இலங்கையில் 2020 அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை; பிரான்சிலிருந்து ச.வி.கிருபாகரன்

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை
830Shares

ஒரு நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும், தமிழரும் என்ற அடிப்படையில், தாராளவாத அரசியலை என்னால் கொண்டிருக்க முடியும். இது எந்த கட்டத்திலும் பயங்கரவாதமோ அல்லாது சட்டவிரோதமானது அல்லாது. ஏது என்னவானாலும், அன்றும், இன்றும், என்றும், யூலை 1977ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் மக்களினால், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு கொடுக்கப்பட்ட வெளிவாரியான சுயநிர்ணய உரிமைக்கான ஜனநாயக ஆணையின் ஆதரவாழனாகவே திகழுகின்றேன்.

வழமைபோல் சிங்கள பௌத்த ஆட்சியாளரான, ஜே. ஆர் ஜெயவர்த்தன அரசினால், பாராளுமன்றத்தில் ஆறாவது திருத்த சட்டத்தை நிறைவேற்றி, வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய வெளிவாரியான சுயநிர்ணய உரிமைக்கான ஆணை, சிறிலங்கா பாராளுமன்றத்தினால் நசுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கேள்விகுறியில் உள்ள 13வது திருத்த சட்டத்தின் சாரங்களும், இவ்விதமாக, திருத்த சட்டம் மூலம் நிச்சயம் வலுவிழக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தெற்கின் அரசியல்வாதிகள் சிறிலங்கா அரசை பொறுத்தவரையில், தமது வெற்றிகளை தாம் கொண்டாடலாம், அவையாவும் அவர்களுக்குமான பெரும் சாதனைகள். ஆனால் வடக்கு,கிழக்கு வாழ் மக்களுக்கு மக்கள் கொடுத்த ஜனநாயக ஆணை என்பது, நாட்டிற்கு சட்டவிரோதமானதுடன், இவையாவும் நாட்டின் இறையாமையும் ஒருமைப்பாட்டையும் மீறுவதாக அவர்களிற்கு தென்படுகிறது. இதுதான் சிறிலங்காவின் ஜனநாயகம். இவற்றை சர்வதேச சமுதாயகமும் இந்தியாவும் நன்றாக கவனித்த வண்ணம் உள்ளார்கள்.

கடந்த மூன்று தசாப்தங்களிற்கு மேலான எனது மனித உரிமை செயற்பாட்டின் வேளையில், ஐ.நா .மனித உரிமை அரங்குகளில் - சிறிலங்காவின் அரச பிரதிநிதிகள், முக்கிய அமைச்சர்கள், முன்னாள் படையினர், இனவாத பத்திரிகையாளர்கள், சிங்கள தீவிரவாதிகள் போன்று பலரை எதிர்கொண்டு விவாதங்களும் நடத்தியுள்ளேன். அவர்கள் யாவரும் தமது அரசியல் பயணத்தின் நோக்கத்துடன் உணர்ச்சிவசமாக உரையாடுகிறார்கள்.

தற்போதைய அரசின் மூன்றில் இரண்டு வெற்றி என்பது, தெற்கின் சிங்கள பௌத்தவாதிகளினால் மட்டுமே கொடுக்கப்பட்டது என்பதே உண்மை. ஆகையால் இவ்அரசு, வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது தமிழ் பிரதிநிதிகளிற்கு கொடுத்துள்ள ஆணையை மதித்து செயற்படவேண்டும்.

தமிழ் தேசியம் நிர்மூலமாக்கப்படுகிறது

இலங்கைதீவின் சரித்திரத்தை, ஓர் பக்கசார்பற்ற ஒருவர் ஆய்வு செய்வாரேயானால், தவணை முறையாக மாற்றமடைந்து வரும் அரசியல் அமைப்பு என்பது வடக்கு,கிழக்கு வாழ் மக்களிற்கு ஒரு உருப்படியான பயனையும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்வார்கள்.

தொடர்ச்சியான புதிய அரசியல அமைப்பு யாவும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அபிலாசைகளை படிப்படியாக பறித்துள்ளதுடன், தமிழ் மக்களை இலங்கை தீவின் வரை படத்திலிருந்து அடியோடு அகற்றுவதை காணக்கூடியதாகவுள்ளது.

