காஷ்மீர் தற்கொலை தாக்குதல் அரசின் திட்டமிட்ட சதியா?...

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

2500 துருப்புக்கள் CPRF (Central Police Reserve Forces) 70 வாகனங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அதுவும் அதிக உச்ச கட்ட அபாய பகுதியில் உயர் பாதுகாப்பு நிறைந்த வெரி டேன்சர் பாதையில் ஊர்வலம் போன்று பயணித்த வரலாறு இல்லை.

3-4 இராணுவ துருப்புக்கள் பயணிக்கும் போது 2-3 பாதுகாப்பு வாகனம் பயணிப்பது வழமை.

அதுவும் 98 வீதம் முஸ்லிம்கள் கொண்ட காஷ்மீரில் 15 காஷ்மீரிகளுக்கு 1 இராணுவம் என்று அதிக உச்ச கட்ட ஆபத்து நிறைந்துள்ள இந்தியாவிலே அதிக டேன்சர் நிறைந்த காஷ்மீரில் இப்படியா போவார்கள்?

துருப்புக்கள் கொண்ட ஒரு அணி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று இடத்தை அடைந்த பின்னர் தான் மற்ற அணி சுமார் 5-6 மணிநேரம் கடந்த பின்பு பயணிக்கும் அல்லது மறுநாள் பயணிக்கும். இதுதான் இராணுவ பயண தந்திரம் யுக்தி.

பத்து நாட்களுக்கு முன்பே உளவுதுறை எச்சரித்தும் இராணுவ மந்திரி நிர்மலா ஊறுகாய் போட்டு கொண்டு இருந்தார்? எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்து கோட்டைவிட்ட இராணுவ துறை மற்றும் காஷ்மீர் ஆளுநர் மாமா.

இவைகள் எதுவுமின்றி சும்மா பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் மோடியின் பதவி ஆசைக்கு.

காஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக திட்டமிட்ட சதியா?

350 கிலோ வெடிபொருள் உயர் பாதுகாப்பு தேசிய நெடுஞ்சாலைக்கு எப்படி வந்தது?

2500 படைவீரர்களை ஒரே நேரத்தில் நேற்று அதிகாலை நகர்த்த உத்தரவிட்டது யார்?

பக்சி ஸ்டேடியம் Transit Campக்கு 30கி.மீ அருகில் 2 நாட்கள் பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் இல்லையா?

போக்குவரத்து தடை செய்யப்பட்டு தீவிர சோதனைகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றும் எப்படி தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டது?

பல இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று CRPF செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் ஜா கூறுவதன் நோக்கம் என்ன?

எந்தப் புலனாய்வுகளும் நடத்தாமல் 6 மணி நேரத்துக்குள் வீடியோ வெளியிடப்பட்டு லக்சர் இ மொகம்மத் அமைப்பு தான் இதை செய்தது என்று தீவிரவாதியின் பெயரோடு தொலைக்காட்சிகளுக்கு யார் தகவல் கொடுத்தது?

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?

பத்து நாட்களுக்கு முன்பே உளவுதுறை எச்சரித்தும் இராணுவ மந்திரி நிர்மலா ஏன் அதை கண்டுகொள்ளவில்லை? எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்து கோட்டை விட்டது யார்?

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் குண்டு துளைக்காத வாகனங்கள் இந்த முறை ஏன் வழங்கப்படவில்லை?

பாரதீய ஜனதாவின் ஆட்சியில் தேர்தலின் போதெல்லாம் குண்டு வெடிப்புகளும், தற்கொலைப்படைத் தாக்குதல்களும் நிகழ்ந்து வருவதன் மர்மம் என்ன?

காஷ்மீர் பதட்டம் நிறைந்த இடத்தில் 400கிலோ மற்றும் 300கிலோ வெடிமருந்து எப்படி கிடைத்தது?

BJPக்கு எப்போதெல்லாம் கஷ்டகாலம் வருமோ, அப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிக்கும். இந்த தடவை அது இரானுவ வீரர்களின் அணிவகுப்பில் காஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடன் ஒரு போர் நடக்குமோ என்ற எண்ணம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களுக்கு மத்தியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 49 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதானது ஊடகர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை கொண்டு வந்துள்ளது.

ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம்? என்ற எண்ணம் இந்தியா முழுக்க பரவலாக மக்களிடமே உருவாகி இருந்தாலும், தேசிய ஊடகங்கள் எனப்படும் பாஜக ஊடகங்கள் போர் வெறியை உருவாக்கி வருகிறது.

மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் பிரமாண்டமான இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் எப்படி சாத்தியம்?

இந்தியாவிலேயே உச்ச பாதுகாப்பு பகுதி காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை, எச்சரிக்கை நிறைந்த பகுதி, இந்த பகுதிக்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய SCORPIO வாகனத்தை எல்லா இராணுவ CHECKPOSTகளையும் தாண்டி ஒருவர் உள்ளே கொண்டு வந்து மோதுகிறார் என்றால் இராணுவத்தினர் தரப்பில் இருந்து உதவி இல்லாமல் ஒரு தாக்குதலை தீவிரவாதிகளால் நடத்த முடியுமா? இதை செய்தவர்கள் வெளியாட்களாக இருக்க வாய்ப்பில்லை.

இந்த நேரத்தில் CRPF அங்கே வருகிறார்கள் என்ற தகவலை Scorpio ஓட்டியவனுக்கு சொன்னது யார்?

78 CRPF வாகனங்கள் வரும் சாலையில் எந்த சோதனையும் இல்லாமல், ஒரு CAR செல்ல அனுமதித்த பொலிஸார், உளவுத்துறை, இராணுவத்தில் உள்ள CULPRITS யார் யார்?

ரோந்து செல்லும் போது அல்ல. இராணுவ அணிவகுப்பில் புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது நம்பும் படியாகவா இருக்கிறதா?

அணிவகுப்பில் புகுந்து தாக்கும் அளவுக்கா இந்திய இராணுவம் அவ்வளவு அறிவு இல்லாதவர்கள்?

சுமார் 350 கிலோ வெடிகுண்டுகளுடன் ஒருவன் காரில், தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து தாக்குகிறான் என்றால் பாதுகாப்புத்துறை எப்படி மக்களை பாதுகாக்க முடியும்?

இராணுவ வீரர்கள் பல வாகனங்களில் வரும் போது மிகச்சரியாக உட்புகுந்து தாக்குதல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் அந்த வாகனம் அதுவரை காத்திருந்ததா?

தப்பிக்க பார்க்கிறது பாஜக

இதற்கு பாகிஸ்தான் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறது பாஜக.

காஷ்மீர் மாநில உளவுத்துறை இப்படி ஒரு தாக்குதலுக்கான திட்டம் இருப்பதாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய உள்துறையும், உளவுத்துறையும் பொருட்படுத்தவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரச்சினை பாகிஸ்தான் பக்கம் இல்லை. பிரச்சினை இந்திய பாதுகாப்புத்துறையில் உள்ளது. வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டியவர் அடில் அகமது. அவர் புல்வாமா மாவட்டம் காம்க்கிபோராவை சேர்ந்தவர் என்றும், தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே செய்திகள் வெளியானது எப்படி?

இத்தனை ஆண்டுகள் வெடிக்காத குண்டுகள், தேர்தல் நேரத்தில் மட்டும் சரியாக வெடிப்பது ஏன்?

இதேவேளை காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் முன்னாள் சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளர் விஜெயகுமார் சொல்கின்றார் 350 கிலோ குண்டு அல்ல. வெடித்தது 80 கிலோ குண்டு தானாம்.

இந்த தாக்குதல், நாடாளுமன்ற தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா? என்ற ஐயம் மக்களிடம் பரவலாகவே எழுந்திருக்கிறது.

சுப்ரமணியனின் மனைவி கிரிஷ்ணவேணியின் சந்தேகம்

குண்டு தாக்குதலில் இறந்து போன தமிழ் நாடு CPRF படை சிப்பாய் சுப்ரமணியனின் மனைவி கிரிஷ்ணவேணியும் இதே சந்தேகத்தை பகிரங்கமாக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது

வான் மார்க்கமாக வீரர்களை கொண்டு செல்ல வைக்கப்பட்ட CRPF-ன் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது.

