை திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

முன்னைய காலங்கள் போல் நிதி தாரளமாக இருக்குமானால், நாம் பல ‘அப்பலோ’ திட்டங்களை திறமையாக செய்து வெற்றியும் காணலாம். இவ்விடத்தில், ‘லூனா’ வேலை திட்டம் என்றால் என்ன? ‘அப்பலோ’ வேலை திட்டம் என்றால் என்ன, எப்பதை யாவரும் தெரிந்திருக்க வேண்டும்.

அன்று சந்திரமண்டலத்திற்கு செல்வதில், அன்றைய சோவியத் யூனியனுக்கும், ஐக்கிய அமெரிக்காவிற்குமிடையில் கடும் போட்டியிருந்தது. இவ்வேளையில் அமெரிக்காவின் ‘ அப்பலோ 11’ விண்கலம், மூன்று விமானிகளுடன் சந்திர மண்டலம் சென்று, தரை இறங்கியதுடன், அங்கிருந்து மண்ணையும் எடுத்து வந்தது.

இதேவேளை, சோவியத் யூனியன் எந்த ஆட்களும் அற்ற ‘லூனா 24’ மின்கலத்தை, சந்திர மண்டலத்திற்கு அனுப்பி மண்ணை கொண்டுவந்துள்ளது.

இவற்றை எமது மொழி, பாசையில் கூறுவதனால் - மாமரம், பலாமரம், தென்னை போன்றவற்றில் காய்களை பறிப்பதற்காக, ஒரு முறையில் கொக்க தடியை கட்டி (லூனா) காய்களை பறிப்பதற்கும், மற்றைய முறை, ஆள் ஒருவரை (அப்பலோ) மரத்தில் ஏற்றி காய்களை பறிப்பதற்கும் ஒப்பனாது.

இதே போல், பாதிக்கப்பட்ட தமிழீழ மக்கள் யாவரும் தாம் வாழும் நாட்டிலிருந்தே ஐ. நா. மனித உரிமை சபை வேலை திட்டத்தில், ‘லூனா’ செயற் திட்டம் மூலம் பங்களிக்க முடியும். ஊதாரணத்திற்கு - இலங்ககைதீவின் தலைநகரான கொழும்பில், முன்பு போல் அல்லாது, இன்று சகல நாடுகளது தூதுவரலாயங்களும் உள்ளன.

ஆகையால், மனித உரிமை சபை பற்றிய அக்கறை கொண்டுள்ள பந்தி எழுத்தாளர்களும், செவ்விகள் கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பாதிக்கப்பட்ட மக்களிற்காக குரல் கொடுக்க விரும்பியவர்களும், கொழும்பில் உள்ள தூதுவராலயங்களுடன் சந்திப்புக்களை நடத்தி, தமது பங்களிப்பபை செய்ய முன்வர வேண்டும்.

இவற்றை நாட்டில் உள்ளவர்களும், புலம்பெயர் தேசஙகளில் உள்ளவர்களும் முன்வந்து செய்வார்களேயானால், அவர்கள் சந்திப்புக்களை நடத்தி இருபத்தி நான்கு (24) மணித்தியலாயங்களில் சகல விடயங்களும் குறித்த நாட்டின் வெளிநாட்டு அமைச்சை சென்று அடைந்து விடும்.

சிறிலங்கா விடயத்தில் குறிப்பிட்ட சில நாடுகளின் முடிவில் சந்தேகங்கள் இருந்தாலும், நாம் எமது கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.

அங்கத்துவ நாடுகள்,

மனித உரிமை சபையில், இலங்கை விடயத்தில் நாம் எவற்றை சாதிக்க போகிறோம் என்பது அங்கு வேலை செய்யும் யாருடைய கையில் இல்லை என்பதற்கு மேலாக, நாம் சரியானவர்களை அணுகி வேலை செய்கிறோமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

சுருக்கமாக கூறுவதனால், ‘ கோப்பாயில் சண்டை நடக்கும் வேளையில், ஊர்காவற்துறையில் குண்டு போடுவதால்’ எந்த பிரயோசனமும் கிடையாது. மனித உரிமை சபையில் உள்ள 47 நாடுகளில், இது வரை எத்தனை நாடுகள் இலங்கை விடயத்திற்கு ஆதரவாக, எதிராகவுள்ளது என்பது, யாதார்தவாதிகளது கேள்வியாக இருக்க வேண்டும்.

