தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் குறைகளை போக்க ஈரோஸ் முன்வர வேண்டும்!

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

இன்று தமிழ் பேசும் மக்கள் பிரச்சினை பற்றிப் பேச ஒருவர் கூட இல்லை தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் குறைகளை போக்க ஈரோஸ் அமைப்பு முன்வர வேண்டும்.

ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் கிழக்கு வாழ் முஸ்லிம்களை தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாகவே கருதி அவர்களைக் கையாள முற்பட்ட கால கட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற பார்வையைத் தனதாகக் கொண்டிருந்த ஒரே தமிழ் போராட்ட அமைப்பு ஈரோஸ்.

இந்த அமைப்பு மீண்டும் மக்களுக்காக வர வேண்டும். எத்தனை கோடி செலவு செய்தாலும் மூன்று எம்பிக்களை உருவாக்க வேண்டும், அந்த மூன்று எம்பிக்கள் என்பது காலப்போக்கில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சுமார் 22 எம்பிக்கள் கொண்ட மாபெரும் கட்சியாக மாறும், அப்போது பணப் பெட்டி மாறும் அரசியலும் முஸ்லிம் அரசியல் வியாபாரமும் ஒளிந்து போகும், மறைந்து போகும் என மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோஸ் அமைப்பு

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students) அல்லது ஈழப் புரட்சி அமைப்பு அல்லது ஈரோஸ் (EROS) எனும் பெயரால் 1975ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஈழப் போராட்ட தொடக்கக் காலம் முதற்கொண்டு செயற்பட்டு வந்த இயக்கங்களில் ஒன்றாகும்.

இந்த அமைப்பினுடைய ஸ்தாபகர் இ.இரத்தினசபாபதி ஆவார். இலங்கை, பாலஸ்தீனம், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த அமைப்பின் போராளிகள் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தனர்.

சர்வதேச ரீதியாக அரசியற் தொடர்பான கட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்புக் கொண்டிருந்தது. மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய நிறைவேற்று குழுவே உயர்மட்ட தீர்மானங்களை மேற்கொண்டது.

வே. பாலகுமாரன், ப. விக்னேஸ்வரன் (நேசன்) சங்கர் ராஜி ஆகிய மூவருமே நிறைவேற்று குழு உறுப்பினர்களாகச் செயற்பட்டனர்.

இந்த அமைப்பு PLOவுடன் நெருக்கமாக இருந்தது. இந்த அமைப்பில் எல்லோரும் படித்தவர்கள். அனேகமான ஈரோஸ் போராளிகள் உயர்தரம் படித்தவர்களும், பல்கலைக்கழக புள்ளிகளை பெற்றவர்களும், அதிகமாக இருந்தார்கள்.

இந்த அமைப்பில் கல்வியின் பால் கவர்ந்த பல முஸ்லிம் மாணவர்கள் அதிகளவு ஈரோஸ் அமைப்பில் இணைந்தார்கள்.ஏனைய இயக்கங்களில் இருந்தவர்கள் அநேகமானவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் ஈழப் புரட்சி அமைப்பு தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக “ ஈழவர் ஜனநாயக முன்னணி” என்ற பெயரில் அரசியற் கட்சி ஒன்றினை இலங்கையில் பதிவு செய்திருந்தது.

இந்தக் கட்சியின் சின்னம் கலப்பை (ஏர்) ஆகும். 1979ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

அதில் ஒரு எம்பி தான் ஏறாவூர் பசீர் சேகுதாவூத். மற்றொரு முஸ்லிம் திருமலை பக்கமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1990ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த இந்த அமைப்பு விடுதலைப்புலிகளின் அழுத்தங்களினால் 1990ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி வே.பாலகுமாரனினால் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது.

விரும்பியவர்கள் சுயாதீனமான முடிவுகளை எடுக்கலாம் என்ற அறிவித்தலுக்கு அமைய ஒரு தொகுதி உறுப்பினர்கள் வே.பாலகுமாரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்போடு இயங்கினர்.

பலர் இன்று வெளிநாடுகளில் வாழ்கின்றாகள். தமிழீழ போராட்ட அமைப்புக்களிலேயே ஈரோஸ் (EROS- Eelam Revolutionary Organisation ofStudents ) அமைப்புத்தான் கிழக்கு முஸ்லிம்களையும் உள்ளடக்கியதான ஒரு விரிந்த போராட்டப்பாதையை உருவாக்கி அதில் பயணிக்கவும் தலைப்பட்ட முதலாவது அமைப்பு என்று கூறலாம்.

1975ஆம் ஆண்டு இளையதம்பி இரட்ணசபாபதி மற்றும் பொறியியலாளர் ஏ.ஆர். அருட்பிரகாசம்(அருளர்) போன்றவர்களால் லண்டனில் வைத்து ஈரோஸ் அமைப்பு உருவாக்கப்பட்ட பொழுதே கிழக்கு வாழ் இஸ்லாமியர்களின் தேவைகள், இருப்பு, எதிர்காலம் போன்றனவற்றையும் கருத்தில் கொண்டே அந்த அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள் போன்றன வடிவமைக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இஸ்லாமியர்களின் தனித்துவம் போணப்பட வேண்டும் என்பது ஈரோஸ் அமைப்பின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாவே இருந்துவந்தது.

ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் கிழக்கு வாழ் முஸ்லிம்களை தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாகவே கருதி அவர்களைக் கையாள முற்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற பார்வையைத் தனதாகக் கொண்டிருந்த ஒரே தமிழ் போராட்ட அமைப்பு ஈரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான தேசிய இனமாகக் கருதி அவர்களை அனுகவில்லை என்றுதான் கூறவேண்டும்.

(இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட இருந்த வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகசபையின் பிரதிநிதிகளாக சில இஸ்லாமிம்களை புலிகள் பிரேரித்திருந்தாலும், அந்த முஸ்லிம் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதைவிட புலிகள் அமைப்பின் முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற அடையாளத்தையே அப்பொழுது கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஈரோஸ் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். மீண்டும் ஏர் சின்னம் வடகிழக்கில் வலம் வர வேண்டும். வெளிநாட்டில் வாழும் முன்னாள் ஈரோஸ் போராளிகள் மீண்டும் இணைய வேண்டும்.

அங்கிருந்து இந்த அமைப்பை உயிர் பெற செய்ய வேண்டும். மிக விரைவில் இலங்கயில் நடைபெறவுள்ள பொது தேர்தலில் ஈரோஸ் வடக்கு, கிழக்கில் பல எம்பிக்களை பெற வேண்டும்.

ஈரோஸ் சரியான பாதையில் பயணித்தால் சிங்கள ஆட்சியை தீர்மானிக்கும் அல்லது ஆட்சியை மாற்றும் அல்லது ஆளை மாற்றும் அணியாக அமையும் என்பதை திட்டவட்டமாக அடித்து சொல்லுவோம்.

வெளிநாட்டில் வாழும் ஈரோஸ் போராளிகள் உடனடியாக இலங்கையில் உள்ள முன்னாள் போராளிகள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்துவோம்.

ஆயுதமற்ற அரசியலில் காலம் அமைக்கலாம். ஊடக வாயிலாக என்னால் முடிந்த பணிகளை செய்வேன் மக்கள் நலன் கருதி இணைவோம்” என அந்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.