மூத்த CRPF அதிகாரி. - VPS.பன்வர் IGP ஓய்வு (CRPF)

மூத்த CRPF அதிகாரி. - VPS.பன்வர் IGP ஓய்வு (CRPF) (படை நகர்தலுக்கான முன்னாள் கமான்டர்) ஊடக கருத்து தெரிவிக்கையில்,

பொதுவாக 400-க்கு மேலான வீரர்களை ஒரே நேரத்தில் அழைத்து சென்றதில்லை. அவ்வாறு இருக்கையில் ஒரே நேரத்தில் 78 வாகனத்தில் அழைத்து சென்றது தவறான முடிவு.

வான் மார்க்கமாக வீரர்களை கொண்டு செல்ல வைக்கப்பட்ட CRPF-ன் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது.

பொதுவாக 400ற்க்கு மேலான வீரர்களை ஒரே நேரத்தில் அழைத்து சென்றதில்லை. அவ்வாறு இருக்கையில் ஒரே நேரத்தில் 78 வாகனத்தில் அழைத்து சென்றது தவறான முடிவு.

திடீர் தேச பக்தர்களா போர் போர்னு கத்தாமல் மோர் குடுச்சிட்டு CRPF இந்நாள் முன்னாள் அதிகாரி சொல்லும் வார்த்தைகளுக்கு பதிலை தேட முற்படுங்கள்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுத்துள்ளார்

காஷ்மீர் புல்வாமா குண்டு வெடிப்புக்கும் பாகிஸ்தானுக்கும் என்றும் அப்படியான ஆதாரங்கள் ஏதும் இருப்பின் அவைகளை ஐ.நா மன்றில் கொண்டு விவாதிப்போம்.

இந்திய அரசு எந்தவித விசாரணையை மேற்கொள்ள விரும்பினாலும் அல்லது ஏதாவது பாகிஸ்தானியர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என ஆராய்ந்தறிய விரும்பினாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் புலனாய்வில் பாகிஸ்தானியர் யாராவது ஈடுபட்டிருப்பது தெரிந்தால் எங்களிடம் பகிருங்கள். நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கிறேன்.

நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். இது புதிய பாகிஸ்தான். புது சிந்தனையோடும் புது மனநிலையுடனும் நாங்கள் உள்ளோம். மற்ற நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களில் எங்கள் தரப்பில் இருந்து யாராவது ஈடுபட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. நாங்கள் என்ன எங்கள் மண்ணில் பயங்கரவாதம் வேண்டும் என்ன விரும்புகிறோமா? என்றும் கேட்டுள்ளார்.

இது உங்கள் நாட்டில் தேர்தல் ஆண்டு என்பதால் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதாக கூறுவதன் மூலம் ஒருவித எழுச்சியை ஏற்படுத்த நீங்கள் முயல்வதை புரிந்து கொள்ள முடிகிறது.

எந்தப் பக்கம் பார்த்தாலும் காஷ்மீர் புல்வாமா குண்டு வெடிப்பு என்பது மோடி அணியின் திட்டமிட்ட சதிவேலை என்பது மட்டும் புலனாகின்றது. ஆனால் அவைகளை மறைத்து பாகிஸ்தான் மீது பழியைப்போட்டு தப்பித்து வருகின்றது மோடி அரசு.

வலுவான இந்திய நாட்டையும் இராணுவத்தையும் இந்திய பணத்தையும் அழித்து வருகின்றது மோடி அரசு.

இப்போது இந்த சதி வேலை பற்றி இந்திய இராணுவதித்திற்குள் பரவி வருகின்றது. ஆனால் இந்த குண்டு வெடிப்பு சதிவேலை ஊர்ஜிதமானால் அன்னை இந்திரா காந்திக்கு நேர்ந்த நிலை மோடிக்கு வரும் காலம் வெகு தூரமில்லை எனலாம்.

Latest Offers