பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Report Print Vino in அவுஸ்திரேலியா
93Shares

பப்புவா நியூ கினியாவில் உள்ள ராபவுல் பகுதியில் இன்று காலை 6.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நியூ பிரிட்டன் தீவில் இருந்து வடகிழக்கே சுமார் 89 கிலோமீட்டர் தூரத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கமானது, பப்புவா நியூ கினியாவின் ராபவுல் நகரத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், பசுபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இதவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 200 க்கும் அதிகமானவர்கள் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments