நச்சு வாயு தாக்கம்..! அவுஸ்திரேலிய மக்களுக்கு ஒரு எச்சரிக்கை..!

Report Print Vino in அவுஸ்திரேலியா
203Shares

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிலவும் சூடான வானிலை காரணமாக வளிமண்டலத்தில் நச்சு ஓசோன் வாயுவின் அளவு அதிகரித்திருப்பதால் சுவாசம் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களின் புகை மற்றும் குளிரூட்டிகளிலிருந்து வெளியிடப்படும் (nitrogen oxides) வளிமண்டலத்திலுள்ள ஒட்சிசனுடன் சேர்வதால் உருவாகும் நச்சு வாயு, காற்று வீசும் போது அடித்துச் செல்லப்பட்டுவிடும்.

ஆனால் தற்போது காற்று வீசாமல் வரட்சியான வானிலை காணப்படுவதால் இவ்வாயு, ஆஸ்துமா போன்ற சுவாச நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை உண்டுபண்ணலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக சிட்னியின் மேற்குப் பகுதிகளில் நச்சு ஓசோன் வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சு ஓசோன் வாயுவைச் சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்படலாம் என்பதுடன் நெஞ்சுவலி, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்டவையும் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments