தமிழீழ மக்கள் எதிர்நோக்கும் அபாயங்களை முறியடிக்க முடியும்!

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை
270Shares

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியிலிருந்து 1948ம் ஆண்டு இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து வடக்கு - கிழக்கை தமது தாயகபூமியாக கொண்ட தமிழீழ மக்கள் இன்று வரை எந்த அரசியல் உரிமையையும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது.

தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் - (த.ஈ.வி.பு) மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் ஓர் நடைமுறை அரசை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நிர்வகித்த வேளையில் தமிழீழ மக்கள் இலங்கை அரசுகளின் அடக்குமுறையிலிருந்து விடுபட்டு சில காலம் வேறுபட்ட வாழ்க்கையை அனுபவித்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

த.ஈ.வி.பு நடைமுறை அரசை நிர்வகித்த வேளையில் – சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம், சிங்கள குடியேற்றங்கள் என்பதை எந்தவொரு இலங்கை அரசுகளினாலும் வடக்கு - கிழக்கில் எண்ணிப் பார்க்க முடியவில்லை, அத்துடன் மக்கள் இரவு பகல் சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமையும் காணப்பட்டது என்பதை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏற்று கொண்டுள்ளன.

ஆனால் இலங்கை அரசு தமது வஞ்சகத்தினால் சர்வதேச நாடுகளின் உதவியுடன், த.ஈ.வி.பு நடைமுறை அரசை நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று தமிழர்களின் தாயகபூமியான வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் நிலைமைகள் தலைகீழக்கப்பட்டு அங்கு வாழும் மக்கள் பீதி, கைது, கொலை, சித்திரவதை என்பதுடன் தமது சொத்துக்கள் நிலப்பரப்புக்களை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியாக அங்குலமாக, அடியாக, யாராக சதுர மைல்களாக இழந்து கொண்டு வாழ்கின்றனர் என்பதை நாம் யாவரும் கண்முன்னே காண்கிறோம்.

இவற்றை அன்று ஆயுதபோராட்டம் மூலம் வென்று தடுத்தது போல் இன்றைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் பத்து - பன்னிரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினார்களால் மேடை பேச்சுகளை தவிர்ந்து வேறு ஒன்றையும் வென்றெடுக்க முடியாது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினால், ஏதும் இலங்கையின் நாடாளுமன்றத்தில் வென்றெடுக்க முடியுமனால், நாம் ஏழு தசாப்தங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆகையால் நாம் யாதார்த்தின் அடிப்படையில், நடைமுறைக்கு சாத்வீகமான முறைகளை சிந்தித்து திட்டமிட்டு செயல்படவேண்டும். நாம் தற்போதைய எமது அரசியல் நிலைமைகளை அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் நாம் எமது இனத்தின் முடிவுக்கு வித்திடுவதோடு, சிங்கள அரசின் செயல் திட்டத்திற்கு துணை போகிறோம் என்பதே உண்மை.

என்ன நடந்தது - நடக்கிறது?

இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து தமிழீழ மக்களிடையே மாறுபட்ட இன துரோகிகளை தினமும் நாம் காணுகிறோம். அன்றும் இன்றும் என்றும் தமிழீழ மக்கள் யாவரும் ஒன்று திரண்டு பௌத்த சிங்கள அரசிற்கு அழுத்தங்களை கொடுத்திருந்தால் இன்று தமிழீழ மக்களின் நிலை வேறாகியிருக்கும்.

துரோகிகள் பணத்திற்கு ஆமாம் போடும் கூட்டம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆகையால் இவர்களிடமிருந்து தமிழர் தாயகபூமியும் தமிழ் மக்களும் எந்த நன்மைகளையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால் எம்மினத்தை காப்பாற்றி தலைநிமிர வைக்க முடியாத அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லையானலும், நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து நாடாளுமன்ற அங்கத்தவர்களாகின்றனர்.