1972ம் ஆண்டு சோசலிச கட்சிகள் எனப்படுவோரினால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்களிற்கு போர் குணம் ஏற்பட வழிவகுத்தது. இதனை தொடர்ந்து 1978ம் ஆண்டு ஜே. ஆர் ஜெயவர்த்தவினால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு, வடக்கு கிழக்கு ஒரு முழுமையான ஆயுத போராட்டத்திற்கு வழிவகுத்தது.

தற்பொழுது சிறிலங்கா அரசினால் அல்ல, ராஜபச்ச குடும்ப அரசினால் ரா.அ. உருவாக்கபடவுள்ள அரசியல் அமைப்பு என்பது நிச்சயம் வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. யாவரும் பொறுமையாக இருந்து வருவதை சந்திப்போம்.

மிக அண்மையில் ரா.அரசினால், இந்தியா தூதுவராக அமைச்சர் அதிகாரங்களுடன் மிலிந்த மொறகொடையின் - மி.மொ. நியமனம் என்பதை, இந்தியா மிக இலகுவாக அலட்சியம் செய்ய முடியாது. காரணம் - சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் சிறிலங்காவுடனான நெருங்கிய நட்பு.

தமிழீழ விடுதலை புலிகளிற்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தின் சூத்திரகாரியும், இதை நிர்மூலமாக்கிய வரும் இவ் மி.மொ. என்பதை யாரும் மிக இலகுவில் மறந்துவிட முடியாது. அவ்வேளையில் தமிழ் மக்களிற்கான தீர்வாக, சமஸ்டியை வெளிப்படையாக கூறிவந்த மி.மொ. மிக அண்மை காலமாக, 13வது திருத்த சட்டத்தையும் மாகாண சபைகளையும் அரசு உடனடியாக நீக்க வேண்டுமென கூறியுள்ளார்.

ஆகையால் இவரின் நியமனம் என்பது, ரா.அ பல கபடமான திட்டங்களை உள்ளடக்கியுள்ளதுடன், இந்தியாவின் முக்கிய புள்ளிகள் சிலரை மூளை சலவை’ செய்யவுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

கோட்டபாய ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான பணிக்குழுவின் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பதினொரு உறுப்பினர்களில் எல்லவாலா மேதானந்தா தேரோவும் ஒருவர்.

இந்த புத்த பிக்குவின் அறிவின்மையையிட்டு மனம் வருந்துகிறேன். ‘மாகாவம்சம்’எனும் கற்பனை கதையை நிச்சயம் புத்தபிக்கு நன்கு அறிந்திருப்பார். ஆனால் இவருக்கு சிறிலங்காவின் சட்டம் பற்றி எந்த அறிவும் கிடையாது என்பது சிரிப்பிற்கு இடமானது.

சிறிலங்காவை பொறுத்த வரையில் ஒருவர் இருபத்தைந்து வருடத்திற்கு மேல் ஒரே வீட்டில் தொடர்ந்து வாடகைக்கு இருந்தால் அவ்வாடிக்கையாளர் அவ்வீட்டிற்கு உரிமை கோரலாம்.

ஒரு பேச்சுக்கு தமிழ் மக்கள் சிறிலங்காவில் வாடகைக்கு இருப்பவர்களாக ஏற்றுகொண்டாலும் தமிழ் மக்கள் இலங்கை தீவில் ஆயிரம் வருடங்களிற்கு மேல் வசிப்பவர்கள். அப்படியானால் புத்தபிக்கு ராஜபக்சக்கள் மூலம் வாடகைக்கு இருப்பவர்களின் உரிமையை இல்லாமல் செய்வதற்கு இன்னுமொரு திருத்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேதானந்ததேரோ ‘ஆழம் அறியாமல் காலை விட முயற்சிக்கப்படாது’.

ரா.அ.சின் நீதி அமைச்சர் என்பது உண்மையில் அவர்களது கைபொம்மை. ரா.அ. திட்டங்களை இவர் மூலமாக செய்யப்படவுள்ளது. இவரும் முஸ்லீமான தனக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்கபட்டுள்ளதை எண்ணி மிகவும் பெருமை கொள்கிறார்.

உண்மை கூறுவதனால், யாவரும் அறிந்த உண்மை என்னவெனில், ரா.அ.சினது அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், பௌத்த துறவி ஆகியவர்களின் கருத்து என்பது, நிச்சயம் அவர்களது கருத்து அல்ல. இவையாவும் ராஜபச்ச குடும்பத்தினரினால் இவர்கள் மூலம் சொல்லப்படுபவையே.

யதார்த்தம் என்னவெனில், தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளிற்கான போராட்டத்தை, மாறுபட்ட சிறிலங்கா அரசுகள், பயங்கரவாத முத்திரை குத்தி, சர்வதேச உதவிகளை பெற்று கொண்டனர். இதன் காரணமாக, உலகில் உள்ள அரச நிறுவனங்களும், அரசுகளும் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.

யாரும் மறக்க முடியாத விடயம் என்னவெனில், உலகின் நடைமுறைகள் நாளுக்கு நாள் மாறுதலடைகின்றது. இவ் அடிப்படையில், ரா.அ.சினால் உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பு என்பது, தமக்கு வாக்கு அழித்தவர்களிற்கு மட்டுமல்லாது, தமக்கு எதிராக வாக்களித்தவர்களை அலட்சியம் செய்யாது அமைய வேண்டும்.

அரசியல் கோமாளிகள்

தற்போதைய ரா.அ. 145 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. இவர்களை ஒழுங்காக ஆய்வு செய்தால், இவர்களில் சிலர் யுத்த குற்றம் புரிந்தவர்களாகவும், தீவிர இனவாதிகளாகவும், மிக அடிப்படை கல்வி அறிவை கொண்டவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆகையால் இப்படியான பெயர் வழிகள், ‘நீர் இல்லாது துடிக்கும் மீன் போலவும், கோமாளிகள்’ போன்றும் அல்லற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.

இதன் காரணமாக இவர்களினால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் யதார்த்தங்களை ஜீரணிக்க முடியாது தவிக்கிறார்கள். எது என்னவானாலும் இது ஓர் நல்ல ஆரம்பமாக நாம் கொள்ளலாம். மாவோவின் தத்துவத்திற்கு அமைய, “ஒரு ஒற்றை தீப்பொறி பாரிய தீயை உண்டாக்க முடியும்”.

ரா.அ.னால் தமது எண்ணங்கள் கருத்துக்களை பிரதிபலிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கோமாளிகள் சிலர் பற்றி இங்கு ஆராய வேண்டியுள்ளது. காரணங்கள் ராஜபக்சக்கள் - ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், செயலாளர்களென முக்கிய பதவிகள் வகிக்கும் காரணிகளினால், அவர்களினால் தமது வழமையான இனத்துவேசத்தையோ, இனபாகுபாடுகளையோ வெளிப்படையாக கூறினால், தமது அரசிற்கு சில எதிர்மறை தாக்கங்கள் உண்டாகலாமென எண்ணுகிறார்கள்.

கெகெலிய ரம்புக்வெல்ல

கெ. ர. ரா.அ.ல் உள்ள மற்றொரு கோமாளிகளில் ஒருவர். 13 வது திருத்தம் ஒரு வாரத்தில் செயல்படுத்தப்பட்டது என்று விடயம் விளங்காது அலட்டுகிறார். இது அவருக்கு வரலாறோ, அரசியலோ தெரியாது என்பதை நிருபிக்கிறது.

13 ஆவது திருத்த நடைமுறை பற்றியும் தமிழ் போராளி குழுக்களுக்கும், சிறிலங்கா அரசிற்குமிடையில் இந்தியாவினால் ஏற்பாடு செய்திருந்த பேச்சு வார்த்தைகள் பற்றியும் இவர் அறிந்திருக்கவில்லை போலும். மேலும் இவர் திம்பு பேச்சு வார்த்தைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரோ என்பது இப்பொழுது சந்தேகமாகவுள்ளது.

டெய்லி மிரர் செய்தி யூன்18, 2007

ஜெனீவா ஐ.நா மனித உரிமை சபையில் சிறிலங்கா அரசாங்கக் குழுவினரின் ஒரு கூட்டத்தில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த உரையாடல்களில், இலங்கையிலிருந்து சென்ற குழுவிற்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் பரபரப்பான வார்த்தை பரிமாற்றம் இடம்பெற்றதென அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தனர்.

சிறிலங்காவின் சட்ட மா அதிபர் சி.ஆர்.தீ சில்வா தலைமையிலான அரசாங்க தூதுக்குழுவில் அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, டக்ளஸ் தேவானந்தா, கெஹெலியா ரம்புக்வெல்ல, அதவுடா செனவிரத்ன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சிறிலங்காவின் தூதர் தயான் ஜெயதிலகே ஆகியோர் அடங்குவர்.

வெள்ளியன்று தமிழ் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி. கிருபாகரன் பல சர்ச்சைக்குரிய பல விடயங்களை அரசாங்க தூதுக்குழுவிடம் வினாவியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர்கள் ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா மற்றும் செனவிரத்ன ஆகியோர் பரபரப்பான வாக்குவாதத்தில் கிருபாகரன் ஈடுபட்டார். இவ் கூட்டத்தில் சிவில் சமூக அமைப்புகளின் பல உறுப்பினர்களும் மற்றும் பல அரசாங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். (செய்தி சுருக்கம்)

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,

இலங்கையில் உள்ள கல்விமான்கள் புத்திஜீவிகளிடைய ஓர் சிறந்த கோமாளியாக உள்ளார். இவர் அரசியல் வட்டத்தில் எவ்வாறு தன்னை நிலைபடுத்தி கொள்கின்றார் என்பதை அறிந்து கொள்ள விரும்புவோர், இவரது முன்னைய உரைகள் செயற்பாடுகளை கவனித்தால் தெரிந்து கொள்ளலாம். இவருக்கு பதவிகளும் மேடைகள் கொடுக்கும் யாருக்காகவும் இவர் குரல் கொடுக்க தயங்குவதில்லை. இவர் ரா.அ.ன் மிக திறமான ஊதுகுழல்.

டெய்லிமிரர் செய்தி -செப்டம்பர் 26, 2007

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை சபை அமர்வில் கலந்துகொண்ட சிறிலங்கா அரசாங்க குழு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைக்குழுக்களுடன் சூடான விவாதத்தில் ஈடுபட்டதாக. கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தனர்.

2003 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் முன்வைத்த ஐ.எஸ் .ஜி.ஏ. எனப்படும் இடைக்கால தீர்விற்கான வரைவு முற்றிலும் தனி அரசிற்காக காணப்பட்டதாக பேராசிரியர் பீரிஸ் வலியுறுத்தியபோது, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச. வி. கிருபாகரன், அவ்வேளையில் அமைச்சர் பீரிஸ் தலைமையிலான அரசாங்கம் ஐ.எஸ்.ஜி.ஏ.வுடன் அரசாங்க முன்மொழிவுடன் விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக அமைச்சர் பீரிஸ் கூறியதாக கிருபாகரன் நினைவு கூர்ந்தார்.

அந்த நேரத்தில் அரசாங்க பேச்சுவார்த்தை குழு, அமைச்சர் பீரிஸ் உட்பட இரு திட்டங்களிலிருந்தும் எழும் பிரச்சினைகள் குறித்த நேரடி விவாதங்கள் மூலம் முன்னோக்கி செல்லும் வழி உள்ளது என்பதை அமைச்சர் பீரிஸ் அவ்வேளையில் ஒப்புக்கொண்டதாக திரு. கிருபாகரன் கூறினார்.

அத்துடன் அங்கு உரையாடல்களில் ஈடுபட்ட அரசாங்க குழு உறுப்பினர்கள், விடுதலை புலிகளை ஒரு இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பு என்றும் உலகின் மிக மோசமானது என்றும் வர்ணிப்பது உண்மையானால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற இணைத் தலைவர்கள் எதற்காக விடுதலை புலிகளுடன் சிறிலங்கா அரசை பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது என ச. வி. கிருபாகரன், வினவினார்? இவ்வினாவிற்கு ஜெனீவாவின் இலங்கை தூதுவர் தயான் ஜெயதிலகே பதிலளிக்கையில்,

அவை இணைத் தலைவர்களின் கருத்துக்கள் என்றும் மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்லாவென கூறினார். (செய்தி சுருக்கம்)

விமல் வீரவன்ச

தேர்தல் ஆணையாளரின் காலத்தைப் பற்றிய விஷயங்களை கூறுவதும், விக்னேஸ்வரனை சம்பந்தனுடன் இவர் ஒப்பிடுவதை பார்க்கும் வேளையில், ‘ சண்டே லீடர்’ முன்னாள் ஆசிரியர் பிரடெரிக் ஜான்ஸ் தனது கட்டுரையில் எழுதியதை நினைவூட்டுகிறது.அவர் கூறுகிறார், வி.வீ "ஒரு சிறிய குளத்தில் சிறிய மீன்" என.

