சர்வதேச அரசியல் போரில் அறிவிலிகளா இருக்கிறதா? ஈழத்தமிழினம்!

Report Print Samaran Samaran in கட்டுரை

சாத்வீகமாக தம் உரிமைகளுக்காக போராடிய ஈழத்தமிழினம் அப்போராட்டங்கள் ஆயுத துணை கொண்டு ஒடுக்கப்பட்ட போது ஆயுதம் தாங்கிய தற்காப்பு போராட்டமாக அதை மாற்றிக் கொண்டனர்.

ஆயதம் தாங்கிய போராட்டத்தின் வளர்ச்சி தமிழர் உரிமைப் போராட்டத்தை சர்வதேச அரசியல் போர் அரங்கிற்கு அடுத்த கட்ட நகர்விற்காக நகர்த்தியது.

சர்வதேச அரசியல் போர் அரங்கில் அங்கீகாரம் என்ற இலக்கை நோக்கிய நகர்வில் புலம்பெயர் தமிழினம் மோசமான பின்னடைவை சந்திக்க தற்காப்பு ஆயுதப் போராட்டம் என்ற வலுநிலை இழக்கப்பட்டது மட்டுமன்றி ஒரு மௌனிப்பு நிலைக்கும் அது தள்ளப்படுகின்றது.

வரலாறு எப்போதும் நல்ல ஒரு ஆசான் என்பார்கள். ஆனால் ஈழத்தமிழினத்தை பொறுத்தவரை அது ஒரு கடந்து போன மறக்கப்படவேண்டிய விடயமாகவே பல வேளைகளில் இருந்து விடுகிறது.

படிப்பினை பட்டறிவு என்பன தவிர்க்கப்படுபவையாகவே இருந்து விடுகின்றன. சமீப காலமாக பலவற்றை எழுத ஆரம்பித்து அது ஏற்படுத்தும் வலி காரணமாகவே அவற்றை பூர்த்தி செய்யாமல் விட்டிருக்கிறேன்.

எங்கு திரும்பினாலும் எங்கள் செயற்பாடுகள் வலிநிறைந்தவையாகவே இருக்கின்றன. ஆனால் அது குறித்த புரிதல் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதற்கு உதாரணமாக இங்கு ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்;கிறேன்.

மீண்டும் ஒரு ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடர் எங்கும் பேசப்படுகின்ற விடயம். ஆனால் அதன் பொறிமுறைக்குள் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயங்கள் எவ்வாறு தவறவிடப்படுகின்றன.

புதிய ஐ.நா மனித உரிமைகள் அமையம் மார்ச் 15 2006 இல் ஐ.நா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் கீழ் உருவாக்கப்பட்டது.

அதன் கீழ் ஐநாவில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளின் மனித உரிiமை நிலவரங்களை ஆய்ந்து அது குறித்த அறிக்கை ஒன்றையும் கைக்கொள்ளப் படவேண்டிய பரிந்துரைகளையும் வெளியிடும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டது.

இப்பொறிமுறையை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் வரையப்பட்டு அவை ஈற்றில் 2007இல் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின் இப்பொறிமுறை 2008 இல் அமுலுக்கு வந்தது.

இதன் பிரகாரம் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் 16 நாடுகள் ஆய்விற்கு உள்ளாக்கப்பட்டன. வருடத்திற்கு மூன்று கூட்டத் தொடர்கள் என்பதால் ஓர் ஆண்டில் 48 நாடுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

முதலாவது சுற்று 2012இல் முடிவிற்கு வர இரண்டாவது சுற்று 2013இல் ஆரம்பமானது. இரண்டாவது சுற்றில் 16 நாடுகளுக்கு பதிலாக 14 நாடுகளே ஒரு கூட்டத்தொடரில் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அதனால் ஓர் ஆண்டில் 42 நாடுகளே கவனத்தில் கொள்ளப்பட இரண்டாவது சுற்று இரண்டு மேலதிக கூட்டத்தொடர்களை எடுத்தே 2017இல் முடிவிற்கு வந்தது.