தமிழ் செயற்பாட்டாளர்கள் எனப்படுவோரும், தனிமனிதர்களும் தமிழினத்தின் உண்மையான உரிமைகளில் அக்கறை கொள்ளாது, தமது பெயர் புகழ் , கீர்த்தி என தம்பட்டம் அடிப்பதுடன் மற்றைய செயற்பாட்டாளர்களிற்கு கிண்டல் செய்வதும் கரிபூசி ஒதுக்க முனைவதில் பாண்டித்தியம் பெற்றுள்ளார்கள்.

இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே போவதை தவிர ஏதும் உருப்படியாக தமிழீழ மக்களிற்கு கடந்த ஏழு தசாப்தங்களிற்கு மேலாக நடந்தேறியது என்ற சரித்திரமே கிடையாது.

இவ்வகையான கைங்கரியங்களினால் எமது தாயகபூமியான வடக்கு - கிழக்கு இன்று பௌத்த சிங்கள அரசுகளினால் சிங்கள குடியேற்றம்,சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம் ஆகியவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இன்று எமது இனத்தின் பரிதாப நிலையை உண்மையில் உணருபவர்கள் யார்? எமது இனத்தை அழிவு பாதையில் இட்டுச் செல்லும் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள்,ஒரு சில தனிமனிதர்களால் நிச்சயம் வெற்றி கொள்ள முடியாது. ஆனால் பல சோதனைகள் பல பரீட்சைகள் அர்பணிப்புக்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள எமது வீரமிக்க மக்களினால் நிச்சயம் வெற்றி கொள்ள முடியும்.

எதிர்வரும் இலங்கையின் புதிய அரசியல் திருத்தச் சட்டத்தில் தமிழர்களிற்கு ஏதாவது அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு ஈழத்தமிழனிற்கு இருக்குமாக இருந்தால் இவர்களை போன்று மிலேச்சர்கள் இருக்க முடியாது.

ஆகையால் மேற்கூறிப்பிடப்பட்ட விடயங்கள் சம்பவங்கள் அனுபவங்களின் அடிப்படையில் நாம் என்ன செய்ய முடியுமென்பதை நாம் மிக ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாம் இன்னும் எமது எதிர்காலத்தில் செய்யும் ஒவ்வொரு தவறும் எமது இனத்தின் அழிவிற்கு வழிகோலும், வழிகோலுகிறது என்பதை எமது மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.

ஈரானியப் புரட்சி

இன்று வரை எத்தனை ஈழத்தமிழர்கள் 1978ம் ஆண்டு ஈரான் நாட்டில் வெற்றிகரமாக இடம்பெற்ற ஆயுதம் ஏதுவும் அற்று சாத்வீகம் என்ற பதம் பாவிக்கப்பதற்கு பதிலாக இஸ்லாமிய புரட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட புரட்சி பற்றி விபரமாக அறிந்துள்ளார்கள்?

ஈரானில் இடம்பெற்ற இப் புரட்சியை நேரில் பார்வையிட்ட ஒரு சில வெளிநாட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு மிக பெருமையுடன் கூறிகொள்ள விரும்புகிறேன். ஈரானில் பல மொழிகளில் பத்திரிகைகள் வெளியிடும் மிகவும் பிரபல்யமான நிறுவனம் ஒன்றில் அன்று நான் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வேலை செய்தேன்.

இவ் அடிப்படையில் ஈரானின் நடைபெற்ற மக்கள் புரட்சியின் பல விடயங்களை, அவ்வேளையில் உடனுக்கு உடன் எனது இளம் வயதில் அறிய கூடிய வாய்ப்பை பெற்றிருந்தேன். இன்றும் இந் நிறுவனம் ஈரானிய மக்களிற்கு தொடர்ந்து சேவையாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய புரட்சி பற்றி மிக சுருக்கமாக கூறுவதனால் ஈரானிய மக்கள் மிக துணிச்சலாக எந்தவித ஆயுதமும் அற்று நிராயுதபாணியாக பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமும் அற்ற நிலையில் அவ்வேளையில் நவீன ஆயுதங்கள் தரித்து தெருக்களில் நடமாடிய ஈரானிய இராணுவத்தையும் மற்றைய அரச படைகளைகளின் மிரட்டல்களுக்கு பீதி கொள்ளாது, தமது இலக்ககை நோக்கி வெற்றி கண்டனர்.

