ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை அனுசரனை வழங்கியுள்ளது?

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கொபி அனானினால் மறுசீரமைக்கப்பட்டு ஐ.நா மனித உரிமை சபை 2006இல் நிறுவப்பட்டது.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஆணைக்குழு மிகவும் அரசியல் மயமாக்கப்பட்டிருந்தமை. இப்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் என்ன நடக்கிறது?

சில மாதங்களுக்கு முன்பு, ஐ.நா. மனித உரிமை சபை உறுப்பினர்கள் குறித்து, ஓர் அரச சார்பற்ற நிறுவனம் தங்கள் அறிக்கையில்,

‘கோழிகளைக் பாதுகாப்பதற்கு நரிகளை அனுமதிப்பது போன்று உள்ளதாக கூறியிருந்தனர்’.

தற்போதைய ஐ.நா. உரிமை சபை 47 உறுப்பினர்களில், மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளிற்கு மேலாக, மீறும் நாடுகளையே கொண்டுள்ளனர்.

தற்போதைய உறுப்பினர்களைப் பற்றி சுருக்கமாக கூறுவதானால் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் துருக்கி நகரில் உள்ள தூதரகத்தில் கொன்ற சவுதி அரேபியாவும் மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளில் ஒன்று. 13 வருடங்களைக் கொண்ட மனித உரிமை சபை, ஐ.நா.வின் மற்றொரு அரசியல் மயமாக்கப்பட்ட அங்கமாக மாறியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், இலங்கை போன்ற மிக மோசமான மனித உரிமைகளை கொண்ட நாடுகளை எவ்வாறு ஆராய முடியும்? மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகள் மனித உரிமை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் எவ்வாறு பார்ப்பார்கள்?

முன்னைய ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அதே விஷயங்கள் ஐ.நா.மனித உரிமை சபையில் தற்பொழுது நடக்கின்றன.

இலங்கையை மோசமான மீறல்களை கொண்டுள்ள சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள் நன்கு பாதுகாக்கப்படுகிறது.

நிச்சயமாக, முன்னாள் மனித உரிமைகள் ஆணையர்கள் மற்றும் தற்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், ஐ.நா. மற்றும் பிற ஐ.நா. சுயாதீன வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை அமைப்புக்கள் இலங்கை மீது நடவடிக்கைகான பல முயற்சியைச் செய்கிறார்கள். ஆனால் நடவடிக்கைக்கு வரும்போது, அவை பல சூழ்நிலைகளில் சக்தியற்றவையாகவும், குரலற்றவையாகவும் இருக்கின்றன.

மனிதம் மீறும் நாடுகள் குறித்து அவர்களால் நன்கு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, மீறு நாடுகள் அலட்சியம் பண்ணுகிறார்கள். ஐ.நா.

மனித உரிமை சபையின் அரசியல் மயமாக்கப்பட்ட சில உறுப்பினர்கள் மனித உரிமைகள் மற்றும் மனிதநேயத்திற்கு அவமானத்தை சம்பாதிக்கிறார்கள்.

ஐ.நா. மனித உரிமை சபையின் செயலற்ற தன்மையைக் காண இலங்கையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இலங்கை மீது கடுமையான தீர்மானத்தை கொண்டுவருவதற்கு மனித உரிமை சபைக்கு என்ன விடயம் குறைவாக காணப்படுகிறது? ஐ.நா. பாதுகாப்பு சபை அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் - வழியாக அவர்கள் ஏன் இலங்கையின் விடயத்தை அனுப்பமுடியாமல் உள்ளனர்?

நேரம் கடத்துதல்

உலகெங்கிலும் உள்ள மனித உரிமை சமூகம் இலங்கையின் மனித உரிமை நிலைக்கு நீதி காண்பதற்காக அனைத்து வழிமுறைகளையும் முயற்சித்ததுள்ளது. தமது பிரச்சாரத்திற்கு, உலகெங்கிலும் பில்லியன் கணக்கில் செலவழிக்கும் இலங்கையினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

மே 2009 இல் போர் முடிவடைந்ததிலிருந்து, இலங்கையின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் இரட்டிப்பாகியுள்ளது - ஏன்? வெளிநாட்டு நிறுவனங்கள், வல்லுநர்கள், சிங்கள மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோரின் சிலருக்காக கொடுப்பனவுகள், முன்னாள் இலங்கை படையினரின் கபட வேலைகளிற்கான செலவுகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சு செலவிடுகிறது.