ஜூலை 2010 இல், கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு வெளியே வி.வீ உண்ணாவிரதம் இருந்ததிற்கான காரணத்தை இவர் அறியாமலே உண்ணாவிரதம் இருந்தார். ஏனெனில் மஹிந்த ராஜபக்க்ஷ - எம்.ஆர் இதுவரை இந்த பணியை செய்ய தூண்டினார் என்பதே உண்மை.

வி.வீ பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. 2006 ஆம் ஆண்டில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் பெண் ஊழியரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு பொதுமக்களை இவர் கோரினார். 2015 ஆம் ஆண்டில் இவரது மனைவி ஒரு இராஜதந்திர கடவு சீட்டை பெறுவதற்காக உத்தியோகபூர்வ போலி ஆவணத்தை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

மே 2017 ல் இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக பொதுமக்களை எதிர்ப்பு காட்டுமாறு வேண்டியிருந்தார். புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பாராளுமன்றம் மீது குண்டு வீசப்பட வேண்டும் என்று அக்டோபர் 2017 இல் இவர் கூறியிருந்தார்.

எம்.ஆர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், எம்.எம் மூத்த ஜனாதிபதி ஆலோசகராகவும், அமைச்சராகவும் இருந்த வேளையில் வி.வீயும் அமைச்சர் பதவியிலிருந்தார். அவ்வேளையில் வி.வீ. ஒரு பொழுதும் எம்.எம் ஒரு அமெரிக்க முகவர் என குற்றம் சாட்டியது கிடையாது. ஆனால் இப்போழுது வி.வீ.யினால் எம்.எம் மீது வைக்கும் குற்றச்சாட்டை எம்.எம் பகுப்பாய்வு செய்ய கடமைப்பட்டுள்ளார்.

சரத்வீரசேகர கோட்டபாயவினுடைய குடும்ப உறவினர். இவ் அடிப்படையில் இவர் கொழும்பில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டு வெற்றியும் கண்டார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொண்டார். ஆனால் 21 மார்ச் 2019 அன்று, ச. வீ. மற்றும் அவரது கும்பல்,

ஜெனீவா, ஐ.நாவிற்குள் நுழைவதைத் தடை செய்தது. இப்பொழுது தமிழ் எம்.பி.க்களின் ஒவ்வொரு உரையையும் எதிர்க்குமாறு இவரை ரா.அ. பணித்துள்ளது.

ச. வீ. யாழ்ப்பாணத்தில் கடற்படையில் பணியாற்றிய வேளையில், பல அப்பாவி தமிழ் மீனவர்களை இவர் கொன்றும் , அவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை அழித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டில், விடுதலைப் புலிக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான சமாதான முன்னெடுப்பின் வேளையில் ‘அமைதிக்கு எதிரான நபராக’ ச. வீ. அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பு படையினரில் ஒருவர்.

2015 இல் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட வேளையில் அதை எதிர்த்து வாக்களித்த ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றத்தில் தேசிய கீதம் தமிழில் பாடுவதை எதிர்த்தவரும் இவ் ச. வீ. இவர் சிங்கள பௌத்த பேரினவாதிகளில் முக்கியமான ஒருவர் என்பது இங்கு நிரூபணமாகிறது.

இவரது சகோதரர் ஆனந்த வீரசேகார இராணுவத்தில் கடமையாற்றியவர். அவர் தற்பொழுது புத்தங்கலா ஆனந்தா என்ற பெயருடன் பௌத்த துறவியாக விளங்குகிறார். இவர் இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில், தெற்கில் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஆனந்தா வீரசேகர மார்க்சிச மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) உறுப்பினர்களை சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் 1989 இல் ஒரு பிரிகேடியராக கடமையாற்றிய வேளையில, இவருடன் மேலும் இரண்டு இராணுவ சார்ஜென்ட்கள் ஒரு தடுப்பு முகாமை நடத்துவதாகவும், அங்கு ஜே.வி.பி உறுப்பினர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனரெனவும், இவற்றில் ஆனந்தா வீரசேகர முக்கிய பங்கு வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, 1988 க்கு 1990 க்கும் இடையில் 60,000க்கு மேல் கொல்லப்பட்டும் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கையென மதிப்பிட்டுள்ளது.