ஐ.நா.மனித உரிமை சபையில் தற்பொழுது அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளை, பிராந்திய ரீதியாக கீழே பார்க்கவும், ஆசியா பசிபிக் 13 நாடுகள் ஆப்கானிஸ்தான், பாரின், பங்காளதேஸ், சீனா, பிஜி, இந்தியா, ஈராக், ஜப்பான், நேபால், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, ஆபிரிக்கா 13 நாடுகள் அங்கோலா, புக்கினோ-பசோ, கமரோன், ஜனநாயக கொங்கோ குடியரசு, ஏகிப்த், ஏரித்திரீயா, நைஜீரியா, ரூவாண்டா, செனகல், சோமாலியா, தென் ஆபிரிக்கா, ரோகோ, துனிசியா.

லத்தின் அமெரிக்க, காரீபியன் 8 நாடுகள் ஆஜன்ரீனா, பாமாஸ், பிறேசில், சில்லி, கியூபா, மெக்சிக்கோ, பேரு, யூறுகுவே.

மேற்கு ஐரோப்பாவும் மற்றைய 7 நாடுகளும் ஆவுஸ்திரேலியா, ஓஸ்தீரியா, டென்மார்க், அமெரிகாவின் இடத்திற்கு- ஐஸ்லாந்து, இத்தாலி, ஸ்பானியா, பிரித்தானியா.

கிழக்கு ஐரோப்பியா 6 நாடுகள் புல்கேரியா, குரோசியா, செக், கங்கேரி, சுலோவாக்கியா, யூக்ரேன்.

மேற்குறிப்பிட்ட நாடுகள் பற்றி நன்றாக அறிந்தவர்களது மனதில் முதல் உதயமாகும் கேள்வி எதாக இருக்க வேண்டுமானால் - இவ் 47 நாடுகளில் எத்தனை நாடுகள் மனித உரிமையை மதிக்கும் நாடுகளாகவோ அல்லது நல்ல நிலையை, நல்ல சாதனையை கொண்டுள்ளது? அப்படியாக பார்க்கும் வேளையில், இலங்கைக்கு இவை சார்பாக இருக்குமா? அல்லது சர்ச்சையாக இருக்குமா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். வருடா வருடம் நாடுகள் மாறுகின்றனா. ஆனால் 2019ம் ஆண்டு மிகவும் சங்கடமானா அங்கத்துவ நாடுகளை மனித உரிமை சபை கொண்டுள்ளது.

ஆகையால், யாரை யார் குறை சொல்வது? யாரை யார் வெல்வது? யார் யாருக்காக வேலைசெய்கிறார்கள்? யார் யாரை குழப்புகிறார்கள் என்பதை தமிழீழ மக்கள், விசேடமாக புலம் பெயர் வாழ் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஐ.நா.மனித உரிபையின் கூட்ட தொடர் வேளையில், 2009ஆம் ஆண்டின் பின்னர் பங்கு கொள்ளும் சிலருக்கு, ஐ.நாவின் ஆறு உத்தியோக மொழிகளான – ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானியா, அரபி, சீனா, ராஸ்யா மொழிகளில் ஒன்றை தன்னும் உரையாடவோ, எழுதவோ, வாசிக்க தெரியாதவர்களாக காணப்படுகிறார்கள்.

இன்னும் ஒரு பகுதியினர் அரைகுறை ஆங்கிலத்தில் தேர்தலுக்கு ஆள் சேர்ப்பவர் போல் தமது கையாட்களுடன் ஐ.நா.வில் வட்டமேசை நடத்திவிட்டு, நிதி வழங்கியவர்களுக்கு ஐ.நா.மனித உரிமை சபையில் வேலை செய்தோம் என கணக்கு காட்டுகிறார்கள்.