நாம் என்ன செய்ய முடியும் ?

இவ் வேளையில் எனது கேள்வி என்னவெனில் திரைமறைவில் மார்பு தட்டும் ஈழத்தமிழர்களாகிய நாம் ஈரானிய மக்கள் புரட்சி போன்ற ஒன்றை எதிர்கொண்டு நடைமுறைபடுத்தாது எதற்காக பின் நிற்கிறோம்? பல வருடங்களாக மன்னர் ஆட்சிக்கு எதிராக கோதித்து கொண்டிருந்த மக்களிற்கு அவ்வேளையிலிருந்த ஈரானிய அரசியல்வாதிகள் மன்னருடன் இணக்க அரசியலே நடத்தி கொண்டிருந்தார்கள்.

இதை பொறுக்க முடியாத மக்கள் படிப்படியாக தமது ஆயுதமற்ற புரட்சியை ஆரம்பித்து உச்ச கட்டத்துக்கு கொண்டு செல்லும் வேளையில் அன்றைய இஸ்லாமிய மததலைவர்களும், ஒரு சில அரசியல்வாதிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் புரட்சிக்கு உரம் ஊட்டிய வேளையில் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரானிய மக்களும் புரட்சி வெற்றியடைவதற்கு உதவினர்கள் என்பதே சுருக்கமான சரித்திரம்.

ஆகையால் இலங்கைத்தீவை பொறுத்தவரையில் வடக்கு - கிழக்கு வாழ் மக்களின் ஆயுதமற்ற புரட்சி வெடிக்க வேண்டும். காணமல் போனோர் விடயத்தில் இம்மாதிரியாக ஒன்று நடைபெறுகிறது என்பது உண்மை. ஆனால் அது காணமல் போனோர் பற்றிய விடயம் மட்டுமே.

ஆகையால் நாம் எவ்வளவு விரைவாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளை நோக்கி – ஊர்வலங்கள் நடத்தி மனுக்கள் கொடுப்பதுடன் மட்டும் நில்லாது பொதுகூட்டங்கள்,கதவடைப்புக்கள்,ஹர்த்தால்கள் அரசுடன் ஒத்துடையாமை போன்ற விடயங்கள் உடன் ஆரம்பிக்க வேண்டும். இது ஆரம்பமாவதிலிருந்து தான் உலகத்தின் பார்வை மீண்டும் எமது பக்கம் திருப்ப முடியும்.

புதிய அரசியல் யாப்பு

நாம் இவ் விடயத்தில் காலம் கடத்தும் வேளையில் பௌத்த - சிங்கள அரசு தமது புதிய அரசியல் யாப்பில் - தமிழ் மக்கள் ஒர் தேசிய இனம் அல்லவடக்கு கிழக்கு பிரதேசங்கள் பௌத்த சிங்கள மக்களின் சரித்திர ரீதியான பிரதேசங்கள் இலங்கை வின் பிரஜைகள் முழு இலங்கை வில் தாம் விரும்பி பிரதேசங்கள், ஊர்கள், மாகாணங்களில் வாழ்வதற்கு வார்தகம், தொழில்,விவாசயம், கடல் தொழில் போன்றவை செய்வதற்கு உரிமையுடையவர்கள் போன்ற விடயங்களை புதிய அரசியல் யாப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாம் வழமைபோல் காலம் கடத்தி உணர்ச்சி வசப்பட்டு வீதிகளில் இறக்குவதுடன் வெளிநாடுகளில் கூட்டங்கள் போடுவதிலும் சுவரொட்டி ஒட்டுவதில் எந்த பிரயோசனமுமில்லை.

இன்று வரையில் கோட்டாபாய அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்குமுறைகளை எண்ணிப்பாருங்கள் - வழமையாக அனுஷ்டிக்கப்பட்ட திலீபனின் நினைவு தினத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அடுத்து காணி இல்லாதோருக்கு காணி கொடுப்பது என்பது மிக கபடமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் வடக்கு - கிழக்கில் சிங்கள இளைஞர்கள் சட்டரீதியாக குடியேற்றப்படவுள்ளார்கள். மக்கள் மாவீரர்களது தினம் கொண்டாட முடியாது

தடைவிதிக்கப்பட்டுள்ளது போன்ற பல அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டுளளோம். பௌத்தமதம் சார்ந்த ஆய்வுகளை தனி சிங்கள பௌத்தர்களை உள்ளடக்கிய குழுவோன்று ஆய்வு செய்வதன் பின்ணனி என்ன என்பதை யாவரும் அறிவோம்.

இலங்கையின் பௌத்த சிங்களத்தின் தமிழீழ விடுதலை புலிகள் மீதான நடவடிக்கைக்கு உதவியயோர் இன்று விலாசம் இல்லாது நிற்பதை யாவரும் காணக்கூடியதாகவுள்ளது. இப்படியாக சிங்கள தேசம் வெற்றிக்கு மேல் வெற்றி கொள்ளும் வேளையில், நாம் யாவரையும் நம்பி மோசம் போகிறோம் என்பதே உண்மை. இலங்கை அரசிடமிருந்து தமிழீழ மக்களிற்கு, எதிர்காலத்தில் ஏதுவித நன்மைகளோ முன்னேற்றங்களோ சிங்கள பௌத்த அரசுகளிடமிருந்து கிடைக்கும் என்பது பகற்கனவாகும்!

ஆகையால் இறுதி வரை பொறுத்திராது“வெள்ளம் வர முன் அணைகட்ட வேண்டும்”. த.ஈ.வி.பு.களினால் ஆயுத போராட்டம் மேற்கொள்ளப்பட்ட வேளையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கண்மூடித்தனமாகவும் அசட்டையாகவ காலத்தை கடத்தியவர்கள், இறுதி கட்டத்தில் தெருவுக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த பிரயோசனமும் இருக்கவில்லை.

இதே போலவே தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நடந்து கொண்டனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். ஆகையால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழீழ மக்களும் தமிழ் நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் இணைந்து இலங்கைதீவில் வடக்கு- கிழக்கு வாழ் தமிழீழ மக்களின் இருப்பை தக்க வைக்க வேண்டும்.

இறுதி நேரம் வரை பொறுத்திராது இன்றே கதவடைப்புக்கள், ஹர்த்தால்கள், அரசுடன் ஒத்துடையமை, ஊர்வலங்கள் பொதுகூட்டங்கள்,போன்ற விடயங்கள் உடன் ஆரம்பிக்க வேண்டும். “சொல் முன் செயலாக” வருமுன் காப்போனாக செயற்பட வேண்டும்.

இதேவேளை இலங்கை அரசின் புலனாய்வு பிரிவின் கபட வேலைகளிற்கு எம்மை பலியாக்காது முதுர்ச்சியுடனும் ராஜதந்திர ரீதியில் எமது வேலை திட்டங்களை முன்னர்கத்த வேண்டும். இவற்றிற்கு மிக அண்மை கால சம்பவங்கள் மிக நல் ஊதரணங்களாக காணப்படுகிறது.

ஒன்று பிரித்தானியாவில் த.ஈ.வி.பு.கள் மீதான தடை எடுக்கப்பட்டுள்ளது என கூறி இலங்கை புலனாய்வு பிரிவினரினால் ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் வண்டி இலக்க தகடுகளில் புலி சின்னத்தை இட்டு பயணிப்பது, அமெரிக்காவின் உதவி ஜனதிபதியான திருமதி கமலா ஹாரிசிற்கு மடல்கள் அறிக்கைகள் எழுதுவது, இவையாவற்றின் பின்ணனியில் இலங்கை அரசின் புலனாய்வு பிரிவினரே தமிழீழ மக்களது அரசியல் முன்னெடுப்புக்களை குழப்புவதற்காக செய்கின்றனர் என்பதை இன்றும் பலர் அறியவில்லை.