முக்கிய சர்ச்கை என்னவெனில், இந்தியா இன்று வரை கொழும்பில் யூலை 1987ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான கொலை முயற்சி பற்றி ஒழுங்காக ஆராய முடியாதுள்ளது. இவ்விசாரணையை இந்தியா ஒழுங்காக முன்னெடுக்குமானால், இன்றைய ரா. அரசின் ராஜங்க அமைச்சர் ஒருவரது ராஜீவ் காந்தி மீதான கொலை முயற்சியின் பின்ணனிகளை கண்டறிய முடியும்.

மே 2009ன் போரின் முடிவில், இலங்கை இராணுவத்தின் பொறுப்பாளராக கடமையாற்றிய சரத் பொன்சேகா போர்க்குற்றங்கள் நடந்ததாக ஒப்புக்கொள்வதுடன், அது முறையாக விசாரிக்கப்பட வேண்டுமென கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், சிங்கள பௌத்த பேரினவாதியான சரத் வீரசேகர, ‘இலங்கையில் போர்க்குற்றங்கள் ஏதும் நடைபெறவில்லையென கூறுவது’ ச. வீ. முழு புசனிக்காயை சோற்றில் மறைப்பது நிருபனமாகிறது.

மிக கொடூரமாக கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்கள்

இன்றைய ரா.அ.சில் அங்கம் வகிக்கும் சிலர், 1980ன் இறுதியில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகளை மிகவும் கொடூரமாக கொன்று வீதிகளில் எரித்தனர் என்பது சரித்திரம். அவ்வேளையில் சிங்கள புரட்சியாளரான றோகன விஜயவீராவை கைது செய்து மிகவும் கொடூரமாக கொன்றனர். ஆனால் இன்று வரை தெற்கின் அன்றைய இன்றைய அரசியல்வாதிகள் ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட யாரும் ஓர் சுதந்திரமான விசாரணையை வேண்டியிருந்தது கிடையாது.

இப்படியானவர்களிடம், வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் உட்பட, நடைபெற்ற கொலைகள் காணாமல் போனவற்றுக்கு இவர்களிடம் நாம் நீதி கேட்டு நிற்பது என்பதில் எந்தவித பிரயோசனமும் கிடையாது. ஆகையால் தான் சுதந்திரமான சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கிறோம்.

முன்னாள் நீதிபதியும், வடமாகாணத்தின் முதலமைச்சராகிய விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை உணர்ச்சிவசப்பட்டு பார்க்கும் சில கல்வி அறிவற்ற தெற்கின் அரசியல்வாதிகள், - எஸ். டபிள்யு. ஆர். டீ. பண்டாரநாயக்க மாநில சபையில் 1944ம் ஆண்டும்.

கலாநிதி என். ஏம் பெரேரா பாராளுமன்றத்தில் 1959ம் ஆண்டும் தமிழரின் சரித்திரம் பற்றி ஆற்றிய உரைகளை ஆய்வு செய்து பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள். அத்துடன் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்தினவினால், தமிழர் சரித்திரம் பற்றி விவாதிக்க முன்னொழியப்பட்ட சவாலையும் எதிர்கொள்ள தயாராக முன்வர வேண்டும்.

பண்டாரநாயக்க கலாநிதி என். ஏம் பெரேரா ஆகியோர் உரைகளை ஆற்றிய வேளையில் முன்னாள் இராணுதளபதி சரத் பொன்சேகா அவ்வேளையில் கடமையில் இல்லாதது இவர்கள் இருவரும் செய்த பாக்கியம். இல்லையேல் சரத் பொன்சேகா இவ்விருவரையும் சுட்டு கொலை செய்திருப்பார். பலரின் பார்வையில், சரத் பொன்சேகா ரா.அ.சிடம் ஓர் நல்ல பதவியை வேண்டி நிற்கிறார் என்பதே உண்மை.

