முதலாம் உலகப்போரில் திடீரென மாயமான கடற்படைக் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு

Report Print Nivetha in அவுஸ்திரேலியா
116Shares

முதலாம் உலகப்போரின் போது திடீரென மாயமான அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலின்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

103 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பலின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூ கினியாவின் பார்க் தீவுகள் பகுதியில் உள்ள கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான HMAS AE-1 என்ற நீர்மூழ்கிக் கப்பல் 1914 ஆம் ஆண்டு திடீர் என்று காணாமல் போயுள்ளது.

கப்பலைத் தேடும் பணிகள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், நீருக்குள் மூழ்கித் தேடும் 'டிரோன்' பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்களை நீர்மூழ்கி வீரர் குழுக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கப்பலில், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் கடற்படை வீரர்கள் 35 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.