மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை மரணச்சடங்கிற்கு அழைத்த தந்தை!

Report Print Thayalan Thayalan in அவுஸ்திரேலியா

மாடல் சிறுமியான ஏமி எவரெட் என்ற 14-வயது பெண் தற்கொலை செய்து இறந்து விட்டாள். இவளை சிலர் கொடுமைப்படுத்தியது தாங்காத இப்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாள்.

மகளின் மரணத்தால் துயருற்ற தந்தை தனது மகளை கொடுமைப்படுத்தியவர்களை அவளது மரணச்சடங்கில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

எத்தகைய கொடூரத்தை தனது மகளிற்கு செய்துள்ளனர் என்பதை வந்து காணுமாறு தெரிவித்துள்ளார்.

இப்பெண் அவுஸ்ரேலியாவில் மிக பிரபல்யமான மாடல் ஆவாள். கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டாள்.

இவளது மரணத்தை ஞாயிற்றுகிழமை முகநூலில் பதிவு செய்த தந்தை ரிக் எவரெட் கேலி செய்து கொடுமைப்படுத்தியமை தனது மகள் அவளது வாழக்கையை முடித்துக்கொள்வதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்வது கோழைத்தனம் என கருதிய தந்தை தனது மகள் மிகவும் வலுவானவள் என நம்பியிருந்தார். அவளது வல்லமையே அவளை இந்த தீய உலகின் கொடுமையில் இருந்து தப்ப தூண்டியுள்ளதெனவும் பதிவில் தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.

தனது மகள் எதிர்நோக்கிய கொடுமைப்படுத்தல் குறித்த விபரங்களை அவர் வெளியிடவில்லை. ஆனால் அண்மைய சம்பவங்கள் சரியாக எப்படி சமூக ஊடகங்கள் உபயோகப்படுத்தப்பட கூடாதென தெரியப்படுத்தியுள்ளதென கூறியுள்ளார்.

தன்மகளை துன்புறுத்தியவர்களிற்கும் செய்தி ஒன்றை முன் வைத்தார்.

தற்செயலாக இச்செயல் ஒரு கேலி செயல் எனவும் இவ்வாறு செய்வதால் தங்களை ஒரு உயர்ந்தவர்கள் என கருதினால் இந்த பதிவை பார்த்து தனது மகளின் மரணச்சடங்கில் வந்து எத்தகைய கொடுமையை செய்துள்ளீர்கள் என கண்டு கொள்ளுமாறும் எழுதியுள்ளார்.

இச்செய்தியின் பின்னர் மக்கள் கொடுமை படுத்துவதை தடுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இணையத்தள கொடுமைப்படுத்தல் கனடாவிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2014-ல் 15 முதல் 29வயதிற்குட்ட இணையத்தளத்தை உபயோகிக்கும் 17-சதவிகிதமானவர்கள் இணைய மிரட்டல் அல்லது இணைய பின்தொடர்தல்களிற்கு ஆளாகியுள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் தெரிவித்துள்ளது.

இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் கனடியர்கள் உடனடியாக 911அழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.