சர்வதேச சமூகம் - இலங்கை ஆட்சியாளர்களின் கபடத்தனத்தை புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள் மற்றும் பலர் ஐ.நா.வின் தீர்மானத்தில் உள்ள அனைத்தையும் செயல்படுத்த முடியாது என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கையில், அவர்கள் மீண்டும் இணை அனுசரணை வழங்குகிறார்கள்! அவர்களின் நான்கு தூண்களை அடைவதற்காக அதிக நேரத்தையும் தீர்மானத்தையும் இலங்கை இணை அனுசரணை வழங்கியது என்பது மிகவும் வெளிப்படையானது.

1948 ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு இலங்கை அரசாங்கமும் வடக்கு மற்றும் கிழக்கில் நான்கு தூண்களை முழுமையாக அடைந்தவுடன், இன மோதலுக்கான அரசியல் தீர்வுக்கான சர்வதேச அழுத்தம் மற்றும் பொறுப்புக்கூறல் இயற்கையாகவே நிறுத்தப்படும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

சர்வதேசத்தின் மற்றும் ஐ.நா.வழிமுறைகளின் பலவீனங்களைப் பயன்படுத்தி, இலங்கை ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கை அடைந்துள்ளது என்பதைக் கண்டு சர்வதேச சமூகம் வெட்கப்பட வேண்டும்.

ஜெனீவாவில் முன்னாள் படையினர்

ஐ.நா. மனித உரிமை சபையின் கடந்த 40ஆவது அமர்வில் என்ன நடந்தது என்பதை யாவரும் அறிய வேண்டும். கொழும்பிலிருந்து வந்த தூதுக் குழுவிற்கு மாத்திரம் 20 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான தொகையை செலவழித்து பிரகாரம் செய்யும் இலங்கை அரசாங்கதுடன் நாம் எவ்வாறு போட்டியிட முடியும்?

முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களின் புலம்பெயர் நண்பர்களை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நன்றாக செலவு செய்து பயனடைகிறது.

2019 மார்ச் 21ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. கட்டிடத்திற்குள் முன்னாள் படையினரும் சில போர்க்குற்றவாளிகளும் அனுமதிக்காது தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பதனை, எத்தனை பேர் அறிந்துள்ளனர்?

மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், அன்று நண்பகல் 12.00 மணிக்கு நடக்கவிருந்த முன்னாள் படையினரின் பக்க நிகழ்வில், உரையாற்றுவதற்கு முன்னாள் படையினார் யாரும் ஐ.நாவில் இருக்கவில்லை.

ஏமாற்றமடைந்த சரத் வீரசேகர மற்றும் அவரது கும்பலும், எந்தவித அறிக்கையோ சத்தம் காட்டாமல் ஐ.நா.கட்டிடத்திலிருந்து நழுவி விட்டனர். இந்த சம்பவம் குறித்து சில இலங்கை ஊடகங்கள் அறிந்திருந்தாலும், ‘வெள்ளை வான்’ பீதி காரணமாக அச்செய்தியை தனிக்கை செய்தனர்.

40ஆவது அமர்வில் தீர்மானத்தை நாங்கள் கருத்தில் கொள்ளும்போது, இங்கிலாந்து மற்றும் இணைக் குழுவின் உறுப்பினர்கள் மாண்டினீக்ரோ,

மாசிடோனியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகியவை தங்களால் முடிந்ததைச் செய்தனர். என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த தீர்மானத்தை இலங்கை இணை அணுசரனை வழங்கியதன் காரணத்தை மேலே விளக்கியுள்ளேன்.

மார்ச் 5, செவ்வாயன்று, இங்கிலாந்து மற்றும் இணை குழு ‘இலங்கை தொடர்பான வரைவுத் தீர்மானம் குறித்த ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தன. இந்த கூட்டத்தில், இலங்கை தூதர் வரைவுக்கு ஒப்புதல் அளித்து, தீர்மானத்திற்கு இலங்கை அணுசரணை வழங்குமென கூறினார்.

ஆனால் சுவிட்சர்லாந்து, சுவீடன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகள் வரைவுத் தீர்மானத்தை கடுமையாக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தது.

இதனை அடுத்து, பிரித்தானியா மற்றும் இணை குழுவினர் மாற்றங்களைச் செய்வதாகவும், பின்னர் மற்றொரு கூட்டத்தை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவை நடைபெறாதவாறு இலங்கையின் ஜனாதிபதியும், பிரதமரும் நாடகம் ஆடினார்கள். நல்ல நடிப்பு.

