வெளிநாட்டில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்து காணொளி வெளியிட்ட இலங்கையர் கைது

Report Print Steephen Steephen in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் 62 வயதான இலங்கையர் ஒருவர் அந்நாட்டை சேர்ந்த நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கென்பரா நகரில் வரும் இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுனில் பட்டகொட என்ற இந்த நபர் ஒருவருடத்திற்கு முன்னர் கென்பரா நகரில் பஸ் நிலையம் ஒன்றில் பாடசாலை செல்லும் 14 முதல் 15 வயதான சிறுமிகளுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

சிறுமிகளுக்கு பணம் மற்றும் பரிசுகளை கொண்டு அவ்வப்போது தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு மதுபானம் மற்றும் கஞ்சா போன்றவற்றை கொடுத்து போதை ஏறிய பின்னர், சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். பல முறை இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோ செய்துள்ளார். அண்மையில் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை முகநுலில் பகிரும் போது, சிறுமி ஒருவரின் தந்தை. தனது மகளும் வயோதிப நபரும் இருப்பதை அடையாளம் கண்டுள்ளார்.

இதனையடுத்து மகளிடம் விசாரித்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் பொலிஸார் இலங்கை நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான சுனில் பட்டகொடவின் வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது அவர் நான்கு சிறுமிகளை பல முறை துஷ்பிரயோகம் செய்யும் விதம் தொடர்பான வீடியோ சாட்சியங்களை கைப்பற்றியதாக கென்பரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுனில் பட்டகொட என்ற இந்த சந்தேக நபர் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் இந்த நபருக்கு வழங்கும் தண்டனை முடிவு செய்யப்படும் என தெரியவருகிறது.

Latest Offers