2017 இன் பிற்பகுதியில் மூன்றாவது சுற்று ஆரம்பிக்க தற்போது நாம் மூன்றாவது சுற்று நாடுகள் குறித்த மனித உரிமைகள் ஆய்வில் உள்ளோம்.

இப்போது உங்கள் மனங்களில் ஒரு கேள்வி எழும். இலங்கையின் முறை எப்போது வரும் என்பது தானே அது? இதற்கான பதில் சற்று அதிர்ச்சியாக உங்களுக்கு இருக்கலாம்.

மூன்றாவது சுற்றில் இலங்கையின் முறை தற்போது நடைபெறும் மார்ச் கூட்டத்தொடரிலேயே வந்துள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் ஆய்விற்கு உள்ளாக்கப்படும் நாடுகள் சீசெல் ஆர்ஐன்டினா கபூன் கானா பெரு குவத்தமாலா பெனின் கொரிய இராச்சியம் சுவிற்சலாந்து பாக்கிஸ்தான் சம்பியா யப்பான் ஊக்கிரேன் சிறீலங்கா ஆகிய 14 நாடுகளே ஆய்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இவை குறித்த ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு அது குறித்த விவாகம் மார்ச் 6ஆம் நாள் முதல் மார்ச் 17ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இதில் சிறீலங்கா இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

சிறீலங்காவில் மனித உரிமைகள் குறித்த ஆய்வு மீண்டும் 2023 இலேயே வரும். இன்னொரு விதத்தில் சொல்வதானால் எங்கள் அனைவருக்கும் வயது ஐந்தால் அதிகரித்திருக்கும்.

ஆனால் மனித உரிமைகள் கூட்டத்தொடர் என்றால் எப்போதும் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மட்டுமே பேசும் நாம் யுபிஆர் எனப்படும் யுனிவேசல் பீடியோற்றிக் ரிவியூ எனப்படும் இவ்முக்கிய பொறிமுறை குறித்து பேசுவதும் இல்லை கவனத்தில் கொள்வதும் இல்லை.

காலம் கடந்துவிடவில்லை தானே இப்போதும் முன்னெடுக்கலாம் தானே என நீங்கள் நினைக்கலாம். இங்கு தான் இதன் பொறிமுறை குறித்த மேலதிக அறிவு தேவைப்படுகின்றது.

இக்கூட்டத்தொடரில் இவ்ஆய்வு குறித்த இறுதி அறிக்கை சமர்பிக்கப்படுகின்றது என்றால் அதற்கான ஆய்வு என்றோ ஆரம்பித்திருக்கும்.

ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் கவனத்தில் கொள்ளப்படும் நாடுகள் முதலாவது சுற்றில் தீர்மானிக்கப்பட்ட வரிசைகிரமத்தின் பேரில் தீர்மானிக்கப்பட்டதும் அவை குறித்த குழுவின் கூட்டம் ஐந்து ஆறு மாதங்களின் முன்னரே நடைபெறும்.

இதன் பிரகாரம் இக்கூட்டத்தொடரில் கவத்தில் கொள்ளப்படும் நாடுகள் குறித்த ஆரம்ப கூட்டம் கடந்த ஆண்டு 2017 நவம்பர் 6ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை நடைபெற்றது.

இதில் சிறீலங்கா குறித்து புதன்கிழமை நவம்பர் 15ஆம் நாள் பிற்பகல் 2.30 முதல் மாலை 6 மணிவரை முன்னெடுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதேவேளை இச்செயற்பாட்டின் கண்காணிப்பாளர்களாக மனித உரிமைகள் அவையத்தில் உறுப்பு நாடுகளாக உள்ள 47 நாடுகளில் இருந்து மூன்று நாடுகள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

சிறீலங்கா விடயத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட நாடுகள் புருண்டி கொரிய இராச்சியம் மற்றும் வெனிசூலா ஆகும். இந்தக் காலப்பகுதியில் ஆய்விற்கு உள்ளாகும் நாடு எனைய நாடுகள் மனித உரிமை அமைப்புக்கள் தன்ஆர்வ தொண்டர் நிறுவனங்கள் என பலரும் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.

அதேவேளை இதற்கான தமது அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக மனித உரிமைகள் அவையத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் அதாவது ஸ்பெசல் ரப்பட்டோஸ் என அழைக்கப்படுவோரும் நேரடியாக சிறீலங்கா சென்று தமது விவகாரங்கள் குறித்த நேரடி ஆய்வுகளை செய்து வருவர்.

கடந்த ஆண்டில் இவ்வாறான பலர் சென்று காட்டமான அறிக்கைகளை வெளியிட்டதும் உங்கள் நினைவில் இருக்கலாம்.

இங்கு தான் பெரும் கேள்வி ஒன்று எம்முன் எழுகின்றது. இந்த இறுதி அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகமாக உள்ள ஈழத்தமிழினம் என்னத்தை செய்தது. தாயக அரசியல் வாதிகளை ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால் அவர்கள் தங்கள் இருக்கையை காப்பதற்கான உள்ளுராட்சித் தேர்தலில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.

இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கு நேரமிருந்தது. புலத்தில் கடை பரப்பியிருக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என்ன செய்தன என்று கேட்டால் ஒருபகுதியினர் கூட்டமைப்பு சொல்வதையே செய்வோம் சொல்லவில்லை அதனால் செய்யவில்லை என்பார்கள்.

மறு தரப்பினரோ 2020இல் சர்வன வாக்கெடுப்பில் பிசி என்பார்கள். இப்போது புரிகிறதா 2009இல் ஈழத்தமிழினத்தின் பெரு வலுநிலை ஏன் இழக்கப்பட்டது என்று. நாம் புலம்பெயர்ந்திருக்கின்றோமே அன்றி எம் சிந்தனை இன்றும் மதவடி புளியடியில் தான் இருக்கிறது.

இவ்விடயத்தில் பல பஸ்களை ஏற்கனவே தவறவிட்டாலும் தற்போதும் ஒரு பணி இருக்கிறது. அடுத்த வாரம் சிறீலங்கா விவாதத்திற்கு வரும் போது அதில் காட்டமான கருத்துக்களை நாம் வாழும் நாடு சார்பில் வைப்பிற்கு வாழும் நாட்டின் வெளிவிவகாரத்துறையை நாடி எம் பணியை நாம் உடன் முன்னெடுக்கலாம் அவை உடனடியாக கருத்து வைப்பதற்கு தம்மை பதிந்தாக வேண்டும்.

சிறீலங்கா விரைந்து செயற்பட்டால் தனது ஆதரவு அணி நாடுகளைபதிவித்து தப்பிக் கொள்ளலாம். இது அனைவரும் சேர்ந்து இயங்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு. இதற்கான பார்வையும் அதற்கான தலைமைத்துவமும் அற்றிருப்பது தான் எம் அவலநிலை.

இன்று எமது சமூகத்தில் நன்கு படித்தவர்கள் படித்த இளையவர்கள் தாயகத்தில் சிவில் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர் சமூகம் அனைவரிடமும் ஒரு சவாலாக வைக்கிறேன் நீங்களாவது உங்கள் இனத்திற்காக ஏதாவது செய்யுங்களேன்.

ஆனால் பாருங்களேன் வரும் நாட்களில் உலகெங்கிலும் இருந்து nஐனிவாவிற்கு நம்மவர்கள் படைபெடுத்து வருவார்கள் படம் எடுப்பார்கள் வெளியில் இருந்து செவ்வி வழங்குவார்கள் ஒரு தமிழன் இன்னொரு தமிழனை போட்டுத் தள்ளுவான்.

தாம் தான் சாதித்து விட்டதாக மார்பு தட்டி முரசறைவார்கள். நாமும் மந்தைகளாக ஆர்ப்பரித்து மகிழ்வோம். தமிழீழ தேசியத் தலைமை வேதனையுடன் சொல்வார்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் என்ன கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று கேட்பேன். உடனே சொக்கிலேட் கொண்டு வந்திருக்கிறேன் சேட் கொண்டு வந்திருக்கின்றேன் அது தான் தன் நாட்டில் சிறப்பு என்பார்கள். இவர்கள் கொண்டு