இன்னுமொரு பகுதியினர் - இரு நிமிட உரையும், ஒர் இருவருடன் உப்பு சொப்பற்று நடத்தும் பக்க கூட்டங்கள் தான் ஐ.நா.மனித உரிமை சபைக்கான வேலைதிட்டமென கூறி, சிறிலங்காவிற்கு உறுதுணையாக உள்ளார்கள்.

இதே இடத்தில் ஆறு மொழிகளில் எதையும் தெரியாது புரியாதவர்கள், தமது தனித் தமிழ் முகநூல்களில், தம்மை ஓர் பிரமுகராக பாமர மக்களிற்கு கண்பிப்பதுடன், தமது ஏட்டு கல்விக்கும் பண்பிற்கும் ஏற்ற முறையில், எழுத தெரியவிட்டாலும், குரலில் மற்றவர்களை வசைபாடுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில், ஐ.நா. சர்வதேச விசாரணையை யார் யார் விரும்புகிறார்கள் என்ற ஓர் பட்டியல் தாயாரிக்கப்பட்டுள்ளதாம். கேள்விப்பட்டதும், சிரிப்பாக இருந்தது. காரணம் ஐ.நாவில் சர்வதேச விசாரணையை விரும்புபவர்களென பட்டியலிடப்பட்டவர்கள் யாவரும், ஐ.நா.வில், மொழி பெயர்பாளர்கள் உதவியுடன் தனித் தமிழில் உரையாற்றுபவர்கள்.

ஆகையால் ஐ.நா. வில் ஆறு மொழிகளில் ஒன்று தன்னும் தெரியாத புரியாதவர்களிற்கு, அவர்கள் தமிழில் உரையாற்றியது மட்டும் விளங்கியுள்ளது. எம்மை பொறுத்த வரையில் ஐ.நா.வில் என்றும் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் தான் உரையாற்றுவது வழமை. இது ஐ.நா.வில் விடுப்பு பார்க்க வருவோருக்கு இவை எப்படி விளங்கும்?

இதற்கு மேலாக தமிழ்நாட்டிலிருந்து வருகைதரும் சிலர், வேட்டி சால்வை அணிந்து ஐ. நா.வில் வலம் வருவதுடன், தமிழில் பக்க கூட்டங்களில் உரையாற்றுவதும், சிலம்படி அடித்து தமது வீரத்தை பாமர மக்களிற்கு கண்பிப்பதும், ஐ.நா.மனித உரிமை செயற்பாடு அல்லா.

இவ் செயற்பாடுகள் மூலம் ஐ.நா. அஙகத்துவ நாடுகளின் ஆதரவை நாம் ஒரு பொழுதும் பெற முடியாது. இவ் கோமாளிகளின் செயற்பாடுகள் யாவும், விளலுக்கு இறைக்கும் நீரே. இவை பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களிற்கு ஐ.நா.மனித உரிமை சபையில் உருப்படியான முறையில் எதையும் பெற்று தராது.

தளபதி கிட்டு வெளிநாடுகளில் வாழ்ந்த் காலத்தில் கூறிய ஓர் கதை இங்கு நினைவிற்கு வருகிறது. “ஆசியர்கள், தமிழர்களாகிய எம்மை மேற்கு நாட்டவர்கள் ஒரு பொழுதும் மதிக்க மாட்டார்கள், நாம் இடத்திற்கு ஏற்ற விதமாக ஒழுங்கான உடை அணியாவிடில், யார் எம்மை மதிப்பார்கள்? ஆகையால் நாம் மேற்கு நாட்டவர்களிற்கு ஏற்ற முறையில் உடை அணிந்து, முடியுமானால் நல்ல வாசனை திரவியங்களையும் அணிந்து செல்ல வேண்டுமென கூறினார்.

ஆரூடம்,

எதிர்வரும் நாற்பதாவது ஐ.நா.மனித உரிமை சபையின் கூட்டத் தொடர் செனகல் நாட்டின் ஐ.நா.வின் பிரதிநிதியான திரு. கோலி செக் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் கூட்டத் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை திகதி வரை நடைபெறவுள்ளது.