ஆளுநரின் அடிமைத்தனம்

ஐ.நா. மனித உரிமை சபையின் எதையும் எதிர்க்காத கொழும்பிலிருந்து வருகை தந்த மூவரும் மீண்டும் கொழும்புக்குச் சென்று, ஜெனீவாவில் தாய்கள் ஒரு பெரிய வேலை செய்ததாக புத்தி சுகாதீனம் குறைந்த ஜனாதிபதியையும் உள்ளூர் மக்களிற்கும், உள்ளூர் ஊடகங்கள் மூலமாக தவறான பொய்யான அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினர்.

இந்த மூவரின் நடவடிக்கைகள் உண்மையில் ஐ.நா. மனித உரிமை சபையின் பிரசன்னமாக இருந்தவர்களுக்கு மிக வேடிக்கையானவை.

உண்மையில், வடக்கின் தற்போதைய ஆளுநர், இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லட்சுமன் கதிர்காமரை தோற்கடித்துள்ளார்.

கதிர்காமர் தனது வேலைகளை இலங்கையின் வெளியுறவு அமைச்சராக செய்தார். ஆனால், சர்வதேசத்துடன் எந்த வேலை திட்டமும் அற்ற வடக்கு மாகாண ஆளுநர் தனது ‘அடிமை வர்த்தகத்தை’ செய்வதற்காக ஜெனீவாவுக்கு வந்தார்.

விரக்தியடைந்த ஆட்சிகள் முக்கியமாக தமிழர்களைப் பயன்படுத்தி தங்கள் திட்டங்களுக்கு ஒப்புதல் தேடினார். எதிர்காலத்தில் ஒரு நாள் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து சில முக்கிய பாடசாலை அதிபர்களை இலங்கை தங்கள் சர்வதேச பிரச்சார குழுவில் சேர்க்கப்பார்கள் என்பது நிச்சயம்.

எவ்வாறாயினும், ஐ.நா. மனித உரிமை சபையின் 40ஆவது தற்போதைய தீர்மானம் 2015இல் ஐ.நா. மனித உரிமை சபையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30-1ஐ முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறது.

இந்த தீர்மானம் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கோழைத்தனம்

அணுசரனையின் பெயரில் இன்னும் இரண்டு வருட கால அவகாசத்தை பெற்று கொண்ட இலங்கை - ஒவ்வாருவராக, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தங்கள் கோழைத்தனத்தைக் காட்டத் தொடங்கினர்.

இப்போது அவர்கள் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான பரிந்துரைகளை செயல்படுத்த மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

சர்வதேச சமூகமும் ஐ.நா. மனித சபை உறுப்பினர்களும் இதை கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இப்போது, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரமான சம்பவங்கள் மற்றும் நாட்டில் தற்போதைய கொந்தளிப்புகள் ஆகியவை இலங்கை தீர்மானத்தை செயல்படுத்தாததற்கு நல்ல காரணங்களாகக் காண்பிக்கப்படும்.

எமது தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினால், மார்ச் 18இல் 2019 அன்று ஒரு பக்க நிகழ்வை ஏற்பாடு செய்தோம், சரத்வீரசேகரவும் மற்றும் அவரது கும்பலும் அதில் கலந்து கொண்டனர்.

எங்களுக்கு நேரம் குறைவாக இருந்தபோதிலும், இந்த கோழை வீராங்கனைகளின் அணுகுமுறையை மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக எங்கள் கூட்டத்தில் ஒரு நிமிடம் உரையாற்றுவதற்கு சரத் வீரசேகரவிற்கு வேண்டுமென்றே ஒரு வாய்ப்பை வழங்கினேன். கூட்டத்தில் உரையாற்றிய எவருடைய கருத்தையும் இவர்களால் எதிர்த்து உரையாற்ற முடியவில்லை.

வழக்கம் போல் சரத் வீரசேர பொய் மற்றும் ஏமாற்றுத்தனத்தால் அவதூறாக பேசத் தொடங்கினார். அவர் சொன்ன ஒரு விஷயம் என்னவென்றால், தெற்கில் சிங்களவர்களை விட அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

இது இலங்கை பிரச்சாரகாரர்களின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளில் ஒன்றாகும். அது உண்மை என்று எடுத்துக் கொள்ளுங்கள்! அப்படியானால், தெற்கில் எத்தனை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்? இந்த பிரச்சாரம் உண்மையாக இருந்தால், கதிர்காமம் மற்றும் தெற்கில் வேறு பகுதிகளில் வாழ்ந்து வளர்ந்த தமிழர்களை அவர்கள் ஏன் விரட்டியடித்தார்கள்? அவர்கள் உண்மையான மீள்குடியேற்றத்தைப் பற்றி நேர்மையாகப் பேசுகிறார்களானால், தெற்கில் கதிர்காமம் மற்றை பகுதிகளிலும் வாழ்ந்த தமிழர்களை ஏன் மீளக்குடியமர்த்த மறுக்கின்றனர்? தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு தமிழோ அல்லது முஸ்லிமோ தெற்கில் உள்ள சிங்களவர்களிடையே இணக்கத்துடனும் வாழ முடியுமா? கதிர்காமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தமிழர்கள் தான் அந்த பகுதிகளையும் புனித தலங்களையும் வளர்த்தவர்கள்.

மங்கள சமரவீர எங்கே?

‘நல்லாட்சி’ என்று அழைக்கப்படும் அரசு - ஏன் வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து மங்கள சமரவீர நீக்கப்பட்டார் என்பதற்கு சரியான விளக்கம் கொடுக்க முடியுமா? இது தெற்கில் உள்ள தந்திரமான அரசியல்வாதிகளின் வழமையான விளையாட்டு.

தற்போதைய அரசாங்கத்தின் சார்பாக சமரவீர புனைகதைகளைச் சொல்லி, நல்லாட்சி என்று அழைக்கப்படுவது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தில் அதிசயங்களைச் செய்யும் என்று சர்வதேசத்திற்கு போலி வாக்குறுதிகளை அளித்து வந்தது.

இவற்றை சர்வதேசம் மட்டுமல்ல, சில மிதவாத தமிழர்களும், சமரவீரவுடன் பிறந்த நாள் மற்றும் விருந்துகளை கொண்டாடுபவர்கள் நம்பினார்கள். இப் பொழு மங்கள சமரவீர கையை விரிக்க இத்தகைய அரசியல் போலித்தனம் இலங்கையினால் பல தசாப்தங்களாக தொடர்கிறது.

40ஆவது அமர்வில் நடந்த ஒரு நகைச்சுவை இங்கு கூறுவது எனது கடமை. இந்த அமர்வில் வேறு எந்த முன்னைய அமர்வையும் விட இலங்கை உளவுத்துறையின் பல தமிழ் முகவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நல்ல ஊதியம் மற்றும் வசதிகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் நன்றாக கவனித்து வருகிறது.

அமர்வின் கடைசி வாரத்தில், ஐ.நா. மனித உரிமை சபையில் ஒரு நபர், சிவப்பு வண்ண தலைப்பாகை மற்றும் தூய வெள்ளை உடை அணிந்திருப்பதைக் கண்டோம். ஆரம்பத்தில் இது வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் என்று நாங்கள் நினைத்தோம்.

பின்னர் அவர் ‘16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் மன்னராக இருந்த தமிழ் மன்னர்சங்கிலியனின் உறவினர்’ என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த போலி பாத்திரம் கடந்த சில ஆண்டுகளாக நெதர்லாந்திலில் வாழும் ஓர் கோழை தமிழனால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெதர்லாந்தில் வாழ்கிறது. சில ஆண்டுகளாக இந்த மனிதரும் நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக நடிக்கும் மற்றொரு மனிதரும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் ஊதியம் அளித்து வருகிறது.

தமிழர்களின் வரலாறு தொடர்பாக சர்வதேசத்தை தவறாக வழிநடத்துவதற்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் இவ்விரு போலி நபர்கள் வழிநடத்தப்படுகின்றனர்.

வெளிப்படையாகச் சொல்வதானால், இதே ஆடையுடன், அவர் ஏதேனும் ‘வினோத உடை’ போட்டியில் பங்கேற்க முடியுமானால் அவர் நிச்சயமாக முதல் இடத்தை வெல்வார்.

இவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள்? இலங்கை விரக்தியடைந்த காரணத்தினால் மிகவும் மலிவான வழிகள் மூலம் சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது. சர்வதேச நீதியை தவிர்ப்பதற்கு சிறிலங்கா கொடுக்கும் விலை அதிகம். ஆட்சியாளர்களின் குறுகிய கால அணுகுமுறைகளினால் நடவடிக்கைகள் காரணமாக இன்று இலங்கை குழப்பத்தில் உள்ளது.

Latest Offers

loading...