வெளிநாடுகளில் சிறிலங்காவின் கபடமான நாசகார வேலைகள்

பாரிஸ், பிரான்சில், ரா.அ. பல புலனாய்வு உத்தியோகஸ்தர்களை கடமையில் அமர்த்தியுள்ளதுடன், இவர்களுடன் டக்ளஸ் தேவனந்தா, கருணா ஆகியோரின் தமிழ் கைக்கூலிகளும் இணைந்து ஐரோப்பாவில் பல நாசகார வேலைகளை மேற்கொள்கின்றனர்.

பாரிஸில் இருந்து தான் ரா.அ.சின் ஐரோப்பிய நாடுகளிற்கான வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் மறைமுகமாக வேலைகளை மேற்கொண்டாலும், தினசரி இவர்களது கபட வேலை திட்டங்களை நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிகின்றோம்.

பாரிஸ் பிரான்ஸில் ‘போட்டோபின்’ என்ற இடத்தில் உள்ள சிறிலங்கா தூதுவரலாயத்தின் நான்காம் மாடிக்கு, தமிழ் கைகூலிகளை ரா.அ. புலனாய்வின் அதிகாரிகள், கூடுதலாக காரியாலய நேரத்தின் பின்னர் அழைத்து,மாலை வேளைகளில் சந்திப்புக்கள் நடைபெறுகின்றது. இவர்களிடம் தாம் இலக்கு வைக்கும் சிலரின் புகைப்படங்களை காண்பித்து, அவர்களது நடமாட்டங்களை கண்காணிக்குமாறு பணிக்கப்படுகின்றனர்.

ரா.அ. என்னை முடித்து கட்ட திட்டமிட்டுள்ளனர். பாரிஸில் உள்ள தமிழ் கைக்கூலிகளிடம் நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு என்னை மன்னிக்கக் கூடாது என்றும், நான் மிக அண்மையில் இந்தியா சென்று வந்தள்ளதாகவும் கூறியுள்ளனர். இவை எல்லாம் தமிழ் கைகூலிகளாக உசார்படுத்தும் கதைகளே. ஆனால் ராஜபக்சக்களின் முடித்து கட்டப்பட வேண்டியவர்களின் பட்டியலில்

மிக நீண்ட காலமாக உள்ளேன் என்பது பலருக்கு தெரிந்த விடயம். பாரிஸில் இந்த திட்டத்தின் பணியை மேற்கொள்ள இருந்தவர் மூலமாகவே ,18 ஏப்ரல் 2015 அன்று எனக்கு தகவல் கசிந்தது. இதுபற்றி எனது 27 ஏப்ரல் 2015ல் எழுதிய, “ராஜபக்சக்களுக்கு தேசிய பாதுகாப்பு என்றால் என்ன?” என்ற கட்டுரையில் விபரமாக எழுதியுள்ளேன்.

நரேந்திர மோடிக்கு நான் எழுதிய கடிதம் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வாகும். இது தீவில் எழுபது ஆண்டு கால இரத்தக்களரியை கொண்டுள்ள இன மோதலுக்கான ஒர் வலிந்து நெலிந்த தீர்வாகும்.

இந்த உலகத்திற்கு வரும் அனைவரும் இறக்க வேண்டும்" என்பது ஒரு பொதுவான கோட்பாடு. என்னை முடித்து கட்ட முன்வருபவர் யாராக இருந்தாலும், அவர்களை திட்டமிட்டு அனுப்புவதற்கு ஊந்து சக்தியாக உள்ளவர்களும் என்றோ ஒரு நாள் இறப்பார்கள் என்பது யதார்த்தம்.

நான் ‘பிரான்ஸ் குடியரசில்’ வாழ்கிறேன். அதுவும் ஜனநாயகம் மற்றும் நாகரிகமான பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் வாழ்கிறேன். இவ் நாட்டில் வாழும் மக்களின் பாதுகாப்பு கருதி - இவ் நாட்டில் நவீன பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை கொண்டுள்ளது.

