ராஜயோகத்தை அடையக்கூடிய ராசிக்காரர்கள் இவர்களா? ஆனாலும் தனுசு ராசிக்காரர்களுக்கு...

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

11-10-2020 ஆம் திகதியான இன்று புரட்டாசி 25, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 05.54 வரை பின்பு தேய்பிறை தசமி. பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.18 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம்

சந்திரன் இன்றையதினமும் கடக ராசிக்குள்ளே இருப்பதால் அந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்திலும், உத்தியோகத்திலும் குழப்பங்கள் வந்து சேருவதுடன் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும் நாள்.

இதேவேளை தனுசு ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இன்று அவர்களுக்கு வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். இன்று அவர்களுக்கு அலைச்சலுடன் ஆதாயம் தரும்நாள்.

அதேபோல கன்னி ராசிக்காரர்கள் ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள்உத்தியோகத்தில் சிலபுதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய சிறப்பான நாள் இதுவாகும்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்