கூட்டத் தொடர் ஆரம்பமாகும் நாளிலிருந்து, இலங்கை விடயம் இடை இடையே பேசப்படலாம். அதே வேளை, மார்ச் 20ம் திகதி இலங்கையின் விடயத்திற்கான நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறிலங்காவிற்கு கொடுக்கப்பட்ட இரு வருட கால அவகாசம் முடிவடையும் இவ் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பதை யாவரும், விசேடமாக ஈழத்தழிழர் அவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஐ.நா.மனித உரிமை சபையின் நாற்பதாவது கூட்டத் தொடரில் என்ன நடக்கலாமென என்னால் கூறப்படும் ஆரூடம், எமது உடன்பிறவா சகோதரர் சிலரை அல்லா பலரை நிட்சயம் திருப்தி படுத்த போவதில்லை.

ஆனால் நடக்க கூடிய யாதார்தங்களை முன் கூட்டியே ஆருடம் கூறுவது ஓர் சிறந்த ஊடக ஆய்வாளரின் கடமை. எனது மூன்று தசாப்தங்களான மனித உரிமை செயற்பாட்டின் அடிப்படையில், இலங்கையை மனித உரிமை சபை உடன் சர்வதேச நீதி மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் துர்அதிஸ்டவசமாக ஐ.நா. நிலைமைகள் இதற்கு ஏற்ற போல் இல்லை.

முதலாவதாக தற்சமயத்தில் மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கும் பெரும்பான்மையான நாடுகள் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை, தமது மக்கள் மீது கொண்டவை.

இவ் நிலையில், இவர்கள் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களிற்கு கடும் போக்கை கடைபிடிப்பார்கள் என்பது பகற் கனவு. அமெரிக்கா மனித உரிமை சபையில் அங்கம் வகிக்குமானால் அது வேறு கதையாக இருந்திருக்கும்.

இவ் நிலையில், நடக்க கூடிய இரு சாத்வீக கூறுகளில் ஒன்று - யார் தலையால் நடந்தாலென்ன இலங்கைக்கு இன்னுமொரு கால அவகாசம் கொடுக்கப்படும். இது சிலவேளைகளில் ஒரு வருடம் அல்லது இரு வருடமாக இருக்கலாம்.

அடுத்து, இம் முறை, கொடுக்கப்படும் கால அவகாசம் என்பது சில நேர அட்டவணையுடனனாதாக இருக்கும். அதாவது இன்ன விடயத்தை இன்ன காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது.

இவ் நிலைபாட்டிற்கான இன்னுமொரு காரணம் - மனித உரிமை சபையின் தீர்மானத்தில் சில விடயங்களை சிறிலங்கா ஏற்கனவே நிறைவேற்றியுள்ளதாக சில நாடுகளும், சில சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஏற்று கொள்கின்றன.

எம்மை பொறுத்தவரையில், இலங்கை ஏற்கனவே நிறைவேற்றியுள்ளதாக கூறும் விடயங்கள் யாவும், இலங்கையினால் செய்யப்பட்டுள்ள சர்வதேச கண் துடைப்பு. அதாவது ‘யானை பசிக்கு சோழப்பொரி.

இதேவேளை, கூடிய விரைவில் பல தேர்தல்கள் - மாகாண சபை, ஜனதிபதி, நாடாளுமன்றம் போன்றவை இலங்கையில் நடைபெறவுள்ளது, இலங்கைக்கு நல்ல சாட்டு போக்க அமைய போகிறது.

தமிழீழ மக்களை பொறுத்த வரையில் இலங்கையை எந்த பௌத்த சிங்கள ஆட்சியாளர் ஆண்டலென்ன, எல்லாம் ஒன்று தான். ஓன்று பேய் மற்றையது பிசாசு. இலங்கையில் கூடிய விரைவில ஏற்படவுள்ள ஜனதிபதி மாற்றம், ஆட்சி மாற்றம் தமிழீழ மக்களை ‘அணில் ஏற விட்ட நிலைக்கு’ தள்ளும்.

Latest Offers