தற்பொழுது பாரிஸில் பிரெஞ்சு காவல்துறையினருக்கு மேலான எண்ணிக்கையில் - ரா.அ.புலனாய்வாளர்களும், தமிழ் கூலிப்படை அங்கத்தவர்களும், பாரிஸில் கூடுதலாக லாச்சப்பல், போபினி, லாக்கூர்னேவ் ஆகிய தமிழீழ மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில், ரா.அ.ன் கட்டளைக்கு அமைய, இரவு பகலாக ரோந்து புரிகின்றனர்என்பதே உண்மை யதார்த்தம்.

ரா.அ.தவிர்ந்த வேறு யாரையும் நான் எதிரியாகக் கொண்டிருக்கவில்லை. சில தனிநபர்களுடன் சில தவறான புரிந்துணர்வு காணப்பட்டாலும், அவர்கள் எனக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தை கொள்ளமாட்டார்கள். ஆனால் எனக்கு எது என்ன வடிவில் என்ன நடந்தாலும், இதற்கு நூறு வீதம் ரா.அ. பொறுப்பாகவும், பின்ணனியில் காணப்படும் என்பதை முன் கூட்டியே யாவருக்கும் அறிய தருகிறேன்.

வடக்கு கிழக்கில் வாழும் மக்களை, குறிப்பாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை, பிரதேசங்களில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முக்கிய நோக்குடன் ரா.அ. துன்புறுத்துகிறது.

மேற்கு நாடுகளிற்கு நடைபெறும் ஆள்கடத்தலை, ரா. அரசு, மறைமுகமாக ஆதரிக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னைய காலங்களில் தற்போதைய விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ச வெளிநாடுகளிற்கு ஆள் கடத்தலில் ஈடுபட்டாரென குற்றச்சாட்டப்பட்டார்.

கேர்ணல் ஹரிஹரன்

இலங்கையில் இந்திய அமைதி படையில் (IPKF) கடமையாற்றிய கேர்ணல் ஹரிஹரன் - மிக சமீபத்தில் ஜனாதிபதி ராஜபக்ச தன்னிடம் கூறியதாக, அவர்களது சமாளிக்கும் கெஞ்சும் கதையை கூறியுள்ளார். அதாவது, “நாங்கள் 30 மைல்களுக்குள் உள்ள ஒரு குடும்பம், சீனா 2000 மைல் தொலைவில் உள்ளதாக ஓர் நண்பரென” கூறியுள்ளார்.

ராஜபக்சவின் இவ் வித்தை காட்டும் கதைக்கு கேணல் ஹரிஹரன் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. இவர்கள் இந்தியாவுக்கு எதிராக பல பாசாங்குத்தனமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை புலனாய்வின் நிபுணரான ஹரிஹரனினால் புரிந்து கொள்ள முடியவில்லையானால், வேறு யார் புரிவார்கள்? இப்படியான காரணிகளினாலேயே, இந்தியாவின் இராஜதந்திரம் மற்றும் வெளியுறவுக்கொள்கை, சிறிய சிறிலங்காவிடம் தொடர்ந்து தோல்வி காண்கிறது.

ஹரிஹரன் கருத்தில் இருந்து நான் கவனித்த விடயம் என்னவெனில், “1987 ஆம் ஆண்டில் 13 வது திருத்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் விரும்பாத பலர், இன்று அதை விரும்புகிறார்கள்” என கூறியது. ஆம், அவர் கூறுவது உண்மை.

1987 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மக்கள் இன்று உள்ள நிலை போன்ற மிகவும் மோசமான நிலையில் அன்று இல்லை என்பதுடன், அன்று தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்றதுடன், சிறிலங்காவின் பாதுகாப்பு படைக்கு சரிசமானக காணப்பட்டது என்பதை இளைபாறிய உளவுத்துறை அதிகாரியாகவுள்ள ஹரிஹரன் உணர வேண்டும்.

சர்வதேச சமூகமும் இந்தியாவும் சிறிலங்காவிற்கு வழங்கிய உதவிகளால், இலங்கைதீவில் தமிழர்களின் அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாற்றம் பெற்றது என்பதை இவர் அறியவில்லையா? சிறிலங்கா விடயங்களை நன்றாக அறிந்துள்ள ஹரிஹரன், ‘அன்று 13 ஆவது திருத்தத்தை முழுதாக ஏற்ற சிங்கள பௌத்தவதிகள் பலர், இன்று இதை எதிர்கின்றார்கள்’ என்பதை கூறுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறார்? (முற்றும்)