இந்திய வேளாண்மை மசோதா என்றால் என்ன அதன் பாதிப்பு என்ன?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

கடும் குளிருக்கு மத்தியில் டெல்லியில் தொடர்ச்சியாக ஒரு மாதத்தை நோக்கி இந்திய விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

ஆளும் அரசுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் நாளாந்தம் பல வடிவங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. நாளாந்தம் நாட்டின் நாலா புறங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையடுத்து வருகின்றார்கள் .

ஆளும் அரசினால் வேளாண்மை மசோதா என்னும் ஒரு மசோதாவை இந்திய நாடாளுமன்றில் கடந்த வருடம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மசோதா முழு இந்திய விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இந்த மசோதா மனித உணவுக்கு எதிரான மசோதா என்றும் விவசாயிகள் தரப்பால் சொல்லப்படுகின்றது .

ஆனால் அரசாங்கமோ விவசாயிகளுக்கு நலவு திட்டம் என்றும் மசோதாவை பின்வாங்க மாட்டோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் சா மற்றும் பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்கள்.

வேளாண்மை மசோதாவினால் உள்ள பாதிப்பு என்ன?

முதலில் விவசாயிகளிடம் கம்பனிகள் ஒரு ஒப்பந்தத்தை எழுத்து மூலமாக செய்வார்கள். அதாவது நேரடியாக இத்தனை ஏக்கருக்கு என்று அந்த ஒப்பந்தம் இருக்கும் .

விவாசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் இப்படித்தான் இந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் இருக்கும் .

விவசாயிகளுக்கு விவசாயத்தை ஆரம்பிக்க கம்பனிகள் ஒரு அட்வான்ஸ் பணம் கொடுப்பார்கள். அதாவது ஒரு சிறிய தொகை பணத்தை விவசாயம் செய்வதற்காக கம்பனிகள் விவசாயிகளுக்கு கொடுக்கும்.

அறுவடை காலத்தில் விவாசாயிகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்த கம்பனிகளே பெற்றுக் கொள்ளும்.

அப்படி விவாசாயிகளின் உற்பத்திப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் போது அந்தப் பொருட்களின் மொத்தப் பெறுமதியில் இருந்து பத்து வீதமான தொகையை பணமாக விவாசாயிகளுக்கு கம்பனிகள் கொடுக்கும்.

அப்படி விவாசாயிகளின் உற்பத்திப் பொருட்களை பெற்றுக்கொண்ட கம்பனிகள் விவாசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் நல்லதா கெட்டதா தரமான உற்பத்தியா என்பதை அந்தக் கம்பனிதான் முடிவு செய்யும்.

அதற்கான காலமாக 3 மாத காலத்தை கம்பனிகள் எடுக்கும். அதாவது 3 மாதத்தின் பின்னர்தான் விவாசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் பற்றிய பெறுபேற்றை கம்பனிகள் தெரிவிப்பார்கள்.

3 மாதங்களின் பின்னர் விவாசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் தரமற்றவை என்ற குண்டை விவசாயிகளின் தலையில் கட்டப்படும்.

அப்படியானால் விவாசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் தரமற்றவை என்று கம்பனி சொல்லுமானால் ஏற்கனவே கம்பனி கொடுத்த பத்து வீதப் பணம் விவசாயிகளின் கணக்கில் கடனாக வைக்கப்படும் .

அடுத்த வருடமும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் தரமற்றவை என்று கம்பனி மீண்டும் சொல்லுமானால் ஏற்கனவே பத்து வீதப் பணத்துடன் அடுத்த போகமும் பத்து வீதப்பணம் என்று மேலும் மேலும் ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் கடனாளியாக மாறுவார்கள் .

மேலும் விவசாயிகள் கம்பனிகள் கொடுக்கும் விதைகளையே நட வேண்டும். இந்த விதைகள் என்பது கரு விதை நீக்கப்பட்ட விதைகள். இந்த விதை பொருட்களை மீண்டும் விதைக்க / பயிரிட முடியாது.

அதாவது ஒரு முறைதான் இந்த விதைகளை விதைக்க முடியும். அதனால் மீண்டும் கம்பெனிகள்தான் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கும்.

கரு விதை நீக்கப்பட்ட விதைகளுக்கு குறிப்பிட்ட நோய்கள் வரும். அப்படியான நோய்கள் வரும் போது கம்பனிகள் கொடுக்கும் கிருமி நாசினிகளையே பயன்படுத்த வேண்டும்.

கிருமி நாசினிகள் தேவைப்படும்போது வெளியில் யாரும் எந்தவொரு கிருமி நாசினிகளும் வாங்க கூடாது.

இப்படியே போகும் போது விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் தரமற்றவை என்று கம்பனி நிராகரிப்பு செய்யும் போது கடந்த வருடம் இருந்த பத்து வீதமான கடன் ஒவ்வொரு வருடமாக கடன் பாக்கி அதிகமாகி பத்து வருடங்கள் செல்லுமானால் விவசாயிகள் கம்பனிக்கு கடனாளியாக்கப்படுவார்கள் .

விவசாயிகள் கடனாளியாக்கப்பட்ட முழுத் தொகையையும் கம்பெனிக்கு செலுத்த முடியவில்லை என்றால் MOD மோர்கேஜ்ஜூக்கு முறையில் விவசாயிகளின் நிலங்கள் அடமான பத்திரத்துக்கு செல்லும்.

அதிலும் விவசாயிகளின் நிலங்களை மீட்க முடியவில்லை என்றால் தானாக விவசாயிகளின் நிலங்கள் விற்பனைக்கு செல்லும். இதற்கு எதிராக எந்த விவசாயிகளும் நீதி மன்றம் செல்ல முடியாது. விசேடமாக இந்த வேளாண்மை சட்டத்திற்கு எதிராக மாநில அரசுகள் நீதிமன்றம் செல்ல முடியாது.

வேளாண்மை மசோதா சட்டம் 13-1-7 பிரிவுகளின் படி இந்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்ற சட்டம், அடிப்படை உரிமை சட்டம், மனித உரிமை சட்டம் ஆகிய எந்த சட்டமும் செல்லாது.

இது ஒட்டுமொத்த கார்ப்பேரட்டுகளின் நலன் கருதி விவசாயிகளை நசுக்கி அவர்களின் இரத்தத்தை குடித்து விவசாயிகளை அழித்து அவர்களை மேலும் மேலும் தற்கொலைக்கு தூண்டும் சட்டமாகும். கார்ப்பேரட்டுகளின் பணம் உழைக்கும் சட்டம்.

ஒட்டுமொத்தமாக இந்த வேளாண்மை சட்டம் என்பது இந்திய உணவுகளுக்கு எதிரான ஒரு யுத்தம். சாப்பிடும் மக்களுக்கு எதிரான யுத்தம். இந்திய விவசாயிகளை அழிக்க கொண்டு வரும் சட்டம். இந்திய விவசாய அழிப்பு யுத்தம்.

தமிழ் நாட்டில் பெருமளவு மக்களின் அன்றாட தொழில் விவசாயம்.மோடியின் இந்த சட்டம் நடைமுறைக்கு வருமானால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகி முழு விவசாயக் குடும்பங்களும் தற்கொலை செய்யும் சட்டமாகும். ஆனால் இந்த சட்டத்தை விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த முதலமைச்சர் எடப்பாடி கண்டு கொள்ளவே இல்லை .

மோடி அரசின் பிஜேபியின் பிடியில் சிக்குண்டுள்ள எடப்பாடி எதுவும் செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றார். உலகில் எங்குமே இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை.

உலகில் உணவு உற்பத்தியில் முன்னணி நாடு இந்தியா!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் கார்ப்பேரட்டுகளின் தந்திரம் இந்த சட்டம். இந்த சட்டத்தை தயாரித்துக் கொடுத்தவர்கள் கார்ப்பேரட்டுகளின் முதலைகள்தான்.

அண்மையில் கார்ப்பேரட்டுகளின் முதலைகள் பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து இந்த விடயங்கள் பற்றி விரிவாக பேசிய பின்னர்தான் இந்த சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் போர் உக்கிரமடைந்து வருகின்றது.

இந்தியாவில் சாப்பிடும் மக்களுக்கு எதிரான இந்த சட்டத்தை கனடா பிரதமர் எதிர்த்துள்ளார். விவசாயிகளின் போராட்டதை ஆதரித்துள்ளார். அதனால் இந்திய – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது .

உலகில் உயிர் வாழும் மனிதர்கள் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும். உலகில் சாப்பிடும் மக்கள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

இந்த சட்டத்திற்கு எதிராக உலகில் மனிதர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

நாடு மதம் மொழி இனம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த சட்டத்துக்கு எதிராக நம்மால் முடிந்த எதிர்ப்புக்களை வெளிக்காட்ட வேண்டும்.