வெளிநாட்டிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா
224Shares

அவுஸ்திரேலியாவில் இருந்து 18 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலிய சென்று 18 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இலங்கையர்களில் ஒருவருக்கு இரண்டு பேர் என்ற கணக்கில், அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் 36 பேர் இந்த விமானத்தில் வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

A- 319 எயார் பஸ் மூலம் 160 பேர் பயணிக்க கூடிய பாரிய விமானம் ஒன்றை இந்த இலங்கையர்களுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் பப்புவா நியூகினியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.